Wednesday, 19 December 2012

உங்களுடன் சில நிமிடங்கள்.....!

வணக்கம் வலைத்தள வாசகர்களே. நலமா? நலம் வாழ வாழ்த்துக்கள். கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நமது தொடர் பதிவை ஆரம்பித்தோம். கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 40 பதிவுகள். 46 பதிவுகளை இடுவதாக இருந்தபோதும் 40 பதிவுகளை மட்டுமே இட முடிந்தது. கிட்டத்தட்ட நினைத்ததை முடித்துவிட்ட திருப்தி. தொடர் பதிவுக்கான நிறைவுப் பதிவாக இது அமைகிறது.

இத்தொடர் பதிவு எனக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. சில தரப்படுத்தல்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறேன். தரப்படுத்தல்களுக்காக எழுதவில்லை என்றாலும் அதனூடான முன்னேற்றத்தில் மனதோரமாய் ஒரு மகிழ்ச்சி. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புதிய நண்பர்களை "சிகரம்" தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்.

எனது இரு பதிவுகள் 4tamil media என்கிற இணையத்தளத்தில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. அத்தளத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இரு பதிவுகளும் அத்தளத்தின் இணைப்புடன் இங்கே:

வலைப்பதிவுலக நண்பன் ஹாரி தனது தளத்தில் 19.12.2012 அன்று வெளிட்ட "2012 டாப் 20 பிளாக்(கர்)ஸ்" என்ற பதிவில் குறிப்பிட்டுள்ள 2012 இன் நம்பிக்கை தந்த அறிமுகப் பதிவர்கள் பட்டியலில் 6 பேரில் ஒருவனாக நானும் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

அடுத்த முக்கியமான விடயம் நமது உலக அழிவு பற்றிய வாக்கெடுப்பு முடிவுகள். வலது பக்கம் இணைக்கப்பட்டிருந்த இவ்வாக்குப் பெட்டி தொடர்பான முடிவுகள் இதோ................!!!!!!!!!

கேள்வி: 2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்களும் முடிவும்:

மொத்த வாக்குகள்: 45
கள்ள வாக்குகள்: 000000000000000

பதில்களும் வாக்குகளும்:

ஆம்: 03 [06%]
இல்லை: 28 [62%]
எனக்கு கவலை இல்லை: 09 [20%]
ஆளை விடுங்க சாமி: 05 [11%]

இதன் படி உலக அழிவு என்பதை நம் பதிவுலக நண்பர்கள் நம்பவில்லை என்பது நிரூபணமாகிறது. வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


நமது தொடர் பதிவு உலக அழிவு பற்றிப் பேசாவிட்டாலும் உலகம் அழியப் போவதாகக் குறிப்பிடப்படும் அந்த தினம் வரை ஏதேனும் எழுதுவது என்றே தொடர் பதிவைத் துவங்கினோம். நல்லதொரு முடிவுரையுடன் தொடர்பதிவில் இருந்து விடைபெறுவது மிக்க மகிழ்ச்சி. இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள். இனி நாம் நமது வழமையான பாணியிலேயே சந்திப்போம். விடைபெறுகிறேன் தோழர்களே. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

9 comments:

 1. எனது மனம் நிறைந்த சந்தோஷமான வாழ்த்துக்கள் நண்பா.உங்களின் இந்த வளா்ச்சி கன்டு நெகிழ்கிறேன்.உங்கள் சந்தோஷங்களில் நானும் பங்கு கொள்கிறேன் நண்பா.!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிசயா. உங்கள் முதல் வருகை உற்சாகமளிக்கிறது. உங்களைப் போன்ற நட்புக்களால் தான் இத்தனை வளர்ச்சியை என்னால் அடைய முடிந்தது. நன்றி தோழி.

   Delete
 2. வாழ்த்துக்கள் இன்னும் பல முன்னேற்றங்களும் நட்புரவுகளும் பெற்றுக்கொள்ள... :)

  ReplyDelete
 3. வாழ்த்துகள் நண்பா... நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இனி தொடர்வேன் என்று நினைக்கிறேன்... கேட்க மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் இந்த முன்னேற்றம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. உங்கள் தொடர்ச்சியான வருகையை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, வருகைக்கும் தொடர்கைக்கும்.

   Delete
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION

பிக் பாஸ் தமிழ்  பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01  18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...