Posts

Showing posts with the label நிகழ்வுகள்

நிகழ்வுகள் - 08-05-2019

Image
ஜனாதிபதியின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்ட போது...  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் (07) சந்தித்த போது... (Image Credit: defence.lk)  2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான இலங்கை அணி இங்கிலாந்து நோக்கிப் பயணமானது. (Image Credit: ICC/ SLC)  நிகழ்வுகள் - 08-05-2019  https://newsigaram.blogspot.com/2019/05/news-by-pic-08-05-2019.html  #நிகழ்வுகள் #செய்தி #இலங்கை #விளையாட்டு #தொகுப்பு #ஜனாதிபதி #மைத்திரிபால #கிரிக்கெட் #LK #LKA #News #SIGARAM 

ஆதலால் கவிதை செய்வோம் !

Image
'யாழ் இலக்கியக் குவியம்' இலக்கிய அமைப்பு யாழில் 'ஆதலால் கவிதை செய்வோம்' கவிதை வாசித்தல் மற்றும் உரையாடல் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 22.07.2018 ஞாயிறு பிற்பகல் 02.30 மணிக்கு ஈச்சமோட்டை உப தபாலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஐ லீட் கணினிக் கல்வி நிலையத்தில் (I Lead Computer Centre) இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் தாம் விரும்பிய தலைப்பில் கவிதை வாசிக்கலாம். அத்துடன் தனக்குப் பிடித்த பிறரின் கவிதை ஒன்றையும் நிகழ்வில் வாசிக்க முடியும். படைப்புகள் A4 அளவு தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்க வேண்டும். தமிழின் சமகாலக் கவிதைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் யாழ் இலக்கியக் குவியத்தைச் சேர்ந்த யாழ்பாவாணன் அவர்களை +94703445441 மற்றும் +94779258945 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு தமது வருகை மற்றும் பங்குபற்றுதலை உறுதி செய்து கொள்ளலாம்.  ஆதலால் கவிதை செய்வோம்! - யாழ் இலக்கியக் குவியம் ...

மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் கௌரவம் பெறுகிறார்.

Image
இலங்கையின் மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து நடாத்தும் விருது வழங்கும் விழா எதிர்வரும் 2018 - ஜுன் மாதம் 23ஆம் திகதி பி. ப. 12.00 மணிக்கு பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜெயசூரிய அவர்களின் தலைமையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன குமாரதுங்க உள்ளக அரங்கில் நடைபெறும். இவ்விழாவில் பல மூத்த சிங்கள எழுத்தாளர்களுடன் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர். இவ்வருட கொடகே யின் மூத்த எழுத்தாளர்கள் கெளரவிக்கும் விழாவில், திருமதி. புர்கான் B. இப்திகார், திரு. மு. சிவலிங்கம், திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆகியோர் கெளரவிக்கப்படுவார்கள். அனுசரணை: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொடகே சகோதரர்கள் (பிரைவட்) லிமிடெட் நன்றி : கவ்வாத்து பேஸ்புக் பக்கம்   #முசிவலிங்கம் #மலையகம் #இலங்கைஒலிபரப்புகூட்டுத்தாபனம் #கொடகே #MSIVALINGAM #MALAIYAGAM #UPCOUNTRY #SLBC #KODAGE #SIGARAMCO

யாழில் 'பரசுராம பூமி' நூல் அறிமுக நிகழ்வு

Image
மறுபாதி குழுமம் நடாத்திய வி.மைக்கல் கொலினின் 'பரசுராம பூமி' சிறுகதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 16-06-2018 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் 128, டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் பிரபல எழுத்தாளர் ஐ.சாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கலைமுகம் பொறுப்பாசிரியர் திரு.கி. செல்மர் எமிலின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்களும் சிறப்பதிதியாக கிளிநொச்சி வலய உதவிக்கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான திரு.சு. ஸ்ரீ குமரன் (இயல்வாணன்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரபல தொழிலதிபரும் கிருபா லேணர்ஸ் அதிபருமான திரு. அ.கிருபாகரன் அவர்கள் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதற் பிரதியைப் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். நூல் தொடர்பான கருத்துரைகளை எழுத்தாளர்கள் ச.இராகவன், சி.ரமேஷ் ஆகியோர் வழங்கினர். ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளான திரு.க.சட்டநாதன், உடுவை எஸ்.தில்லை நடராஜா, வடகோவை வரதராஜன், கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேசன் ,கி.சு.முரளிதரன், கவிஞர் சித்தாந்தன், வேல் நந்தன், தூண்ட...

