திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை. அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான். 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன. Image Credit: Respective Owners only 2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலம...