Posts

Showing posts from January, 2019

இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Image
சிகரம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !  செக்கன்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி நம் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது.  கடந்த 2018 ஆம் ஆண்டில் 'சிகரம்' இணையத்தளத்தில் செய்ய வேண்டும் என்று பலவற்றை திட்டமிட்டிருந்தாலும் அவற்றை முழுமையாகச் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கவில்லை. கால ஓட்டத்தில் ஓரளவுக்கே திட்டங்களைப் பூரணப்படுத்த முடிந்தது.  மலர்ந்திருக்கும் இந்த 2019 ஆங்கிலப் புத்தாண்டில் எண்ணியது எண்ணியபடி நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திப்போம்.  'சிகரம்' இணையத்தள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இந்த 2019 ஆங்கிலப் புத்தாண்டு நலமும் வளமும் அள்ளி வழங்கவும் எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேறவும் மனதார வாழ்த்துகிறோம்.  உங்கள் முயற்சியே வாழ்வின் உயர்ச்சி. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்கள் முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள். நீங்கள் முயற்சியைக் கைவிட்