Posts

Showing posts with the label பாரா

உரைநடை எழுத்தாளர் ஆவது எப்படி - பாராவின் உரையை முன்வைத்து...

Image
காலை ஏழு மணிக்கு எனது இன்றைய நாளை ஆரம்பித்தேன். நேற்று முன்தினம் இரவு மூன்று மணித்தியாலமே உறங்கக் கிடைத்தது. நேற்று அதிகாலை 03.30 க்கு வேலைக்காக எழுந்து சென்று மீண்டும் வீடு திரும்பியபோது மாலை நான்கு மணி. ஒரு மணிநேரம் மட்டும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க நேரம் கிடைத்தது. மீண்டும் ஆசான் பாராவின் மிருது வாட்ஸ்அப் நாவல் தொடரை வாசித்துவிட்டு உறங்கும் போது நள்ளிரவு 12.30. அதிகாலை நான்கு மணியளவில் பாரிய சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கூர்ந்து அவதானித்ததில் இடியும் மின்னலும் தன் லீலைகளை காட்டிக் கொண்டிருந்தன. மீண்டும் கஷ்டப்பட்டு உறங்கி ஏழு மணியளவில் விழித்துக் கொண்டு தேநீரை அருந்தினேன். சரி, இப்போதே வாசிக்க வேண்டாம், எதையாவது கேட்கலாம் என்று யூடியூபை Scroll செய்த போது 'காலத்தை வென்று நிற்கும் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஆசான் பாரா ஆற்றிய உரையொன்று கண்ணில் பட்டது. ஏற்கனவே கேட்ட ஞாபகம். சரி மீண்டும் கேட்கலாம் என்று காணொளியை Play செய்து கேட்க ஆரம்பித்தேன்.  நேற்று பாரதி சித்தர்களை சந்தித்ததை பற்றி ஆசான் பாரா எழுதியிருந்தார். இன்று இந்த உரையில் யேசுவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியமாக வரைந்த கதையில், ...

'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...

Image
இனிப்பில் வாழ்பவன் - அந்திமழை இணையத்தளம்   'அந்திமழை' இணைய இதழில் வெளியான 'இனிப்பில் வாழ்பவன்' கட்டுரையை முன்வைத்து...  கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஒரு படம். அதற்கு 'கேப்சன்' என்று சொல்லக்கூடிய ஒரு விளக்கம். ரவி பேலட் வரைந்திருந்த அந்த படத்திற்கு 'இனிப்புத் தீவிரவாதி' என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆம். தீவிரவாதிதான். பாரா ஒரு தீவிரவாதி. எதில்? தான் நம்பும் அனைத்திலும். எழுத்தில் ஒரு தீவிரவாதி. எதையும் எழுதக்கூடிய தீவிரவாதி. கூட்டம், பாராட்டு என்று எதன் பின்னாலும் போகாத ஒரு தீவிரவாதி. வாசகர்களை மட்டுமே நம்பும் தீவிரவாதி. இறுதியாக உலகமே தேடக்கூடிய இனிப்புத் தீவிரவாதி.  ஒரு பக்கம் அட இந்த மனிதர் எப்படி இவ்வளவு இனிப்பை உண்கிறார் என்ற ஆச்சரியம். மறுபுறம் இத்தனை வகை இனிப்பும் இந்த மனிதருக்கு எப்படி கிடைக்கிறது என்ற ஆச்சரியம். அதிலும் ஆச்சரியம், அதை எப்படி ருசிக்க வேண்டும் என நாலு பக்கம் நீளமாக ரசித்து எழுதும் பதிவு. அந்த பதிவை வாசித்துவிட்டு நாமும் ஒரு இனிப்பை சுவைக்கலாம் என்று போனால் நமது முகத்திற்காகவே தயாரிக்கப்பட்டதுபோல ஒன்றைத் தருவார்கள். தண்டச்செலவு அல்...

பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

Image
சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன. பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்...