Posts

Showing posts from 2012

போய்வா நண்பனே.....!

Image
வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இது. இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கும். ஒருவாறு உலக அழிவுப் பீதி ஒழிந்துவிட்டது. அப்படியும் அதை விடாமல் 2017 ஜனவரி 01 அன்று உலகம் அழியும் எனக் கூறிக் கொண்டு ஒரு குழு புறப்பட்டிருப்பதாகத் தகவல். வேணா... விட்டுருங்க...... உலகம் அழுதுரும்..... என்னளவில் மத்திம பலன்களைத் தந்த வருடம் இது. எண்ணியதில் நடக்காமல் போனவை பல, நடந்தவை சில. வழமைக்கு மாறாக ஆண்டிறுதி சிக்கல் தருவதாக அமைந்து விட்டது. வலைத்தளத்திற்கு மீள் அறிமுகம் தந்து உள்நுழைந்த போது ஆரோக்கியமான முன்னேற்றம் இவ்வருடத்தில் கிட்டியுள்ளது. வலைத்தளம் பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்னும் இனிக்கும் நினைவுகளும் கசக்கும் தருணங்களும் மனதில் முகம் காட்டிச் செல்கின்றன. இந்த ஆண்டு எனக்கு சில பாடங்களையும் கற்பித்துச் சென்றிருக்கிறது. சற்றே பயத்துடன் 2013 ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடத்தின் மீதும் பலநூறு எதிர்பார்ப்புகள். எவை எவை நனவாகும் என்பத

உங்களுடன் சில நிமிடங்கள்.....!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. நலமா? நலம் வாழ வாழ்த்துக்கள். கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நமது தொடர் பதிவை ஆரம்பித்தோம். கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 40 பதிவுகள். 46 பதிவுகளை இடுவதாக இருந்தபோதும் 40 பதிவுகளை மட்டுமே இட முடிந்தது. கிட்டத்தட்ட நினைத்ததை முடித்துவிட்ட திருப்தி. தொடர் பதிவுக்கான நிறைவுப் பதிவாக இது அமைகிறது. இத்தொடர் பதிவு எனக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. சில தரப்படுத்தல்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறேன். தரப்படுத்தல்களுக்காக எழுதவில்லை என்றாலும் அதனூடான முன்னேற்றத்தில் மனதோரமாய் ஒரு மகிழ்ச்சி. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புதிய நண்பர்களை "சிகரம்" தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். எனது இரு பதிவுகள் 4tamil media என்கிற இணையத்தளத்தில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. அத்தளத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இரு பதிவுகளும் அத்தளத்தின் இணைப்புடன் இங்கே: 01. எனது பதிவு: எதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம்! - இணையம் ஒரு தகவல்  4tamil media தளத்தில்: எதிரே மின்னஞ்சல் திருடர்கள்! பாதுகாப்பான இணையப் பாவன

வாசிக்க.... நேசிக்க.....

Image
வணக்கம் வாசகர்களே. இன்றைய பதிவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் இன்று நான் பார்த்த தளங்களில் எனக்குப் பிடித்த பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தால் சென்று பார்த்து அங்கும் கருத்துரையுங்கள். 01. பாரதியும் சூப்பர் ஸ்டாரும் - கவிதை. தளம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா. 02. உங்களால் முடியும்! என்னால் முடியாது!! (நகைச்சுவை) - நகைச்சுவைப் பதிவு. தளம்: அருணா செல்வம்  03. உலகம் அழியப்போகுதாம்! பயமா இருக்கு! - உரைநடைப் பதிவு. தளம்: நினைவில் சில.... கனவுகள்! 04. மாற்றுத் திறனாளிகள் - கட்டுரை  தளம்: வெங்கட் நாகராஜ்  இன்னிக்கு இது போதும். (இன்னும் வேணும்னாலும் நா இவ்ளோ தான் வாசிச்சேன்.) மீண்டும் சந்திப்போம். (மீண்டுமா? :) ) அன்புடன், சிகரம்பாரதி.

