வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இது. இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கும். ஒருவாறு உலக அழிவுப் பீதி ஒழிந்துவிட்டது. அப்படியும் அதை விடாமல் 2017 ஜனவரி 01 அன்று உலகம் அழியும் எனக் கூறிக் கொண்டு ஒரு குழு புறப்பட்டிருப்பதாகத் தகவல். வேணா... விட்டுருங்க...... உலகம் அழுதுரும்..... என்னளவில் மத்திம பலன்களைத் தந்த வருடம் இது. எண்ணியதில் நடக்காமல் போனவை பல, நடந்தவை சில. வழமைக்கு மாறாக ஆண்டிறுதி சிக்கல் தருவதாக அமைந்து விட்டது.
வலைத்தளத்திற்கு மீள் அறிமுகம் தந்து உள்நுழைந்த போது ஆரோக்கியமான முன்னேற்றம் இவ்வருடத்தில் கிட்டியுள்ளது. வலைத்தளம் பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்னும் இனிக்கும் நினைவுகளும் கசக்கும் தருணங்களும் மனதில் முகம் காட்டிச் செல்கின்றன. இந்த ஆண்டு எனக்கு சில பாடங்களையும் கற்பித்துச் சென்றிருக்கிறது. சற்றே பயத்துடன் 2013 ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடத்தின் மீதும் பலநூறு எதிர்பார்ப்புகள். எவை எவை நனவாகும் என்பதை யாரறிவார்?
என் வலைத்தள நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். எண்ணியவை எண்ணியபடி நடக்கவும் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பெருகிடவும் உங்கள் அனைவரையும் "சிகரம்" வலைத்தளம் மனதார வாழ்த்துகிறது. காலம் கருணை காட்டினால் புது வருடத்தில் இனிதே சந்திப்போம். வாழ்த்துக்கள்.
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்நாடு List of Holidays
http://diaryatoz.com/Diary/Service/ListOfHolidays.aspx?State=tamil