உங்கள் உள்ளம் திறந்து நண்பனிடம் சொல்லுங்கள்
இலங்கை மக்களின் மனங் கவர்ந்த "வெற்றி" வானொலியில் திங்கள் - வெள்ளி இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிவரும் 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி பற்றி தான் இந்தப் பதிவு பேசப் போகிறது. உங்கள் மனதில் கஷ்டமா? துக்கம் தாளாமல் அவதிப் படுகிறீர்களா? என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு நல்ல நண்பன் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உடனே 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சோகத்தை முழுமையாக, சரியாக பகிர்ந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்ததொரு களமாகத் திகழ்கிறது. ஏனைய வானொலிகளைப் போல ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் துயரங்களை அடக்க வேண்டிய அவசியமில்லை. மனம் திறந்து என்னவெல்லாம் பேச நினைக்கிறீர்களோ அத்தனையையும் பேச 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி மிகப் பொருத்தமானது. மிக நீண்ட காலமாக ஏராளமான நண்பர்கள் தங்கள் மனதை அடைத்துக் கொண்டிருந்த துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். நிகழ்ச்சியைக் கேட்டாலோ , தொடர்பு கொண்டு உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொண்டாலோ உங்களுக்கும் நிச்சயம் ...