பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - முதலாம் நாள் | BIGG BOSS TAMIL - SEASON 02 - DAY 01

துவக்க நாள் நள்ளிரவு 02.15

ஓவியா விருந்தினராகத்தான் வந்துள்ளார் என்பதை சக போட்டியாளர்கள் கண்டுபிடித்தனர். ஓவியாவின் கையில் கடிகாரம் மற்றும் அவரது பயணப் பெட்டியில் தண்ணீர் போத்தல்கள் மட்டும் இருந்தமை ஆகியவற்றைக் கொண்டு கண்டுபிடித்திருந்தனர். 

பிக் பாஸ் போட்டியாளர்களின் பயணப் பைகள் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. சில போட்டியாளர்களின் பெட்டிகள் வரவில்லை. 

சிறிது நேரத்தின் பின் ஓவியா வெளியேறுமாறு பிக் பாஸினால் பணிக்கப்பட்டார். 'இங்கே என்னவெல்லாம் நடக்கும் என்பது எனக்குத் தெரியுமென்பதால் எனக்கு உங்களையெல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது' என்று கூறிச் சென்றார் ஓவியா. 

துவக்க நாள் நள்ளிரவு 03.45

சென்ட்ராயன் இரு பெண் போட்டியாளர்களுக்கு நடனப் பயிற்சி அளித்தார். 

துவக்க நாள் நள்ளிரவு 04.30

பிக் பாஸ் இல்லத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

முதலாம் நாள் காலை 08.30

தனது மகளை விட்டுப் பிரிந்து வந்தது குறித்து நித்யா தனிமையில் மிகவும் வருந்தினார். 

முதலாம் நாள் காலை 08.45

நித்யாவை சக பெண் போட்டியாளர் பிக் பாஸ் க்கு வந்தது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். 

முதலாம் நாள் காலை 09.00 

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்னும் பழைய பாடலுடன் பிக் பாஸ் இல்லத்தின் காலைப் பொழுது விடிந்தது. 

முதலாம் நாள் காலை 09.45

சென்ட்ராயன் மற்றும் ஜனனி ஆகியோர் ஆடுவதற்காக இன்னுமொரு பாட்டை போடுமாறு பிக் பாஸை கேட்டனர்.

முதலாம் நாள் காலை 10.30 

பொன்னம்பலம் தான் கண்ட கனவை விவரித்தார். 

முதலாம் நாள் காலை 11.15

அனந்த் நித்யாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 

முதலாம் நாள் காலை 11.30

போட்டியாளர்கள் காலை உணவை உண்டனர். 



முதலாம் நாள் காலை 12.30

போட்டியாளர்கள் ஆங்காங்கே அசந்து தூங்கிக் கொண்டிருக்க பிக் பாஸ் நாய் குறைத்து அனைவரையும் எழுப்பியது. 12.45க்கு பெண் போட்டியாளர் ஒருவர் கழிப்பறையை சுத்தமாகப் பாவிப்பது குறித்து வகுப்பெடுத்தார். மதியம் 01.00 மணிக்கு சமையல் பொருட்கள் வந்து சேர்ந்தன. 

முதலாம் நாள் மதியம் 02.30 

சமையல் வேலைகள் நடைபெற்றன. சென்ட்ராயன் அரைகுறை ஆங்கிலத்தில் பிக் பாஸிடம் வெக்கும் கிளீனர் கேட்டார். மதியம் 03.15க்கு சில போட்டியாளர்கள் ஒன்றிணைந்து 'புத்தம் புது காலை' பாடலை பாடிக்கொண்டிருந்தனர். பின்னர் 'சுந்தரி ஒரு சேதி' பாடலையும் பாடினர். 

முதலாம் நாள் மதியம் 03.45 

போட்டியாளர்கள் உரையாடியபடி மதிய உணவை எடுத்தனர். யஷிகா கலகலப்பாக உரையாடினார். 

முதலாம் நாள் மாலை 05.00 

பிக் பாஸ் இல்லத்தின் முதலாம் வாரத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஆரம்பமானது. போட்டியாளர்களின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கடித உறைகளை தேடி எடுக்க வேண்டும். 

ஜனனி, மஹத் மற்றும் மும்தாஜ் ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். 

முதலாம் நாள் மாலை 04.30 

அனந்த் பொன்னம்பலத்துக்கு பாட்டுப் பயிற்சி அளித்தார். 

முதலாம் நாள் இரவு 07.00 

பயணப் பெட்டிகள் வந்து சேராத போட்டியாளர்கள் பிக் பாஸிடம் முறையிட்டனர். 

முதலாம் நாள் இரவு 09.00 

ஜனனிக்கு 'விஷ பாட்டில்' என பட்டப் பெயர் சூட்டப்பட்டது. 

முதலாம் நாள் இரவு 10.00

எட்டு வாக்குகளைப் பெற்று ஜனனி முதலாம் வாரத்தின் தலைவரானார். ஜனனியை கலந்துரையாடல் அறைக்கு அழைத்து அவருக்கான பொறுப்புகள், சலுகைகள் குறித்து பிக் பாஸ் அறிவித்தார். 

முதலாம் நாள் இரவு 10.15 

முற்றத்தில் சமையல் அணி, சமையல் பாத்திர சுத்தப்படுத்தும் அணி மற்றும் வீட்டை சுத்தப்படுத்தும் அணிகளை தேர்ந்தெடுக்கும் பணி இடம்பெற்றது. 

முதலாம் நாள் இரவு 11.30 

வீட்டுப் பணி அணிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. இரவு 11.45க்கு பயணப் பெட்டிகள் கிடைக்காத போட்டியாளர்களுக்கானவை கிடைத்தன. 

முதலாம் நாள் நள்ளிரவு 12.15

முதலாம் வாரத்தில் வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளரைத் தெரிவு செய்யும் பணி ஆரம்பமானது. 

மஹத் நித்யாவை எந்த வேலையும் செய்யாததால் பரிந்துரைத்தார்.
அனந்த் மும்தாஜ் ஐ கடுமையாக நடந்து கொள்வதால் பரிந்துரைத்தார். 
மும்தாஜ் நித்யாவை சுத்தமில்லாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.
சென்ட்ராயன் மமதி ஆங்கிலத்தில் பேசுவதால் பரிந்துரைத்தார். 

முதலாம் நாள் நள்ளிரவு 01.15

அனந்த், மும்தாஜ், ரித்விகா மற்றும் நித்யா ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்படக்கூடிய போட்டியாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டனர். 

முதலாம் நாள் நள்ளிரவு 01.30 

வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் குறித்த கலந்துரையாடல் போட்டியாளர்களுக்கிடையே நடைபெற்றது. 

முதலாம் நாள் நள்ளிரவு 02.00 

வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. முதலாம் பருவத்தின் காயத்ரியைப் போன்று இந்த பருவத்தில் மும்தாஜ் இருப்பாரோ என்று தோன்றுகிறது. 

என்ன நடக்கும் என்பதைப் போகப் போக பார்க்கலாம். 

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #சிகரம் #BiggBoss #BiggBossTamil #KamalHassan #BBNomination #VijayTV #BBDay01 #SigaramCO 

Comments