Share it

Friday, 29 June 2018

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்பிக் பாஸ் தமிழ் 02
வாரம் 02 
நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் பிக் பாஸ். ஏங்க பெண்களை ஏழரை மணிக்கு எழுப்பி விட்டுட்டு ஆண்களை எட்டு மணிக்கு எழுப்பினா என்னங்க நியாயம்? அடுத்ததா பாட்டுப் போட்டப்போ பெண்கள் எல்லாம் உற்சாகமா ஆடுனாங்க. நடக்கட்டும்....ஜனனிக்கு மஹத் காலுக்கு நிறப்பூச்சு பூசி வீட்டுக் கொண்டிருந்தார். காலை உணவைத் தயாரிப்பதில் பாலாஜி, டேனி, பொன்னம்பலம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். காலை உணவு வேளையிலேயே பாலாஜி - நித்யா சண்டை ஆரம்பமானது. நித்யா காலை உணவை குப்பையில் கொட்டி விடுகிறார். மஹத் சாப்பாடை கொட்டாதீங்க என்கிறார். அது பிரச்சினையாக உருவாகிறது. பாலாஜி அல்லது நித்யா இருவரில் ஒருவரை வெளியேற்றினால் நல்லது. இல்லாவிட்டால் நூறு நாட்களும் இவர்களின் சண்டையை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்க நேரும். ஆண்கள் காலை உணவை எடுக்கின்றனர். பாலாஜி மீதே தவறு என்று பேசிக் கொள்கின்றனர். அந்த விடயம் தொடர்பில் போட்டியாளர்களுக்குள் பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. பாலாஜி பேசும் காட்சிகளில் வார்த்தைகளை வெட்ட வேண்டியதாய் இருக்கிறது. ஒரு பொது நிகழ்ச்சியில் இது ஆரோக்கியமானதல்ல. மும்தாஜும் வைஷ்ணவியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனது வாழ்க்கையில் எந்தவொரு கிசுகிசுவும் வந்ததில்லை என்று கூறுகிறார். பகல் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. யாஷிகா மும்தாஜ் கூறியதைப் பற்றி சமையல் அணியிடம் ரகசியப் புகாரளிக்கிறார். ஆண்கள் பெண்களை வேலை வாங்கியதைப் போல பெண்கள் ஆண்களை வேலை வாங்கவில்லை என்று தோன்றுகிறது. ஆண்கள் வேலைக்காரர்களாக இருக்கும் போதும் அதிகாரத் தோரணையோடு தான் இருக்கின்றனர். மும்தாஜை வேலை வாங்கினார்கள் ஆண்கள். ஆனால் அனந்த் அவ்வளவாக வேலை வாங்கப்படவில்லை. மதியம் இரண்டு மணிக்கு பிக் பாஸ் எல்லோரையும் கூப்பிட்டு கூட்டம் போடுகிறார். போட்டி முடிந்து விட்டதாம். நேற்றைப் போலவே யார் நன்றாக வேலை செய்யவில்லை என்று சொல்லுமாறு பெண் எஜமானர்களிடம் கேட்கிறார். டேனி ஏற்கனவே அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதால் அவரது பெயரை சொல்ல முடியாது என்கிறார். உடல் ரீதியான பிரச்சினை காரணமாக அனந்த் இன் பெயரை அடுத்த வார வெளியேற்றத்திற்கு பரிந்துரைப்பதாக பெண்கள் கூறுகின்றனர். ரித்விகா நல்ல எஜமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றுகின்றனர். 

இத்துடன் இந்த வார போட்டிகள் முடிவடைகின்றன. புள்ளிகள் பற்றி பிக் பாஸ் கூறவில்லை. 3200 புள்ளிகளும் முழுமையாகக் கிடைத்திருக்கக் கூடும். ஆண்களை இரண்டு நாள் எஜமானர்களாக வைத்திருந்த பிக் பாஸ் பெண்களை ஒரு நாள் மட்டுமே எஜமானர்களாக இருக்க வைத்திருக்கிறார். இதுக்கு மேல விட்டா நமக்கு தான் ஆபத்துன்னு நெனச்சிருப்பார் போல. 

