சிகரம் பாரதி 28/06/2018

வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். 

சிறுகதை 




நான் வாசித்த ஒரு சிறுகதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 'குட்டிப்பெட்டி' என்னும் வலைத்தளத்தில் வெளியான 'ஆணுறை' என்னும் சிறுகதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டியதொரு சிறுகதை ஆகும். பதின்மவயதுகளில் பாலுணர்வு அதிகம் தூண்டப்படுவது இயற்கை. பெற்றோர்கள் அதனை எப்படிக் கையாள வேண்டும், பெண்கள் அதனை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இச்சிறுகதை. உங்கள் பின்னூட்டங்களையும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். 

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 




உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வரவுள்ளன. எச் பிரிவில் (H) ஜப்பான் எதிர் போலந்து மற்றும் செனகல் எதிர் கொலம்பியா அணிகளுக்கிடையான போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும் ஜி பிரிவில் (G) பனாமா எதிர் துனிசியா மற்றும் இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

இந்திய அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம் 


இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட இ-20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களைப் பெற்றது. ரோஹித் சர்மா 97 ஓட்டங்களையும் ஷிகார் தவான் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பதிலளித்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 76 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. 

விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகும் 


விவசாயிகளின் வருமானத்தை 2022இல் இருமடங்காக்குவோம் எனப் பேசி வருகிறார் மோடி. மறுபுறம் அபிவிருத்தி என்ற பெயரில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து விகடன் வெளியிட்டிருந்த கார்ட்டூன் இது. 



சிகரம் வலைத்தள தரவரிசை: 


'சிகரம்' இணையத்தளம் 01.07.2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 04/01/2018 அன்று அலெக்ஸா இணையத்தள தரவரிசை முதன்முதலில் கிடைக்கப்பெற்றது. 12,513,407 ஆவது இடத்தில் உலக அளவில் 'சிகரம்' இணையத்தளம் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களாக 'சிகரம்' இணையத்தளம் செயல்படாமல் இருந்த காரணத்தால் தற்போது 'சிகரம்' இணையத்தளம் தரவரிசைப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. 



கடந்த 09.02.2018 அன்று கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களை தமிழ் மொழி இணையத்தளங்களுக்கும் வழங்குவதாக கூகிள் அறிவித்தது. ஆனால் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர கணக்கு அனுமதி 'சிகரம்' இணையத்தளத்துக்கு கிடைக்கப்பெறாமையினால் இணையத்தள செயல்பாடுகளை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. அதேநேரம் 07.03.2018 அன்று 'சிகரம் பாரதி' வலைத்தளத்துக்கு கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர அனுமதி கிடைக்கப்பெற்றது. ஆகவே அன்றைய தினம் முதல் 'சிகரம்' இணையத்தள செயல்பாடுகளை இடைநிறுத்தி 'சிகரம் பாரதி' வலைத்தளத்தை தொடர்ந்து செயற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. 

இன்னும் ஓரிரு மாதங்களில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர அனுமதியை 'சிகரம்' இணையத்தளத்துக்கும் பெற்றுக்கொண்டு இணையத்தளத்தை சிறப்புடன் மீண்டும் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எதிர்பாராதவிதமாக இன்று 'சிகரம் பாரதி' வலைத்தளத்துக்கு அலெக்ஸா தரவரிசை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உலக அளவில் 4,234,627 ஆவது இடத்திலும் இந்தியாவில் 174,846 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இதனை சாத்தியப்படுத்த உதவிய அனைத்து நண்பர்களுக்கும் 'சிகரம் பாரதி' வலைத்தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்? 


இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 



வாக்களிப்பு முழு விவரம் இங்கே: 


'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிகரத்தில் வாக்களிக்க: 


இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம். 

உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க: 


வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!!

#சிகரம்பாரதி #செய்திமடல் #சிறுகதை #பாலியல்கல்வி #பீபாஉலககிண்ணம் #கிரிக்கெட் #பிக்பாஸ் #SigaramBharathi #NewsLetter #ShortStory #SexEducation #FIFAWorldCup #Cricket #BiggBoss #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!