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018

Image
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பார்கள். ஆம், மனித சமூகத்தின் வளர்ச்சியில் வாசிப்புக்குப் பெரும் பங்குண்டு. ஒரு நல்ல புத்தகம் ஒவ்வொரு வாசகனையும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பு அருகிவரும் சூழலில் சங்க இலக்கியம் மீதான ஆர்வமும் அறிவும் குறைந்து வருவது வருந்தத்தக்கது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புரிந்துகொண்டால் சங்க இலக்கியமும் கடினமானதாக இருக்காது. சங்க இலக்கியம் நமது மரபு, நமது சொத்து, நமது அடையாளம். ஆகவே தமிழார்வமுள்ள அனைவரும் சங்க இலக்கியங்களையும் அறிந்திருப்பது தேவையாகும். ஆகவே சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்கும் ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018   முடிவுத் திகதி : 10.07.2018 அனுப்ப வேண்டிய முகவரி : tamilvetrivel@gmail.c...

திருவள்ளுவர் சேவா சங்கம் நடாத்தும் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - தமிழ்நாடு

Image
*வாழ்க குறள் நெறி !* *வளர்க திருவள்ளுவர் புகழ் !!* *திருவள்ளுவர் சேவா சங்கம்* *Thiruvalluvar Public Association* *சான்றோனாக வாழ திருக்குறள் படி* *சி.16, ச.சு. கோயில் மான்யம், எடத்தெரு பின்புறம், சலவன்பேட்டை, வேலூர்-632 001.* ---------------------------------------- *மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள்* "அணுவை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்" என்று ஔவையாரால் போற்றப் பெற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருப்பெயரால் செவ்வனே இயங்கி வரும் இயக்கம் திருவள்ளுவர் சேவா சங்கம் ஆகும். இச்சங்கத்தின் சார்பாக பள்ளி மாணாக்கரிடையே சமூக மற்றும் தன் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், மாவட்ட அளவில் பேச்சுப்போட்டியும் நடைபெறும். அனைத்து மாணாக்கர்களும் பங்கு பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த அழைக்கின்றோம். ---------------------------------------- பேச்சுப் போட்டிக்கான தலைப்பு : *"எழுவாரை எல்லாம் பொறுத்து"* -----------------------...

மலையகமும் மறுவாழ்வும்

Image
இலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஐவர் மூன்று தசாப்தங்கள் கடந்து இலங்கை வந்திருந்தனர். கேகாலை மாவட்டத்தில் இருந்து தமிழகம் சென்ற (ஈழம் மலர் மன்னன்) தம்பிராஜா (தமிழகத்தில் கிராம அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), ஆகரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இருந்து சென்ற செவந்தி (இவர் நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), தலவாக்கலை பகுதியில் இருந்து சென்ற பூபாலன், நாவலப்பிட்டி பகுதியில் இருந்து சென்ற ஜெயசிங் (இவர்கள் இருவரும் வங்கி அதிகாரிகளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்) ஆகியோருடன் இரத்தினபுரி, லெல்லோபிட்டிய தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகன் (ராமச்சந்திரன்) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.  தெளிவத்தை ஜோசப் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழகன் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை திரும்பி பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்புகள் ஊடாக தனதும், இலங்கை மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் இணைத்ததாக மலையகமும் மறுவாழ்வும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை தொகுத...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]

Image
பகுதி - 01 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ( 04) - ஆய்வரங்கு - சிற்றிதழ் பகுதி - 02 'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும். பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை. ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை. பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல். சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம். இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் ச...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்

அரங்கு எண்: 04 'எழுத்து' சி.சு.செல்லப்பா அரங்கு (மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்) 03-06-2012 மு.ப 08:40-பி.ப 12:50 மணி  அரங்கு: சிற்றிதழ்   இணைத் தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, தா.கோபாலகிருஸ்ணன்  ஆய்வு மதிப்பீட்டாளர்: எஸ்.மோசேஸ், அன்பு மணி இணைப்பாளர்: அந்தனி ஜீவா  ஆய்வுக் கட்டுரைகள்: 1.   பெண்களும் சஞ்சிகைகளும் - ஒரு நோக்கு - செல்வி செகராச சிங்கம் ஜனதீபா (உளவியல் துறை விரிவுரையாளர்) 2.  இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள் - தி.ஞானசேகரன் ('ஞானம்' ஆசிரியர்) 3.  ஈழத்துத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் - ஓர் அவதானிப்பு - தம்பு சிவசுப்ரமணியம் ('கற்பகம்' ஆசிரியர்) 4.  கிழக்கிலங்கைச் சிற்றிதழ்களின் வகிபாகமும் அதன் இலக்கியப் பங்களிப்பும் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ('நீங்களும் எழுதலாம்' ஆசிரியர்) 5.  பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்களின் இயக்கம் - சு.முரளிதரன் (தலைவர், ஹட்டன் தமிழ்ச் சங்கம்) 6.  இணைய இதழ்கள் - பார்வையும் பத...