Posts

Showing posts with the label செய்திக் கட்டுரை

கொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்

Image
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நிச்சயமற்ற தொழில் சூழலொன்று உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை நாம் அனுஸ்டிக்கிறோம்.  தொற்று நோயின் தீவிரத்தினால் பல்வேறு தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு பல்வேறு அரசாங்கங்களும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.  இதன் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களே தமது பணியாளர்களை தொழிலில் இருந்து நீக்கியிருக்கின்றன.  கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மையினால் பல்வேறு வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையையும் அவதானிக்க முடியும்.  சர்வதேச அளவில் படிப்படியாக குறைந்து வந்த வேலையின்மை வீதம் மீண்டும் சடுதியாக அதிகரித்திருக்கிறது.   Image copyrights reserved to respective owners only இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்கள் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கின்றன.  அது மட்டுமல்ல, தொழிலாளர் தினத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமையே...

பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?

Image
அண்மைக்காலமாக நாம் அதிகம் கேள்விப்படுவது சிசுக்கொலைகள் பற்றிய செய்திகளாக இருக்கின்றன. பிறந்த சில மணிநேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை, பிறந்த ஒரு வாரத்தில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட குழந்தை, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை என வித்தியாசமான செய்திகளை நாம் காண்கிறோம். பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்? தவறான உறவு, பொருளாதார சூழல், குடும்ப சண்டை, ஆண் - பெண் பேதம், வெள்ளை - கறுப்பு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.  Image Credit: https://www.financialexpress.com or Respective Owners only. அத்துடன், தாயோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ காவல்துறையினரால் கைது செய்யப்படுவதுடன் அந்த செய்தி குறித்த நமது தேடலும் முடிந்து போய்விடும். மீண்டும் அடுத்த வாரம்.... கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை என மற்றொரு செய்தி வரும். இதற்கு என்ன தீர்வு? கொலையாளியைக் கைது செய்வதால் தீர்வு கிட்டிவிடுமா? அல்லது படங்களில் காட்டப்படுவதைப் போல கொலையாளியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடலாமா? ...