ஒரு கோப்பைத் தேநீர்
வலைத்தள வாசகர்களுக்கு வணக்கங்கள் பல. இன்று பேசப் போகும் விடயத்திற்கு போவதற்கு முன்னால் ஒரு செய்தி. கடந்த 3 ஆம் திகதியுடன் குறுஞ்செய்திச் சேவை 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களும் வருத்தங்களும் உரித்தாகட்டும். அது தொடர்பான சிறப்புக் கட்டுரை "வீரகேசரி" இணையத்தளத்தில் இருந்து:
இலங்கையின் தேயிலைத் துறை சம்பந்தமான சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள இலங்கைத் தேயிலைச் சபையின் இணையத்தளத்தை அணுகுங்கள்.
ஒரு கோப்பைத் தேநீர்!
ஏற்றுமதிக்கான தேயிலைப் பொதியிடல் நிறுவனமொன்றில் உதவி மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் (Asst Material Controller) ஆக நான் பணிபுரிகிறேன். ஆகவே எனது தொழில்சார் பதிவொன்றை எழுதவேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதனால்தான் இந்தப் பதிவு. விளக்கப் படங்களுடன் குறிப்புகளும் இடம்பெறும். படித்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
01. தேயிலைப் பயிரிடல்
02. கொழுந்து பறித்தல்
மேலதிக விபரங்களுக்கு:
03. கொழுந்து நிறுத்தல்
04. தேயிலையைப் பதனிடல்
05. பொதியிடலுக்கான தேயிலை விநியோகம். இது 40 முதல் 60 கிலோ வரையிலான பைகளில் அடைக்கப்படும்.
06. ஒரு கிராம் முதல் 3 கிராம் வரையிலான தேயிலைப் பைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள். இந்த இடத்திலிருந்தே நான் தொழில் புரியும் நிறுவனத்தின் பணிகள் ஆரம்பிக்கின்றன. 01 முதல் 05 வரையானவை பெருந்தோட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுபவை ஆகும்.
06.01. Double Chamber Tea Bagging Machines
06.02. Double Chamber Tea Bags
06.03 Single Chamber Tea Bagging Machines
06.04 Single Chamber Tea Bags
இவ்வாறாகப் பொதி செய்யப்பட்ட தேயிலைப் பைகள் பின் ஏற்றுமதிக்குத் தயார்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையான தேயிலைப் பைகளையும் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு இயந்திரங்கள் காணப்படுகின்றன. இங்கு விளக்கப்பட்டுள்ளவை இரண்டு வகையான இயந்திரங்கள் மட்டுமே. இந்த இயந்திரங்களில் தேயிலைப் பைகள் உற்பத்தி செய்யப்பட்டதும் அவற்றை முறையாகப் பொதி செய்வதற்கான இயந்திரங்களும் காணப்படுகின்றன.
அவ்வாறு பொதி செய்து பூரணப்படுத்தப்பட்ட பின்னர் பாரிய தாங்கிகளில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றன.
இதுவொரு முழுமையான பதிவல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், தேயிலைப் பைகளின் ஏற்றுமதி நடைபெறும் செயன்முறை இதுதான் என்பதை தங்களுக்கு உணர்த்திக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான். முடிந்தால் இன்னொரு நாள் முழுமையான விளக்கத் தொடர் பதிவுடன் சந்திப்போம்.
இலங்கையின் தேயிலைத் துறை சம்பந்தமான சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள இலங்கைத் தேயிலைச் சபையின் இணையத்தளத்தை அணுகுங்கள்.
அன்புடன்,
சிகரம்பாரதி.
ஆஹா! அருமையான அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteஅருமை, நாங்க இங்கு துபையில் இதுபோல் தேயிலை விற்பனை செய்கிறோம், பிராண்ட் பெயர் வேறு.
முழுப்பதிவையும் தாருங்கள் மிக மகிழ்வேன்.
அப்படியா? மிக்க மகிழ்ச்சி. துறை சார்ந்த ஒருவர் கருத்துரைத்திருப்பது மன நிறைவை தருகிறது. விரைவில் முழுமையான பதிவை தர முயற்சிக்கிறேன். நன்றி.
Deleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteநன்றி தோழரே.
Deleteதெரியாத சில தகவல்கள் நன்றி
ReplyDeleteநன்றி தோழி.
Deleteநல்ல விஷயங்கள்
ReplyDeleteஎதிர்பாராத வருகை லோஷன் அண்ணா. மிக்க மகிழ்ச்சி. நன்றி, வருகைக்கும் கருத்துரைக்கும்.
Delete