Posts

Showing posts from January, 2020

இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

Image
'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!" தெரிவித்துக் கொள்வதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இன்றைய நாள் மிக இனிமையான நாளாகவும் நல்ல ஆரம்பங்களுக்கான ஒரு தொடக்கமாகவும் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.  உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசச் செய்யும் எல்லா நிகழ்வுகளுக்குமான ஆரம்பம் இன்றைய நாளாக அமையட்டும்.  பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் மனக் கசப்புகள் நீங்கவும் துன்பங்கள் நீங்கவும் மனம் அமைதி பெறவும் சிந்தனை தெளிவு பெறவும் புதிய எண்ணங்கள் உருவாகவும் சாதனைகள் படைக்கவும் மனமார வாழ்த்துகிறோம்.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழராகிய நம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி வீசச் செய்யட்டும் என உங்கள் அனைவருக்கும் 'சிகரம்' தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!  https://newsigaram.blogspot.com/2020/01/happy-tamil-thai-new-year.html  #Thai_Pongal #Happy_P

விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

Image
விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.  ஆம்.  உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது.  ஏன், எதற்கு, எப்படி என்பதையெல்லாம் இந்த சிறப்புத் தொகுப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)  https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html #World #Plane #Travel #Flight #Accident #MissileAttack #USA #Iran #Iraq #Malaysia #Ukraine #Crimea #Russia #Malaysia #Boeing #BlackBox #Sigaram #Segment 

2020ஆம் ஆண்டில் சிகரம்...!

Image
வணக்கம் சிகரம் வாசகர்களே...!  நலம், நலமறிய ஆவல்.  மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் வலைத்தளப் பக்கம் வந்திருக்கிறோம். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வலைத்தளத்தை தொடர்ந்து நடத்திச் சென்றிட முடியவில்லை. இன்னல்கள் வருவது வாடிக்கை. அதை வெல்வது தானே வாழ்க்கை? இதோ, மீண்டும் நாங்கள்... Image Credit to its respective owners only இதோ, அதோ என்று எதிர்பார்த்திருந்த 2020 வந்துவிட்டது. ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு நமக்கு.  புதிய ஆண்டு, புதிய புதிய விடயங்களுடன் துவங்கியிருக்கிறது. நாமும் புதியன படைப்போம், புது யுகத்தை உருவாக்குவோம்.  2006ஆம் ஆண்டில் ஆரம்பமான எமது ஊடக பயணம் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி 2020ஐ நோக்கி நகர்ந்திருக்கிறது.  எப்போதும் போல இப்போதும் உங்கள் ஆதரவுடன் பயணத்தை ஆரம்பிக்கக் காத்திருக்கிறோம்.  வாருங்கள், கைகோர்த்துப் பயணிக்கலாம்... புதிய யுகத்தை நோக்கி...!!!