அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்! - 02
வணக்கம் வாசகர்களே! தொடர் பதிவின் பாதியைத் தாண்டி விட்டோம். இன்னும் 18 நாட்கள் மட்டுமே. உலக அழிவுக்கல்ல. நம் தொடர் பதிவின் நிறைவுக்கு. அதுவரை இடையூறுகள் இன்றி தொடர்பதிவுப் பயணம் சென்றிட உங்கள் ஆதரவை வேண்டி பதிவுக்குள் நுழைகிறேன்.
ஒரு நல்ல அரசு என்பது அதன் நடுநிலைமைத் தன்மையிலேயே தங்கியுள்ளது. ஆகவே பக்கச்சார்பின்றிய ஒரு தலைவர் நாட்டிற்கு அமைய வேண்டுமெனில் அவர் கட்சி சார்பின்றியவராக இருத்தல் அவசியம்.
03. இளைஞர் அரசியல்
பகுதி - 02
கடந்த பதிவில் அரசியல்வாதியாக விரும்பும் ஒருவருக்கு அடிப்படைத் தகுதியாக கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். இன்னும் என்னென்ன தகுதிகள் தேவை?
02. நாட்டின் தலைவர் கட்சி சாராதிருத்தல்
நம் உலக நாடுகளில் பொதுவாக நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு கட்சியின் முக்கியஸ்தராக காணப்படுவது வழமை. ஆனால் என்னைப் பொறுத்தவரை கட்சி சாராத ஒருவர் நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்பதன் மூலமே மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படும். அப்போது அவர் சகல கட்சிகளுக்கும் நடுநிலையானவராக இருப்பதுடன் கட்சியின் அழுத்தங்கள் இன்றி முடிவெடுக்கக் கூடியவராகவும் இருப்பார்.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
வேந்தமை வில்லாத நாடு.
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.
(பொருட்பால், நாடு)
ஒரு நல்ல அரசு என்பது அதன் நடுநிலைமைத் தன்மையிலேயே தங்கியுள்ளது. ஆகவே பக்கச்சார்பின்றிய ஒரு தலைவர் நாட்டிற்கு அமைய வேண்டுமெனில் அவர் கட்சி சார்பின்றியவராக இருத்தல் அவசியம்.
03. இளைஞர் அரசியல்
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் ஒதுங்கிக் கொண்டு புதிய தலைமுறைக்கு வழிவிட வேண்டும். செயல் திறன் மிக்கவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும். புதியவர்கள் அரசியலில் ஈடுபட சான்றோர் அவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும்.
இது வரை மூன்று பிரிவுகளில் என் எண்ணங்களை பகிர்ந்திருக்கிறேன். மூன்றும் சரியானது தானா என அறிய விழைகிறேன். மேலும் இந்த மூன்று மட்டும் போதாது. மிகுதி என்னவாக இருக்கும் என்ற உங்கள் எண்ணங்களையும் அறிந்துகொண்டு இப்பதிவைத் தொடரலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்கள் பகிரப்படும் பட்சத்தில் இன்னும் விரிவாகப் பேசலாம்.
அன்புடன்,
சிகரம் பாரதி.
உங்களுடைய விதிமுறைகள் எல்லாம் நல்லாருக்குங்க, ஆனால் நடைமுறைக்கு வருவது ரொம்ப ரொம்ப கடினம். இருந்தாலும் உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. மிக அருமையாக சொல்லிக்கொண்டே போகிறிர்கள் தொடருங்கள் நானும் பின்தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteஉங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.