டுவிட்டர் @newsigaram

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று நான் ரசித்த சில ட்வீட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படித்து ரசியுங்கள். பிடித்தவர்கள் என்னைப் பின் தொடருங்கள். @#  காபியின் சுவைக்கு சிக்கரி கலப்பது போல்தான்...வாழ்க்கைக்கு கடவுள்...#புதுமைப்பித்தன் @#  உண்மையான பயணிக்குத் தான் எங்குச் செல்கிறோமென்று தெரியாது#காலச்சுவடு @#  7+8=ஏழெட்டு... 8+7=????:-) @#  சிறை அறையிலிருந்து தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் பொழுதே கண்களை மூடி விடுவார்கள் # படித்தது! @#  புள்ளியை மிக சிறிய வட்டமென்போர் வட்டத்தை பெரிய புள்ளி என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும் @#  புனிதர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.,அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் கை பட்டதும்தான் அவை கல்லாகின என்று ! @#  காதலுக்கு நேர்ந்து விட்ட ஆடு நான். கண்களெனும் கத்தி ஏந்தி காத்து நிற்கும் கடவுள் நீ @#  யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். @#  அம்மாவின் சந்தோஷம் துக்கம் இரண்டிலும் என் மீது எறியப்படும் வார்த்தைகள்..ஏன்டா என் வயித்துல பொறந்து தொலைச்ச? @#  உன்னை அழைக்க அல்ல என் தலையணைக

அன்னைத் தமிழ்

Image
வணக்கம் அன்பு ரசிகர்களே. முகநூலில் " எழுத்தோலை பக்கம் " நடாத்தும் புத்தாண்டுக் கவிதைப் போட்டி - 2013 க்காக எழுதப்பட்ட கவிதை இது. அவர்கள் வழங்கியுள்ள மூன்று தலைப்புகளில் "அன்னைத் தமிழின் இன்றைய நிலை" என்ற தலைப்புக்காக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தரப்பட்ட மூன்று தலைப்புகளிலும் எழுதுதல் கட்டாயமாகும். இக்கவிதைப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் முகநூல் வாயிலாக " எழுத்தோலை பக்கம் " இனை அணுகவும். இதோ கவிதை. அன்னைத் தமிழின் இன்றைய நிலை  [அன்னைத் தமிழ் - நான் இட்ட தலைப்பு] மம்மியென்பார் டாடியென்பார்  மரியாதை அதில்தான் என்பார்  அன்னைக்குக் கிழிந்த ஓலைப் பாயும்  அந்நிய மொழிக்கு அரியணையும் தருவார். சொல்லுக்குச் சொல் சுகமென்பார்  செந்தமிழின் சுவையறியார்  அக்கரைக்கு இக்கரைப் பச்சை  அந்நிய மொழியில் ஏன் இத்தனை இச்சை? ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும்  செய்ததுதான் சாதனை என்பார்  தொல்காப்பியமும் புறநானூறும்  தொலையட்டும் என்பார்  தாய்ப்பாலுடன் சேர்த்து  தமிழறிவும் புகட்டிடுவீர் தாய்மாரே  அன்னைக்குப் புரியாதோ அன்னையின் வே

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!

Image
பல நிறைவேறாத கனவுகளுக்குச் சொந்தக்காரனான ஒரு மாபெரும் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் நினைவு. மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். எட்டயபுரத்துக் கவிஞன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பது உட்பட தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவன் கண்ட கனவுகள் பலவும் நிராதரவாகக் கிடக்கின்றன. முகநூல், டுவிட்டர் மற்றும் இன்னபிற தளங்களிலும் எல்லோரும் பாரதி புகழ் பாடுகின்றனர். எல்லாம் இன்றிரவோடு சரி. நாளைய ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு எல்லாம் மறந்துபோய்விடும். வாருங்கள், ஒரு பாரதி பாடலைப் பார்த்துவிட்டுப் பேசலாம். (சிந்து நதியின்.......) இன்று மட்டுமில்லை, என்றுமே போற்றப்பட வேண்டிய கவிஞன் பாரதி. மண் விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவன். பாரதியைப் பற்றி இன்றளவிலும் ஏராளமான ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் தரவு ரீதியான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இனி பாரதியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமானால் புதியதொரு கோணத்தை கண்டுபிடித்தாக வேண்டும். ஆயினும் என்ன பயன்? பலருக்கு கலாநிதிப் பட்டங்களையும் இன்னபிற கௌரவங்களையும் பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளதே தவிர சமூகத்தின் பா

