பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?
அண்மைக்காலமாக நாம் அதிகம் கேள்விப்படுவது சிசுக்கொலைகள் பற்றிய செய்திகளாக இருக்கின்றன.
பிறந்த சில மணிநேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை, பிறந்த ஒரு வாரத்தில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட குழந்தை, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை என வித்தியாசமான செய்திகளை நாம் காண்கிறோம்.
பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?
தவறான உறவு, பொருளாதார சூழல், குடும்ப சண்டை, ஆண் - பெண் பேதம், வெள்ளை - கறுப்பு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.
![]() |
Image Credit: https://www.financialexpress.com or Respective Owners only. |
அத்துடன், தாயோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ காவல்துறையினரால் கைது செய்யப்படுவதுடன் அந்த செய்தி குறித்த நமது தேடலும் முடிந்து போய்விடும்.
மீண்டும் அடுத்த வாரம்....
கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை என மற்றொரு செய்தி வரும்.
இதற்கு என்ன தீர்வு?
கொலையாளியைக் கைது செய்வதால் தீர்வு கிட்டிவிடுமா?
அல்லது படங்களில் காட்டப்படுவதைப் போல கொலையாளியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடலாமா?
நமது குடும்ப அமைப்புகளில் காணப்படும் சிக்கல்தான் இந்த மாதிரியான கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணம். இளவயதுத் திருமணங்கள், கட்டாயத் திருமணங்கள், அவசரக் காதல்கள், திருமணமான அடுத்த மாதமே குழந்தைப் பேறு குறித்த நலம் விசாரிப்புகள், பிடிக்காத துணையுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டியேற்படும் நிலை, திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் எனப் பல காரணங்களை இதற்கு முன்வைக்கலாம்.
இந்த காரணிகள் குறித்து சமூகம் என்ற வகையில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். அதற்கான தீர்வுகளை அரசு இயந்திரத்தின் ஊடாக முன்வைத்து நிறைவேற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு அடுத்த நிமிடம் பற்றிய கனவு கிடையாது. இருக்கும் நிமிடத்தை இன்பமாக வாழத் தெரிந்தவர்கள் அவர்கள். அவர்களது உலகத்துக்கு உருவமோ எல்லையோ கிடையாது. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அவர்களது வாழ்க்கையை அழிக்க வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...
பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?
https://newsigaram.blogspot.com/2020/02/why-killed-childs-in-our-society.html
கொடுமையான விஷயம். இதற்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்.
ReplyDeleteநிச்சயமாக. அனைவரும் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.
Deleteகொடுமை...
ReplyDeleteஆம். பிஞ்சுகள் என்றும் பாராமல் வாழ்க்கையை முறித்து விடுகிறார்கள்.
Delete