வாசிப்பும் நானும் - சில குறிப்புகள்

வாசிப்பு என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் தேடிப்பார்க்கின்ற போது பலர் வாசிப்பு ஆர்வம் அற்றவர்கள் போலவே இருக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்? நூலகங்கள் பல இருந்தாலும் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதன் காரணம் என்ன?

முதல் காரணமாக நான் கருதுவது பலருக்கு தமக்கு பொருத்தமான புத்தகங்களை கண்டடைய முடியாமல் போகின்றது. தமது வாசிப்பு தேடலைப் பூர்த்தி செய்யும் புத்தகத்தை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்துள்ள எனக்கே பல சமயங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.

அடுத்தது மாணவப் பருவத்தில் வாசிப்பு அநாவசியமான ஒன்றாக பார்க்கப்படுவது. கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த பாடம் தொடர்பில் நூலகத்தில் ஏதேனும் தேடிக் கொண்டு வா என்று சொல்வதில்லை. நூலக ஆசிரியரே நூலகத்திற்கு மாணவர்களை அழைக்காத நிலையே பல பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. இந்த பின்னணியில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்கள், நூலகமும் நூல்களும் அப்போதைய ஆய்வுத் தேவைக்கு மாத்திரம் தான் என் முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சிலரே தமது துறை சார்ந்தேனும் நூல்களை வாசிக்கின்றனர். 




எனக்கு வாசிப்பு மிகவும் பிடித்தமான ஒன்று. எட்டாம் வகுப்பில் இருந்து நூலகத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதன் பின்னர் சில புத்தகங்கள் மற்றும் இணைய வாசிப்பு எனக்குத் தீனி போட்டிருக்கிறது. பாடசாலைக் காலத்தில் வாசிக்க ஆரம்பித்த பின்னர் பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தேன். சில ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் நான் எழுதிய சிறிய கட்டுரை இலங்கையின் வீரகேசரி வார இதழில் 2008 ஆம் ஆண்டு வெளியானது. ஆம். வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் தான் அதனை எழுதியுள்ளேன். அதே பெயரில் பேஸ்புக்கிலும் ஒரு குழுவை கண்டதும் உடனடியாகவே அதில் இணைந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் பாடசாலையில் கற்ற போது பல சந்தர்ப்பங்களில் நூலகம் மூடியே கிடந்திருக்கிறது. புத்தக கணக்கெடுப்பு என்று மூடினால் மாதக்கணக்கில் மூடியே கிடக்கும். ஆனால் எங்கு எந்த புத்தகம் இருந்தது என்று ஆசிரியரை விடவும் நான் நன்றாக அறிவேன். அந்த நூலகம் இன்னும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நான் கருதுகிறேன்.

பாடசாலைக் காலத்தில் பொன்னியின் செல்வன், மகாபாரதம் போன்ற பெரிய பெரிய நூல்தளையெல்லாம் வாசித்துத் தள்ளியிருக்கிறேன். பகல் உணவைத் தவிர்த்து பிரதேச பொது நூலகத்தில் நாளைச் செலவிட்டிருக்கிறேன்.

இடையில் சில காலம் நான் வாசிப்பதையோ எழுதுவதையோ முழுமையாக விட்டு விட்டேன். இப்போது யோசித்துப் பார்த்தால் அது என்னால் எப்படி முடிந்தது என்று மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஏனெனில் நூலக அறிமுகம் கிடைப்பதற்கு முன்னரே பாடப் புத்தகத்திற்குள் கதைப் புத்தகத்தை மறைத்து வைத்து வாசித்தவன் நான். வாசிப்பை ஒரு போதும் நானோ, என்னை வாசிப்போ விட்டதில்லை. நிலைமை அப்படி இருக்க, இது இரண்டையும் விட்டு நான் விலகியிருந்த காலம் ஒரு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் இருக்கிறது வாசிப்பைப் பற்றிப் பேச. ஆனால் இப்போதைக்கு இது போதும். மீண்டும் சந்தர்ப்பம் அமைந்தால் இன்னும் பேசலாம். அதுவரை தொடர்ந்து வாசிப்போம், வாசிப்பை நேசிப்போம்!

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!