லங்கா பிரீமியர் லீக் - இ-20 கிரிக்கெட் திருவிழா - ஆகஸ்டில் துவக்கம்! #LPL

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு SLPL என்னும் இ-20 கிரிக்கெட் சுற்றுத்தொடர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றது நினைவிருக்கலாம். ஆம், 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் என்னும் மகுடத்தில் இடம்பெற்ற சுற்றுத்தொடர் 2013 முதல் இரத்துச் செய்யப்பட்டது. இந்தியாவின் ஐ.பி.எல்லினைப் போன்று உருவாக்கப்பட்ட தொடர் அனுசரணையாளர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்டிருந்தது. 



தற்போது SLPLக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து LPL என்னும் பெயரில் களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம். 18 ஆகஸ்ட் 2018 முதல் 10 செப்டெம்பர் 2018 வரை இத்தொடர் இடம்பெறவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் LPL இன் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 



2018 இல் LPL இடம்பெற ஏற்பாடாகியுள்ள காலப்பகுதியிலும் தொடரும் ஐந்து வருடங்களுக்கும் இலங்கை அணிக்கு குறித்த இக்காலப்பகுதி இந்த தொடருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலேயே கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் நெட்வெஸ்ட் ஆகிய பிரபலமான தொடர்களும் இடம்பெறவுள்ளன. LPL போட்டித் தொடரை DSPORT அலைவரிசை ஒளிபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறு அணிகள் பங்குபற்றும் சுற்றுத்தொடராக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வீரர்களையும் இத்தொடரில் இணைத்துக்கொள்ளவுள்ளனர். முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இவ்விரு தடவைகள் மோதும். 

தற்போது Indian premier league (IPL), Bangaladesh premier league (BPL), Pakistan super league (PSL) மற்றும் Big Bash League (BBL) உள்ளிட்ட பல்வேறு பிரபல இ-20 கிரிக்கெட் தொடர்கள் உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

#Caribbean_Premier_League #Colombo #Cricket #India #LankanPremierLeague #Natwest_t20_Blast #NidahasTrophy #SLC #SLPL #Sports #SriLanka #SriLankaCricket #SriLankaPremierLeague #t20#ThilangaSumathipala #LPL #IPL #DSPORT 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!