என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு?

தமிழ்மணம் வலைத்திரட்டிக்கு என்ன ஆச்சு? தெரியவில்லை. கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 4.20க்கு இற்றைப்படுத்தியதாக திரட்டி கூறுகிறது. 

இப்போது 6 மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. 

ஆரம்பத்தில், தமிழ்மணத்தோடு இன்ட்லி மற்றும் தமிழ் 10 முதலிய வலைத்திரட்டிகள் செல்வாக்குச் செலுத்தின. ஒவ்வொரு திரட்டியிலும் எத்தனை விருப்பங்களைப் பெறுகிறார்கள் என்பதில் வலைப்பதிவர்களுக்கிடையே போட்டி நிலவும். 

இதன் காரணமாக வலைத்தளங்களுக்கு வாசகர்களை அழைத்துவருவது அத்தனை கடினமாக இருக்கவில்லை. 



வலைப்பதிவர் ஒருவர் முக்கிய திரட்டிகளில் தனது பதிவைப் பகிர்ந்தாலே குறைந்தது 50 பக்கப் பார்வைகளாவது வந்துவிடும். அத்துடன், தினமும் வலைப்பதிவர்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருந்தார்கள். 

என்றாலும், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய திரட்டிகளின் மறைவு வலையுலகத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் பல திரட்டிகள் முளைத்தாலும் தனிக்காட்டு ராஜாவான தமிழ்மணத்தோடு மோத முடியாமல் தடம் தெரியாமல் அழிந்து போயின. 

காலம் செல்லச்செல்ல வயதான சிங்கத்தைப் போல தமிழ்மணமும் களையிழந்தது. வாக்களிக்கும் பட்டிகள் செயலிழந்தன. பதிவுகளைப் பகிர்வதில் சிக்கல், புதிய வலைத்தளங்கள் இணைக்கப்படாமை என குறைபாடுகள் பெருகின. 

இந்தப் பாரிய சரிவினால் தாக்குப் பிடிக்க முடியாத வலைத்தளங்களும் இழுத்து மூடப்பட்டன. 

இப்போது தமிழ்மணம் முற்றாக செயலிழந்திருக்கும் நிலையில் பல வலைத்தளங்களின் உயிர் ஊசலாட ஆரம்பித்திருக்கிறது. 

தமிழ்மணத்தை நம்பித்தான் வலைத்தளங்கள் என்றில்லை. ஆனால் ஒரு திரட்டியானது வலைத்தளங்களுக்கு ஒரு தாயைப் போல செயற்பட்டது. வலைத்தளத்துக்கு தேவையானவற்றை வாரி வழங்கியது. 

ஆனால் இப்போது? 

என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு? 

தமிழ்மணத்தை மீட்டெடுக்க வலைத்தள ஆர்வலர்கள் முன்வர வேண்டும். வலைச்சரம் போன்ற வலைத்தளங்களும் மீள செயற்படுத்தப்பட வேண்டும். ஓலைச்சுவடிகளைப் போல வலைத்தளங்களும் வழக்கொழிந்து போய்விடக் கூடாது. 

என்ன செய்யலாம்? உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே. இந்த பதிவை முடிந்தால் உங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, அனைவரையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்போம். 

ஒன்றுபடத் தயாரா??? 

என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு? 
https://newsigaram.blogspot.com/2020/02/what-happened-to-tamilmanam.html

Comments

  1. அது வேலை செய்யாமல் பல வருடங்கள் ஆச்சே...!

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவ்வப்போது தொழிற்பட்டு வந்தாலும் இப்போது முழுவதுமாக செயலிழந்திருப்பது கவலையளிக்கிறது.

      Delete
  2. தமிழ்மணம் பராமரிப்பார் யாருமின்றி செயலிழந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டனவே
    முயன்றால் வலைச்சரத்தை மீட்டெடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆம். வலைச்சரம் போன்ற தளங்கள் எழுத்தாளர்களை ஒன்றிணைப்பதில் பெரும் பங்காற்றின. அதை மீட்டெடுப்பது நம் கடமை.

      Delete
  3. தமிழ்மணம் சில வருடங்களாகவே சரியாக இல்லை - நடுநடுவே கொஞ்சம் உயிர்த்தெழும் - சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் காணாமல் போய்விடும்.

    தனபாலன் மற்றும் நண்பர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விரைவில் அந்த முயற்சி பலன் தரும் என நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
    Replies
    1. புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ்மணத்தை அனைவரும் இணைந்து விலைக்கு வாங்கி நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete
  4. நானும் இது குறித்து முயற்சித்துப் பார்த்தேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஆர்வம் இல்லை. வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நிர்வாகத்தில் உள்ளவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. தமிழ்மணத்தை நடத்துவதற்கான நிர்வாகச் செலவுகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அத்துடன், வலைத்தளங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். அனைவரும் இணைந்து மாற்று நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

      Delete
  5. உண்மை. தமிழ் மணத்தின் இழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எல்லா திரட்டிகளும் போன பின்பும் தமிழ்மணம் செயற்பட்டது ஆறுதல் அளித்தது. இப்போது அதுவும் இல்லையே, என்னதான் செய்வதோ?

      Delete
  6. உண்மைதான். தமிழ்மணம் செயலிழக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. குறித்த காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வு நடவடிக்கைகளை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் வலைத்தளங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

      Delete
  7. நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. அதுவே அனைத்து வலைப்பதிவர்களினதும் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

      Delete
  8. தமிழ்மணம்போல் செயல் பட யாராவது முன்வருகிறார்களா சிகரத்துக்கு ஏதாஎண்ணம் இருக்கிறதா

    ReplyDelete
    Replies
    1. முன்பிருந்தே புதிய திரட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் நிதிப் பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் என்னால் சுயமாக உருவாக்க முடியவில்லை. காலம் கணிந்தால் அதை உருவாக்க தயாராகவே இருக்கிறேன். யாராவது உருவாக்கினாலும் முழு ஆதரவையும் வழங்குவேன்.

      Delete
  9. தமிழ்மணத்தை இனி எதிர்பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழை மணக்கச் செய்த தமிழ்மணம் இல்லாவிட்டால் வேறு யார்தான் மணக்கச் செய்வதோ?

      Delete
  10. பல பதிவர்கள் எழுதுவதில் சோர்வடைந்து விட்டனர் நானும்கூட...

    ReplyDelete
    Replies
    1. ஆம். நானும் கூட நடுவில் சோர்வடைந்து விட்டேன். இப்போது புத்துணர்ச்சியுடன் வந்திருக்கிறேன். ஆனாலும், தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி அத்தியாவசியத் தேவை என்றே கருதுகிறேன்...

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!