மாலை 03.45 மணி. யாஷிகா கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் சாரிக்கும் மஹத்தும் படுத்திருக்கும் கட்டிலில் யாஷிகாவும் படுத்து பேசிக் கொண்டிருக்கிறார். மாலையில் பெண்கள் சிலரும் ஆண்கள் சிலரும் குளியலறையில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். மூன்றாம் வாரத்திற்கான பொருட் கொள்வனவுக்கான அறிவிப்பு வருகிறது. அதன் படி எஜமானர் - வேலைக்காரர் போட்டியில் ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டதால் அவர்களுக்கு 1600 புள்ளிகள் முழுமையாக வழங்கப்படுகின்றன. பெண்கள் அணி ஒழுங்காக செயல்படாததால் அவர்களுக்கு 200 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆக மூன்றாம் வாரத்திற்கான பொருட் கொள்வனவிற்கான மொத்தப் புள்ளிகள் 1800. மேலும் ஆண்கள் அணியே போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் ஆண்கள் மட்டுமே பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என குண்டைத் தூக்கிப் போடுகிறார் பிக் பாஸ். சிறப்பு. நடத்துங்க. அதன் படி பொருட் கொள்வனவும் நடந்து முடிகிறது. 

சென்றாயன் ரித்விகா மற்றும் நித்யாவுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை நக்கலடிக்கின்றனர். இரவில் போட்டியாளர்களுக்குள் சண்டை நடப்பதைப் போல நாடகமாடுகின்றனர். மும்தாஜை கலாய்க்கின்றனராம். டேனி முதலில் சிரித்துவிட மற்றவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர். 

'ஒரு குடும்பத்தில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொள்பவர்கள் ஆண்களா அல்லது பெண்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துகிறார் பிக் பாஸ். ஆண்களில் மூன்று பேரும் பெண்களில் மூன்று பேரும் பங்குபற்ற வேண்டும். போட்டியாளர்களில் ஒருவரே நடுவராக இருக்க வேண்டும். ரித்விகா, நித்யா, டேனி, பாலாஜி, வைஷ்ணவி, சென்றாயன் ஆகியோர் பேசினர். நடுவர் மஹத் ஆண்கள் அணி சிறப்பாக பேசியதாகக் கூறுகிறார். ஆனால் வெற்றியை பெண்கள் அணிக்கு வெற்றியை வழங்குவதாக கூறுகிறார். ஆண்களும் பெண்களும் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடிய இந்த வாரப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினை இத்தோடு முடிவடையுமா அல்லது தொடருமா என்ற கேள்வியோடு விடைபெறுகிறார் பிக் பாஸ். எங்க பாஸ் பிரச்சினை முடியப் போகுது? அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே? அப்படியே முடிஞ்சாலும் விட்டுட்டு வேடிக்கை பாப்பீங்களா என்ன? சும்மா விளையாடாம அங்கிட்டு போங்க பிக் பாஸ்...


உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

யாஷிகா ஆனந்த் YASHIKA ANAND
பொன்னம்பலம் PONNAMBALAM
மஹத் MAHATH
டேனியல் DANIEL ANNIE POPE
வைஷ்ணவி VAISHNAVI
ஜனனி JANANI
அனந்த் வைத்தியநாதன் ANANTH VAIDYANATHAN
ரம்யா RAMYA NSK
சென்றாயன் SENRAYAN
ரித்விகா RIYTHVIKA
மும்தாஜ் MUMTAZ
பாலாஜி BHALAJIE
நித்யா NITHYA
மமதி MAMATHI CHARI
ஷாரிக் SHARIQ
ஐஸ்வர்யா AISHWARYA
Created with PollMaker


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #நித்யா #பாலாஜி #BiggBoss #BiggbossTamil #VivoBiggBoss #VijayTV #Mumtaz #Nithya #Balaji #SIGARAMCO #சிகரம் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts