என் சமையல் அனுபவ குறிப்பு - 01

என் சமையல் அனுபவ குறிப்பு பாகம் 01 - சாப்பிட முன் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி சமையல் குறிப்புகள் தென்படும். எல்லாம் பார்க்க இலகுவான குறிப்புகள் தான். காணொளியாக பார்க்க அழகாகவும் இருக்கும். அவற்றில் செய்ய முடியும் என்று தோன்றுவதை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். சிலவற்றை எனது வாட்ஸப் செய்தியில் சேமித்தும் வைத்துள்ளேன். அப்படி இன்று சில சமையல் காணொளிகளை பார்க்க நேர்ந்தது. எல்லாம் பார்க்க ஒரே மாதிரியான பொருட்களை வைத்து செய்யக்கூடியவை. அவற்றில் இரண்டை தெரிவு செய்திருந்தேன். ஒன்று தோசை போன்றது. மற்றையது நூடில்ஸ் பக்கோடாவோ எதுவோ. நூடில்ஸ் பக்கோடா செய்ய நினைத்தாலும் தேநீர் அருந்தும் நேரம் கடந்துவிட்டதால் அந்த யோசனையை கைவிட்டேன். அடுத்தது மாவு தோசை என்று வைத்துக் கொள்ளுங்கள். காணொளியில் சொல்லப்பட்ட அளவு இரவு உணவுக்கு போதாது என்று கருதியமையால் காணொளியில் வழங்கப்பட்ட பாவனை அறிவுறுத்தல்களை மும்மடங்காக்க நினைத்து அதற்கேற்றாற்போலவே பொருட்களை தயார் செய்தேன். ஆனால் பாலுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பம் வந்தபோது இரண்டு மடங்கு கோதுமை மாவை மாத்திரமே சேர்க்க முடிந்தது. சரி ம...