பிக் பாஸ் தமிழ் 02 | நாள் 04 | வெங்காயம் உரிக்கலாமா?
மூன்றாம் நாள்
நேரம் நள்ளிரவு 01.00
வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன. நித்யா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். தலைவி ஜனனி நித்யாவிடம் 'மைக்கை மாட்டுங்கள். சாப்பிடும் போது கூட மைக்கை போட்டிருக்க வேண்டும்' என அறிவுறுத்துகிறார்.
நான்காம் நாள்
காலை 08.00
'ஒரு குச்சி ஒரு குல்பி வந்து நின்னு எடு செல்பி' என்ற பாட்டுடன் நான்காம் நாள் பொழுது விடிகிறது. போட்டியாளர்கள் ஆங்காங்கே ஆடுகின்றனர்.
காலை சமையல் நடக்கிறது. நித்யா மீண்டும் மும்தாஜிடம் ஏழைரையை இழுக்க மும்தாஜ் வேண்டாமென்று ஒதுங்கி விடுகிறார்.
காலை 09.15
ஐஸ்வர்யா பிக் பாஸிடம் சிக்கன் வேண்டும் என்று கேட்கிறார்.
காலை 10.00
மஹத்தும் நித்யாவும் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கின்றனர். பாலாஜியும் அவ்விடத்தில் நின்று கொண்டிருக்கிறார். மும்தாஜ் அணிலுக்கும் காக்கைக்கும் முற்றத்தில் உள்ள ஒளிப்படக் கருவியின் மேல் சப்பாத்தி வைக்கிறார்.
நித்யா இதய வடிவில் சப்பாத்தி ஒன்று சுடுகிறார். ஐஸ்வர்யாவுக்காம்!
காலை 11.15
வைஷ்ணவி டேனியை பொய்யாக அழுது ஏமாற்றுகிறார். பல போட்டியாளர்கள் உடன் இருக்கின்றனர்.
காலை 11.45
ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் சென்ட்ராயனை விரட்டி விரட்டி கலாய்க்கின்றனர். இருவரும் அவரைக் கட்டிப்பிடிக்க முயல அவர் கூச்சப்பட்டு ஓடுகிறார்.
மதியம் 12.15
இந்தவார Luxury Budget க்கான அடுத்த போட்டி ஆரம்பமானது. இது மூன்றாவது போட்டி. போட்டியின் பெயர் 'இவர் யாரென்று தெரிகிறதா?'. போட்டியாளர்கள் A, B என இரு அணிகளாகப் பிரிய வேண்டும். ஒரு அணிக்கு ஏழு பேர். ஒருவர் தலைவி ஜனனிக்கு உதவியாக இருக்க வேண்டும். இரு அணியினரும் தனித்தனியாக தன் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும். எல்லோரும் எழுதி முடித்ததும் வரவேற்பறையில் உள்ள பெட்டியில் அவற்றைப் போட வேண்டும். பின்னர் ஒரு அணி மற்றைய அணி எழுதியவற்றைப் படித்துப் பார்த்து அவற்றை யார் எழுதியது என்று சொல்ல வேண்டும்.
அணி B : யாஷிகா (தலைவி), ஐஸ்வர்யா, ஷாரிக், மஹத், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம்
அணி A : டானி (தலைவர்), வைஷ்ணவி, ரம்யா, மமதி, அனந்த், ரித்விகா, சென்ட்ராயன்
மதியம் 01.15
அணி A வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 07 இல் 06 ஐ சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
மதியம் 02.30
சென்ட்ராயன் கேமரா முன்னால் ஆங்கிலத்தில் உளறிக் கொண்டிருந்தார். பாலாஜி நித்யாவுக்கு தோடம்பழம் கொடுக்க சக போட்டியாளர்கள் ஆரவாரமிட்டனர். ஆனால் நித்யா சாப்பிட மறுத்து விட்டார்.
மாலை 06.00
பகல் நடைபெற்ற போட்டிக்கு 500 மதிப்பெண்களை வழங்குவதாக பிக்பாஸ் அறிவித்தார். ஆனால் இந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்துக்காட்ட வீட்டின் தலைவி ஜனனி சக போட்டியாளர்களை அழைத்தபோது ரம்யா, பாலாஜி, மும்தாஜ், நித்யா, மமதி, மஹத், ஷாரிக், வைஷ்ணவி, ரித்விகா ஆகிய ஒன்பது பேரும் வரவேற்பறைக்கு தாமதமாக வந்து வீட்டின் விதிமுறையை மீறியதால் அந்த ஒன்பது பேருக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 900 மதிப்பெண்களை வீட்டின் இவ்வார Luxury Budget மதிப்பெண்களில் இருந்து கழிப்பதாக பிக்பாஸ் அதிரடியாக அறிவித்தார்.
மொத்தம் 2200 மதிப்பெண்களில் இருந்து 900 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு 1300 மதிப்பெண்கள் மீதமிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இனியும் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் எச்சரித்தார்.
இரவு 07.45
சென்ட்ராயன் நித்யாவிடம் பாலாஜிக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே என்று குறிப்பிட்டார். அதற்கு நித்யா பதிலளித்தார். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது.
இரவு 10.30
இவ்வார Luxury Budget க்கான நான்காவது போட்டி ஆரம்பமானது. இதன்படி போட்டியாளர்கள் ஜோடிகளாக எட்டு அணிகளாகப் பிரிக்கப்படுவர். போட்டியின் தலைப்பு 'சொன்னபடி கேளு'. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு நிறத்திலான கைக்குக் கட்டும் பட்டி வழங்கப்படும். முற்றத்தில் கடித உறைகளில் ஒவ்வொரு ஜோடியும் செய்ய வேண்டிய விடயம் குறித்து எழுதப்பட்டிருக்கும். அத்துடன் அதை செய்ய வேண்டிய நேரம் வரும்போது அதற்கு ஒரு பாடல் அல்லது இசை ஒலிபரப்பாகும்.
இரவு 11.00
முதல் போட்டியாளர்களுக்கான போட்டிக்காக 'சோதனை மேல் சோதனை' பாடல் வரி ஒலிபரப்பானது. டானி மற்றும் யாஷிகா ஒரு மூட்டை வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தனர்.
ஜனனியும் வைஷ்ணவியும் ஒருவருக்கொருவர் மீசை, தாடி வரைந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை ஐந்தாம் நாளில் காணலாம்.
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #ஜனனி #டேனி #நித்யா #மும்தாஜ் #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #VijayTV #Janani #Dani #Nithya #Mumtaz #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்