லங்கா பிரீமியர் லீக் - இ-20 கிரிக்கெட் திருவிழா - ஆகஸ்டில் துவக்கம்! #LPL
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு SLPL என்னும் இ-20 கிரிக்கெட் சுற்றுத்தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றது நினைவிருக்கலாம். ஆம், 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் என்னும் மகுடத்தில் இடம்பெற்ற சுற்றுத்தொடர் 2013 முதல் இரத்துச் செய்யப்பட்டது. இந்தியாவின் ஐ.பி.எல்லினைப் போன்று உருவாக்கப்பட்ட தொடர் அனுசரணையாளர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்டிருந்தது. தற்போது SLPLக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து LPL என்னும் பெயரில் களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம். 18 ஆகஸ்ட் 2018 முதல் 10 செப்டெம்பர் 2018 வரை இத்தொடர் இடம்பெறவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் LPL இன் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். Lankan Premier League will be held from the 18th August to 10th September, 2018. Sri Lanka Cricket has permanently reserved this window for the #LPL for the next five years. — Sri Lanka Cricket (@OfficialSLC) April 7, 2018 2018 இல் LPL இடம்பெற ஏற்பாடாகியுள்ள காலப்பகுதியிலும் தொடரும் ஐந்து வருடங்களுக்கும் இ...