2020ஆம் ஆண்டில் சிகரம்...!
வணக்கம் சிகரம் வாசகர்களே...!
நலம், நலமறிய ஆவல்.
மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் வலைத்தளப் பக்கம் வந்திருக்கிறோம். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வலைத்தளத்தை தொடர்ந்து நடத்திச் சென்றிட முடியவில்லை. இன்னல்கள் வருவது வாடிக்கை. அதை வெல்வது தானே வாழ்க்கை? இதோ, மீண்டும் நாங்கள்...
![]() |
Image Credit to its respective owners only |
இதோ, அதோ என்று எதிர்பார்த்திருந்த 2020 வந்துவிட்டது. ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு நமக்கு.
புதிய ஆண்டு, புதிய புதிய விடயங்களுடன் துவங்கியிருக்கிறது. நாமும் புதியன படைப்போம், புது யுகத்தை உருவாக்குவோம்.
2006ஆம் ஆண்டில் ஆரம்பமான எமது ஊடக பயணம் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி 2020ஐ நோக்கி நகர்ந்திருக்கிறது.
எப்போதும் போல இப்போதும் உங்கள் ஆதரவுடன் பயணத்தை ஆரம்பிக்கக் காத்திருக்கிறோம்.
வாருங்கள், கைகோர்த்துப் பயணிக்கலாம்... புதிய யுகத்தை நோக்கி...!!!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஆண்டின் முதல் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Delete