இது சாதனையாளர்களின் நாள்!
வணக்கம் வாசகர்களே! இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். நம்மில் இது
எத்தனை பேருக்கு தெரியும்? மேலும் மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர்,
அங்கவீனர்கள் மற்றும் உடல் இயலாதவர்கள் என்று பலவாறாக அழைத்த வழக்கம்
இப்போது மாறிவருகிறது. ஆனால் இன்னமும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி
அவ்வாறானோரை அவமானப்படுத்தும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது என்பது
வேதனைக்குரிய செய்தி.
மாற்றுத்திறனாளிகளும் நம்மைப் போல் சமூகத்தின் அங்கத்தவர்களே என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது. அதனை நாம் புரிந்துகொள்ளாவிட்டாலும் கூட புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சில இடங்களில் பெற்றோரே இவர்களை வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலைகளை கண்கூடாகக் காண நேரும்போது மனம் படும் பாடு இதயத்தில் ஈரமுள்ள யாவருக்கும் புரியும். இந்த நாளைப் போல வருடத்தில் ஒரு நாள் மட்டுமில்லாது வருடத்தின் அத்தனை நாளிலும் நாம் அவர்களுக்கு மரியாதை செய்தல் வேண்டும். முகநூல் பக்கத்திலும் பலர் தமது ஆதரவுக் குரல்களைப் பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பேசுவதோடு மட்டும் நின்றுவிடாது செயலிலும் நிரூபிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் முகமாக தமிழ்த் திரையுலகில் வெளியான இரண்டு முத்தான பாடல்களின் YOUTUBE இணைப்புகளை இங்கே வழங்கியிருக்கிறேன். 1. ஊனம் ஊனம் ஊனம் இங்கே யாருங்கோ - திரைப்படம் - போர்க்களம். 2. நில்லு நில்லு நில்லு சொந்தக்காலில் நீயும் நில்லு. இரண்டுமே அருமையான பாடல்கள். கேட்டு ரசிப்பதோடு நில்லாது உங்கள் சமூகத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகளையும் ஆதரவு தந்து உற்சாகப் படுத்துங்கள். அவர்களும் மனிதர்கள் தானே? இந்த நாளில் சோதனைகளை சாதனைகளாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளை இப்போது யாரும் ஒதுக்குவதாயில்லை.எல்லா நாடுகளிலும் அவர்களுகான தேவைகள் கவனிக்கப்படுகிறது என்றே நம்புகிறேன் !
ReplyDeleteஅவர்களுக்கான அழகான .... எனக்கும் பிடித்த பாடலுக்கு நன்றி பாரதி !
அனைவரையும் சார்ந்து மட்டுமே வாழும்
ReplyDeleteமன நிலை கொண்டவர்கள்தான் ஊனமானவர்கள்
நிச்சயம் சுயமாக வாழ்ந்து உயர்ந்து நிற்கும்
மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சாதனையாளர்களே
அருமையான சிறப்புப் பதிவுக்கு வாழ்த்துக்கள்
எல்லா உறுப்புகளும் சரியாக அமைந்தாலும் அதை தவறான வழிகளில் மட்டுமே செயல்படுத்தும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்கள் தனம்பிகையின் சிகரங்கள் இவர்களை பார்க்கும் போதெல்லாம் மனிதன் என்ற பிறப்பு அர்த்தபடுவதாக நினைக்கிறன் கடவுளின் சிருஷ்டியை நினைத்து வருத்த படுவதும் உண்டு நல்ல பகிர்வு நண்பரே
ReplyDeleteநல்ல பகிர்வு .. நண்பா
ReplyDeleteஇரண்டுமே நல்ல பாடல்கள். சரியான நாளில் சரியான பகிர்வு....
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் பாரதி.
சேரனின் பொற்காலத்தை போர்க்களமாக்கிட்டீங்களே... சிகரம் . அவர்களுக்காக பரிதாபப்படாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தனக்குத்தானே உதவிக்கொள்பவரை ஊக்குவிக்கலாம் நானும் மாற்றுத்திறனாளி விற்பனையாளராக வரும்போது ஏதேனும் பொருள் வாங்கி விடுவேன்
ReplyDelete