குவியம்

Image
வணக்கம் அன்பு ரசிகர்களே! கிரிக்கெட்டைப் போலவே திரையுலகத்தையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் - தொடர் நாடகங்கள். ஒரு நாள் கிரிக்கெட் - திரைப்படம். இருபது-20 போட்டி - குறுந்திரைப்படங்கள். இன்று நான் பேசப்போவது ஒரு குறுந்திரைப்படத்தைப் பற்றி. பொதுவாகவே குறுந்திரைப்படங்களைப் பார்ப்பதில் நம்மவர்கள் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. நானும் தான். அண்மையில் எனக்கு இரண்டு குறுந்திரைப்படங்களை YOUTUBE வாயிலாகப் பார்க்கக் கிடைத்தது. அதில் என்னைக் கவர்ந்தது ஒன்று மட்டுமே. "குவியம்" ஒரு காதல் கதை. குறுந்திரைப்படத்திற்கான அம்சங்கள் அழகாய்ப் பொருந்திய ஒரு கதை. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் விறுவிறுப்பு, கொஞ்சம் காதல் - அதுதான் குவியம். ஒரு தொழில்முறை புகைப்படப்பிடிப்பாளனின் கதை. தொய்வில்லாத கதை பலம். பின்னணி இசையும் காட்சியமைப்பும் போதுமான அளவுக்கு இருக்கிறது. கதைச் சுருக்கமெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் சுருக்கமான கதைதானே குறுந்திரைப்படத்தின் பிரதான அம்சமே. இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல முனைந்த விடயங்கள் இவை தான். 01. குறுந்திரைப்படம் என்பது திரைப்படத்திலும்

இன்னிக்கு பதிவு போடலை!

இன்னிக்கு பதிவு போடலைன்னு சொல்லியும் நம்ம பதிவைப் பார்த்தே தீருவேன்னு வந்திருக்க உங்க எல்லாருக்கும் வணக்கம். ஏதாச்சும் சொல்லிட்டுப் போகலாமேன்னு பார்த்தா மரமண்டைல ஒண்ணுமே தோன மாட்டேங்குது. அது சரி. பானைல இருந்தாதானே அகப்பைல வரும்குறீங்களா? உங்ககிட்ட ஒரு கேள்வி. எல்லாரும் உலகம் அழியப்போகுதுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. ஒரு வேளை அப்படி அழிஞ்சா உங்ககூட நீங்க கொண்டு போக விரும்புற ஒரு பொருள் எது? பார்க்கலாம், எத்தன பேரு பதில் சொல்றீங்கன்னு?

ஒரு கோப்பைத் தேநீர்

Image
வலைத்தள வாசகர்களுக்கு வணக்கங்கள் பல. இன்று பேசப் போகும் விடயத்திற்கு போவதற்கு முன்னால் ஒரு செய்தி. கடந்த 3 ஆம் திகதியுடன் குறுஞ்செய்திச் சேவை 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களும் வருத்தங்களும் உரித்தாகட்டும். அது தொடர்பான சிறப்புக் கட்டுரை "வீரகேசரி" இணையத்தளத்தில் இருந்து: SMS sevai aarampiththu 20 varudangal! : இதுவொரு புது அனுபவம் . ஒரு கோப்பைத் தேநீர்! ஏற்றுமதிக்கான தேயிலைப் பொதியிடல் நிறுவனமொன்றில் உதவி மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் (Asst Material Controller) ஆக நான் பணிபுரிகிறேன். ஆகவே எனது தொழில்சார் பதிவொன்றை எழுதவேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதனால்தான் இந்தப் பதிவு. விளக்கப் படங்களுடன் குறிப்புகளும் இடம்பெறும். படித்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். 01. தேயிலைப் பயிரிடல்  02. கொழுந்து பறித்தல்  மேலதிக விபரங்களுக்கு: http://www.thinakaran.lk/2010/10/18/_art.asp?fn=d1010181&p=1 03. கொழுந்து நிறுத்தல்  04. தேயிலையைப் பதனிடல்  05. பொதியிடலுக்கான தேயிலை விநியோகம். இது 40

சொய்............... சொய்...............

