இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது.
![]() |
Image Credit: Its Respective Owners only. |
இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.
இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும், இலங்கைத் தமிழ் ஊடகங்களிலும், பிரதானமாகப் பேசப்பட்டது, தமிழர்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு இந்திய பிரதமர் மோடி தெரிவித்த விடயமே.
காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, யுத்தக்குற்ற விசாரணை, அத்துமீறிய குடியேற்றம், அதிகாரப் பகிர்வு என பல்வேறு விடயங்கள் தொடர்பில், தமிழர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் நிலை தொடரடந்து நீடித்து வருகிறது.
போதாக்குறைக்கு, தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாத விவகாரம் வேறு சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது.
எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதனை லாவகமாகக் கையாண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், இந்தியா சென்ற மஹிந்த ராஜபக்ஷ அளித்த நேர்காணல் ஒன்றில், சீனாவின் பட்டுப் பாதைத் திட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், பட்டுப்பாதைத் திட்டம் எமது நாட்டுக்கு நன்மையையே தந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், இலங்கைக்கான சீனாவின் கடன் திட்டங்களுக்கும் ஆதரவான பதில்களையே மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இந்தியா எமது உறவு என்றும் ஏனைய நாடுகள் எமது நண்பர்கள் எனவும் வலியுறுத்தியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. இந்த பதிலுக்கு மேலோட்டமான வரைவிலக்கணம் ஒன்றை நாம் வழங்க முடியாது. இதை பல உள்ளர்த்தங்கள் பொதிந்த ஒரு கூற்றாகவே நாம் நோக்க வேண்டியிருக்கிறது.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் குறைந்த பின்னர் இலங்கை ஜனாதிபதியின் சீனாவுக்கான விஜயம் இடம்பெறும் வேளையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இந்திய விஜயங்களுக்கான பிரதிபலிப்புகளை நாம் காணமுடியும்.
இதேவேளை, இந்தியா வலியுறுத்தியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசு செயற்படுமா இல்லையா என்பதை எதிர்ரும் பொதுத் தேர்தல்தான் எமக்கு தெளிவுபடுத்தப் போகிறது என்பதால் அதுவரை நாமும் காத்திருப்போம்.
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி
https://newsigaram.blogspot.com/2020/02/mahinda-rajapaksha-india-visit-message-to-us.html
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteமிக்கநன்றி, வருகைக்கும் கருத்துரைக்கும்....
Deleteஎண்ணங்கள் ஒத்துப்போனால்தான் கருத்துரைகள் வரும்போல
ReplyDeleteஇருக்கலாம். அத்துடன் இந்திய வலைப்பதிவர்களே அதிகமாக இருப்பதால் இலங்கை விவகாரத்தில் - அதுவும் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். நன்றி ஐயா.
Deleteதகவல்கள் நன்று.
ReplyDeleteநல்லதே நடக்கட்டும்.
வழமை போல இப்போதும் அதையே நாம் நம்பியிருப்போம். நன்றி நண்பரே.
Delete