சிகரம் பாரதி, யாழ் பாவாணன் மற்றும் வேலணையூர் தாஸ் இலக்கிய சந்திப்பு!

வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். கடந்த வாரம் நான் ஈழத்துக்குப் பயணமாகியிருந்தேன். அந்த யாழ் பயணம் மறக்கவியலாதது. என் வாழ்வில் முதல்முறையாக நான் யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகியிருந்தேன். கொழும்பில் இருந்து கடுகதிப் புகையிரதம் மூலம் முன்பதிவு செய்து சென்றேன். நகர்சேர் கடுகதி என்பதால் ஆறு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லக்கூடியதாகவிருந்தது. 

வலைத்தளம் மூலமாக அறிமுகமாகியிருந்த நண்பர் யாழ்பாவாணன் அவர்களை முதலில் (2018/06/14) சந்தித்தேன். அவர் தொழில் புரியும் அலுவலகத்தில் அவரது வேலைப் பளுவுக்கு மத்தியிலும் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். யாழ்பாவாணன் அவர்கள் இலக்கியம் மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். வயது ஐம்பதை நெருங்கினாலும் இன்னமும் இளமைத் துடிப்புடன் செயலாற்றி வருகிறார். என்னோடு இயல்பாகப் பழகிய விதம் அவரது நற்குணத்தைப் பறைசாற்றியது. 

பின்னர் என்னை அவரது மோட்டார் சைக்கிளில் யாழ் இலக்கியக் குவியம் அமைப்பின் தலைவர் வேலணையூர் தாஸ் அவர்களைச் சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். நான், யாழ்பாவாணன் மற்றும் வேலணையூர் தாஸ் ஆகிய மூவரும் இலக்கியம் மற்றும் சமகால நடப்புகள் குறித்துக் கலந்துரையாடினோம். ஆரோக்கியமான நிகழ்வாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது. 

நான் தமிழுக்காக இணையத்தில் மட்டுமே பணியாற்றி வருகின்றேன். இணையத்துடன் களத்திலும் இலக்கிய நண்பர்களுடனும் மக்களுடனும் பணியாற்ற வேண்டியது அவசியம் என வேலணையூர் தாஸ் அவர்கள் வலியுறுத்தினார். மலையக இலக்கிய முயற்சிகளுக்கு தாம் ஆதரவு நல்கத் தயாராக இருப்பதாக இருவரும் குறிப்பிட்டனர். 



இந்த சந்திப்பைத் தொடர்ந்து யாழ் பொது நூலகம் சென்றேன். அங்கு என்னால் பத்திரிகை வாசிப்புப் பகுதிக்கு மட்டுமே செல்லக்கூடியதாகவிருந்தது. பல்வேறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகை வாசிப்புப் பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு என ஒரு பகுதி பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்தை அங்கு செலவிட்டேன். அந்த இரண்டு மணி நேரமும் மிகப் பயனுள்ளதாக அமைந்தது. 

அன்று மாலை பேரூந்தில் வவுனியாவுக்குச் சென்றேன். பின்னர் மறுநாள் மாலை புகையிரதத்தில் கொழும்பு வந்து அங்கிருந்து கொட்டகலைக்கு புகையிரதத்திலேயே வந்து சேர்ந்தேன். 

யாழ் மண்ணில் இலக்கியச் சந்திப்புக்காக எனக்கு நேரம் ஒதுக்கித் தந்த யாழ்பாவாணன் மற்றும் வேலணையூர் தாஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு வாரம் திட்டமிட்டு யாழ் பயணம் மேற்கொண்டால் அது இன்னும் பலரைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன். காலம் கனியட்டும். யாழ் மண்ணே வணக்கம்!

#சிகரம்பாரதி #யாழ்பாவாணன் #வேலணையூர்தாஸ் #சந்திப்பு #ஈழம் #இலக்கியசந்திப்பு #யாழ் #யாழ்பயணம் #பயணங்கள் #SigaramBharathi #YarlPaavaanan #VelanaiyoorDhaas #Eelam #Jaffna #travelling #SIGARAMCO 

Comments

  1. தங்களைச் சந்தித்ததில் பெருமை!
    வலைபணியைத் தொடரும் வேளை, களப் பணியும் செய்ய வேண்டும்.

    எனது களப் பணி முயற்சியாக 17/06/2018 நூல் வெளியீட்டு நிகழ்வின் வெற்றியாக "யாழ்பாவாணன் கலைப் பணி மன்றம்" தொடங்கியுள்ளேன். இதற்கென இணையப் பக்கம் அமைத்து விரைவில் அறிமுகம் செய்யவுள்ளேன்.

    களத்திலும் சரி, வலை வழியிலும் சரி எல்லோரும் இணைந்து செயற்பட்டு இலக்கிய முயற்சிகளைச் செய்து தமிழைப் பேணுவோம்.
    மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!