Image
வணக்கம் அன்பு சொந்தங்களே! இன்று அண்மையில் வெளியான என் மனம் கவர்ந்த பாடல்கள் பற்றி பகிர்ந்துகொள்ளப் போகிறேன். வாருங்கள் போகலாம். "கும்கி" இதுதான் இன்றளவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ள திரைப்படம். 5 காதல் பாடல்கள். அத்தனையும் அழகான மெல்லிசைப் பாடல்கள். டி.இமானின் இசையில் பிரபுசாலமனின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படமே கும்கி.  நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிகை லட்சுமி மேனனும் அறிமுகமாகும் திரைப்படம் இது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன. இதுவரை கேட்டதில் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. ஒன்று சொல்லிட்டாளே அவ காதல பாடலும் மற்றையது சொய்... சொய்... பாடலும் தான். இரண்டுமே அருமையான காதல் கானங்கள். இந்த வருடத்தின் முத்தான பாடல்கள் இவைதான் என்றால் கூட மிகையில்லை. சொல்லிட்டாளே அவ காதல பாடலை ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கௌஷல் ஆகியோரும் சொய்.. சொய்.. பாடலை மகிழினி மணிமாறனும் பாடியுள்ளனர்.யுகபாரதியின் பாடல் வரிகள் அருமை. ஏனைய பாடல்கள்:

எதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம்! - இணையம் ஒரு தகவல்

Image
வணக்கம் அன்பார்ந்த வலைத்தள வாசகர்களே. நமது அன்றாட வாழ்க்கையில் இணையம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சாதாரண மக்கள் தொடங்கி பெரும்புள்ளிகள் வரை அனைவரையும் இணையம் கட்டிப்போட்டிருக்கிறது. இணையத்தள பாவனையானது சில முக்கிய காரணங்களைக் கொண்டமைகிறது. அவை: 01. சமூக வலைத்தளம் 02. மின்னஞ்சல் 03. இணையவழித் தொலைத்தொடர்பாடல் 04. செய்திகள் (அனைத்து வகையானவையும்) 05. வலைப்பூக்கள் 06. தரவிறக்கங்கள் 07. தகவல் தேடல் எந்த வகையான இணையப் பாவனையாக இருந்தாலும் இந்த 7 வகைகளுக்குள் அடங்கிவிடும் என்பது எனது நம்பிக்கை. இந்தக் கட்டுரைத் தொடரானது பாதுகாப்பானதும் இலகுவானதுமான இணையப் பாவனைக்கு வழிகாட்டும் ஒரு தொடராக அமையவிருக்கிறது. முதலில் மின்னஞ்சல் பாவனை பற்றிப் பார்ப்போம். இணையம் பாவிப்போரில் பெரும்பாலானோருக்கு ஏதோவொரு மின்னஞ்சல் கணக்கு இருக்கும். வர்த்தகம், தனிப்பட்ட மற்றும் பொதுப் பாவனை கருதி மின்னஞ்சல்கள் பாவிக்கப் படுகின்றன. இந்த மின்னஞ்சல் கணக்குகள் மூலம் தனிப்பட்ட தகவல்களும் பரிமாறப்படுவதால் நமது பாதுகாப்பானது கேள்விக்குள்ளாகின்றது. இணையத்தள குற்றங்களில் 25 வீதமானவை மின்னஞ்சல் திருடர்களின

நீ - நான் - காதல் - 03

Image
இரண்டு கவிதைகள் 01. சூரிய ஒளியைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பது போல என் இதயமும் உன்னிடமிருந்து காதலைப் பெற்று உயிர்வாழ்கிறது 02. நீ என்னைக் கட்டியணைத்து முத்தம் தந்தபோதுதான் புரிந்தது எனக்கு மட்டும் இனிப்புச் சுவை நரம்பு உதட்டில் தான் இருக்கிறதென்று

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்! - 02

வணக்கம் வாசகர்களே! தொடர் பதிவின் பாதியைத் தாண்டி விட்டோம். இன்னும் 18 நாட்கள் மட்டுமே. உலக அழிவுக்கல்ல. நம் தொடர் பதிவின் நிறைவுக்கு. அதுவரை இடையூறுகள் இன்றி தொடர்பதிவுப் பயணம் சென்றிட உங்கள் ஆதரவை வேண்டி பதிவுக்குள் நுழைகிறேன். அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள் - 01 பகுதி - 02 கடந்த பதிவில் அரசியல்வாதியாக விரும்பும் ஒருவருக்கு அடிப்படைத் தகுதியாக கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். இன்னும் என்னென்ன தகுதிகள் தேவை? 02. நாட்டின் தலைவர் கட்சி சாராதிருத்தல்  நம் உலக நாடுகளில் பொதுவாக நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு கட்சியின் முக்கியஸ்தராக காணப்படுவது வழமை. ஆனால் என்னைப் பொறுத்தவரை கட்சி சாராத ஒருவர் நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்பதன் மூலமே மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படும். அப்போது அவர் சகல கட்சிகளுக்கும் நடுநிலையானவராக இருப்பதுடன் கட்சியின் அழுத்தங்கள் இன்றி முடிவெடுக்கக் கூடியவராகவும் இருப்பார். ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும்

இது சாதனையாளர்களின் நாள்!

