பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | வெளியேறப்போவது யார் தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் நிறைவுக்கு வந்து விட்டது. பிக் பாஸ் இரண்டாம் பருவத்தில் பதினாறு போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஜூன் மாதம் பதினேழாம் திகதி இரண்டாம் பருவம் ஆரம்பமானது. இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் இரண்டாம் பருவத்தின் முதல் வாரத்தில் இருந்தே வீடு அதகளப்பட்டு வருகிறது. நித்யா - பாலாஜி இடையிலான பிரச்சினை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சக போட்டியாளர்களுக்கிடையிலும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பிக் பாஸ் கடந்த முறை போலல்லாது இம்முறை ஆரம்பத்தில் இருந்தே கடுமை காட்டி வருகிறார்.
பிக் பாஸ் முதலாம் வாரத்தில் வெளியேற்றம் இடம்பெறவில்லை. இரண்டாம் வார வெளியேற்றத்துக்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மமதி, பொன்னம்பலம், அனந்த், மும்தாஜ் ஆகிய நால்வர் இந்த வார வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வெளியேறப்போவது யாராக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணமுள்ளனர்.
'சிகரம்' வாசகர்களிடம் நாம் நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் எனும் கேள்வியை முன்வைத்திருந்தோம். இதோ அக்கேள்விக்கான முடிவுகள்:
மும்தாஜ் - 76 வாக்குகள் - 42.46%
பொன்னம்பலம் - 56 வாக்குகள் - 31.28%
அனந்த் - 29 வாக்குகள் - 16.20%
நமது வாக்களிப்பு முடிவுகளின் படி மமதியே இந்த வாரம் வெளியேறவிருக்கிறார். அதே நேரம் அனந்த் வைத்தியநாதனுக்கும் நெருங்கிய வாய்ப்புகள் உள்ளமையை அவதானிக்க முடிகிறது.
நமது 'சிகரம்' வாசகர்களுக்காக சில இணையத்தள வாக்களிப்பு முடிவுகளையும் இங்கே தொகுத்துள்ளோம். அந்த முடிவுகள் நமது முடிவுகளுடன் ஒத்துப் போகின்றனவா? வாங்க பார்க்கலாம்.
பொன்னம்பலம் - 70,194 - 37.34%
மும்தாஜ் - 65,471 - 34.47%
அனந்த் - 34,952 - 18.4%
மமதி - 18,601 - 9.79%
மும்தாஜ் - 190,166 - 38.04%
பொன்னம்பலம் - 147,641 - 29.53%
அனந்த் - 97,380 - 19.48%
மமதி - 64,726 - 12.95%
மும்தாஜ் - 50,927 - 38.49%
பொன்னம்பலம் - 42,888 - 32.41%
அனந்த் - 22,332 - 16.88%
மமதி - 16,163 - 12.22 %
கூகுள் தேடலில் முதல் மூன்று இணையத்தள முடிவுகளையும் இங்கே தொகுத்திருக்கிறோம். இந்த மூன்று இணையத்தள வாக்கெடுப்புகளிலும் சரி, நமது சிகரம் வாக்கெடுப்பிலும் சரி ஒரே மாதிரியான முடிவுகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளனர். அனந்த்தும் மமதியும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர். அனைத்து வாக்களிப்பிலும் மமதியே கடைசி இடத்தில் உள்ளார். ஆகவே மமதி வெளியேறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மமதி இல்லாத பட்சத்தில் அனந்த் வெளியேற்றப்படலாம். அடுத்த வார வெளியேற்றத்திற்கும் அனந்த் இப்போதே நேரடியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மமதி இல்லாத பட்சத்தில் மும்தாஜ் வைஷ்ணவியுடன் கூட்டுச் சேரக் கூடும். மமதி தான் மும்தாஜை தூண்டி விடுகிறார் என்கிற குற்றச்சாட்டும் போட்டியாளர்களிடையே உள்ளது. மமதியை பல போட்டியாளர்கள் விரும்பவில்லை.
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம், இரண்டாம் வாரத்தில் வெளியேறப்போவது யார்? மமதியா? அனந்த்தா? அல்லது நாம் எதிர்பாராத முடிவா? பொருத்திருந்து பார்ப்போம்.
இந்த பிக் பாஸ் இல்லத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் யார்? உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யலாமே?
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம்
இந்த பிக் பாஸ் இல்லத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் யார்? உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யலாமே?

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
Created with PollMaker
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #BiggBoss #BiggBossTamil #VijayTV #Mumtaz #Mamathi #KamalHassan #Elimination #Nomination #Eviction #BB2 #SIGARAMCO #சிகரம்

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்