இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

சிகரம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய 2019 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 

செக்கன்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி நம் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டில் 'சிகரம்' இணையத்தளத்தில் செய்ய வேண்டும் என்று பலவற்றை திட்டமிட்டிருந்தாலும் அவற்றை முழுமையாகச் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கவில்லை. கால ஓட்டத்தில் ஓரளவுக்கே திட்டங்களைப் பூரணப்படுத்த முடிந்தது. 



மலர்ந்திருக்கும் இந்த 2019 ஆங்கிலப் புத்தாண்டில் எண்ணியது எண்ணியபடி நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திப்போம். 

'சிகரம்' இணையத்தள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இந்த 2019 ஆங்கிலப் புத்தாண்டு நலமும் வளமும் அள்ளி வழங்கவும் எண்ணியதெல்லாம் இனிதே நிறைவேறவும் மனதார வாழ்த்துகிறோம். 

உங்கள் முயற்சியே வாழ்வின் உயர்ச்சி. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்கள் முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள். நீங்கள் முயற்சியைக் கைவிட்டால் வாழ்க்கையும் உங்களைக் கைவிட்டுவிடும். ஆகவே தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் வெற்றியை நோக்கி நடை போடுங்கள். 

பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக 'சிகரம்' இணையத்தளத்துக்கு பேராதரவு வழங்கி வரும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் நாம் இல்லை. இனி வரும் நாட்களிலும் உங்கள் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. உங்கள் ஒத்துழைப்பை தொடர்ச்சியாக எமக்கு வழங்குவீர்கள் என நம்புகிறோம். 

இந்த உலகத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. பொருளானாலும் உயிரானாலும் விமர்சனங்களுக்கு செவிகொடுத்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாமும் உங்கள் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கக் காத்திருக்கிறோம். எமது இணையத்தள படைப்புகள் குறித்த உங்கள் விமர்சனங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மீண்டும் எமது 'சிகரம்' இணையத்தள வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் 2019 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம்! 

தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும் வகை 
செய்தல் வேண்டும்! 

-சிகரம்

Comments

  1. மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

    தொடர்ந்து பதிவுகள் பல வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!