Image
வணக்கம் வாசகர்களே! இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும்? மேலும் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர், அங்கவீனர்கள் மற்றும் உடல் இயலாதவர்கள் என்று பலவாறாக அழைத்த வழக்கம் இப்போது மாறிவருகிறது. ஆனால் இன்னமும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அவ்வாறானோரை அவமானப்படுத்தும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது என்பது வேதனைக்குரிய செய்தி. மாற்றுத்திறனாளிகளும் நம்மைப் போல் சமூகத்தின் அங்கத்தவர்களே என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது. அதனை நாம் புரிந்துகொள்ளாவிட்டாலும் கூட புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சில இடங்களில் பெற்றோரே இவர்களை வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலைகளை கண்கூடாகக் காண நேரும்போது மனம் படும் பாடு இதயத்தில் ஈரமுள்ள யாவருக்கும் புரியும். இந்த நாளைப் போல வருடத்தில் ஒரு நாள் மட்டுமில்லாது வருடத்தின் அத்தனை நாளிலும் நாம் அவர்களுக்கு மரியாதை செய்தல் வேண்டும். முகநூல் பக்கத்திலும் பலர் தமது ஆதரவுக் குரல்களைப் பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பேசுவதோடு மட்டும் நின்றுவிடாது செயலிலும் நிரூபிக்க வேண்ட

பிரிவொன்றே முடிவல்ல

Image
பிரிவு என்பது முடிவல்ல  நம் வாழ்க்கை நாவலின்  இன்னொரு அத்தியாயமே  சோகங்கள் சுகமாகும்  இன்பங்கள் வரமாகும்  நினைவுகளே நம் உறவாகும்  பிரிவு தரும் அனுபவங்களை  உறவு தருவதில்லை  முதன்முதலாய் நீ எழுதி நான் ரசித்த கவிதை  முதன்முதலாய் எனக்காய் நீ  அழுத ஒரு துளி கண்ணீர்  முதன்முதலாய் நாம் போட்ட  சின்னச் சண்டை  முதன்முதலாய் என் வீட்டில் நீ  கால் வைத்த அந்த மணித்துளிகள்  இவை எவையுமே என்  நினைவுகளிலிருந்து  கடைசிவரை நீங்கப்போவதில்லை  ஆனால் முதன்முதலாய்  நமக்கு ஓர் பிரிவு வந்தபோது  நீ கடைசியாய் பார்த்த அந்த  ஓராயிரம் அர்த்தமுள்ள  மௌனப்பார்வை  என்னுள்ளே பசுமரத்தாணியாய்  புதைந்து போய்விட்டது  அந்த ஓரிரு வினாடிகளில்  எம் கண்கள்  நமக்கே தெரியாமல்  ஏதேதோ பேசியதை நீ அறிவாயா ? பிரிவுகள் நிரந்தரமல்ல  இனிமைகளே வாழ்வுமல்ல  அன்பு என்றும் தீர்வதுமல்ல  எனக்கு நீ  தாயாய்...... சகோதரியாய்  தோழியாய் இருந்த  அந்த கணங்களை  எங்கனம் மறப்பேன்  இனியும் கவி சொல்ல  நான் விரும்பவில்லை  ஏனெனில்  நாம் பூவுலகில்  எங்கோ ஓர

அதிகாலைக் கனவு - சிறுகதை

Image
அமெரிக்காவின் நியுயோர்க் நகரம். நேரம் மாலை ஆறு மணி. மின்விளக்குச் சூரியன்கள் தமது ஒளியைப் பரப்ப ஆரம்பித்திருந்த தருணம் அது. இரட்டைக் கோபுரம் என்று சொல்லக் கூடிய வகையிலான ஒரு அலுவலகக் கட்டிடம். கிட்டத்தட்ட ஐம்பது மாடிகளாவது இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னுடைய அறை நாற்பத்து நான்காம் மாடியில் அமைந்திருந்தது. எட்டு எனக்கு ராசியான இலக்கம் என்ற ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்து வருகிறது. எனவேதான் எனது அறையை நாற்பத்து நான்காம் மாடியில் மாடி எண் எட்டு வருமாப்போல அமைத்துக் கொண்டேன். நான் யார் என்று கேட்கிறீர்களா? எனது அறையை அமைக்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கும் "வல்லமை"யைப் பெற்றிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே, இந்தப் பாரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவன் நான் தான் என்று. "டொக்....... டொக்......." - எனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. "யெஸ்... கம் இன்....." - கதவைத் தட்டியவரை உள்ளே அழைக்கிறேன். எனது பிரத்தியேகச் செயலாளர் டயானா உள்ளே வந்து நின்றாள். டயானா மிக அழகானவள். அத்துடன் புத்திக் கூர்மையும் நிறை

முக நூல் முத்துக்கள் - 03

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள் மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்: அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்! 01. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”. சிறுவன் முகத்தில் வியப்பு. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”. நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! 02. நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு கொல்லுகின்ற துன்பம் ஒ

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!

வணக்கம் வாசக உள்ளங்களே! இன்று நாம் அடுத்த தலைமுறைக்கான அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம். இன்றைய அரசியலானது சாக்கடை அரசியல் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தநிலை மாறாதா என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் நம்மால் என்ன முடியும் என்கிற இயலாமை எண்ணம் காரணமாக வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக்கொள்கிறோம். வாக்குரிமை நம்கையில் இருக்கிற வரையில் நம்மால் அரசியலில் எதுவும் செய்ய முடியும். அதற்கு சமூகத்தின் ஒற்றுமையும் துணிச்சலும் தேவை. நமக்கான எதிர்கால அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொண்டால் விரைந்து செயலில் இறங்க வசதியாயிருக்கும் அல்லவா? பதிவில் தேவையான இடங்களில் பொருத்தமான திருக்குறள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம். 1.கல்வி அறிவு  நம் அரசியல் வாதிகளில் பலருக்கு கல்வியறிவு என்பதே கிடையாது. இதனால் அமைச்சுப் பதவிகள், அரசாங்க சொத்துக்கள் மற்றும் மக்கள் வரிப்பணம் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல்வாதியொருவர் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிக்கும்போது அவரது கல்வித்தகைமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்படல் வ

கற்பிழந்தவள்

Image
கனவில் கூட  கண்டதில்லை இப்படியொரு  காட்சியை  எண்ணியும் பார்க்கவில்லை  எனக்கிப்படி நேருமென்று  அன்பு காட்டி  அரவணைத்த கை  காமம் கொண்டு  கட்டியணைக்கும் என்று  பிறந்தநாள் பரிசாக - எனக்குப்  பிடித்த ஆடையைப்  பரிசாக அளித்தவரே - அதைப்  பறித்து துச்சாதன வேடம் கொள்வாரென்று  பள்ளிக்கூடம் சென்று வந்தேன்  பல கலைகள் கற்றுவந்தேன்  அனைவரிலும்  அன்பு பாராட்டினேன்  நல்லவர்கள் எல்லாம்  நம்மோடு தான் இருக்கிறார்கள் என  நம்பிக்கை கொண்டிருந்தேன்  பொய்முகம் கொண்டிங்கு  போலி வாழ்க்கை வாழ்வதேனோ  சொந்தம் என்று உறவாடும் நீங்களே  சுகம்தேடி எம்மேனி தொடலாமா  சிறுமியர் நாங்கள்  சிறுபாவமும் அறியாதவர்கள்  உலகத்தை  உங்கள் மூலம்  அறிந்துகொள்ள  ஆவலாய் இருந்தோம்  ஆனால் நாங்கள் சுயமாகவே  அறிந்துகொண்டோம் உங்கள்  அனைவரின் முகத்திரைகளும்  அகற்றப்பட்டதன் மூலம்  கன்னித்தன்மை  கொண்டவளைத்தான்  கல்யாணம் செய்யவேண்டும்  என்று  எதிர்பார்க்கும் நீங்கள்  எங்கள்