ஐ.பி.எல் 2018 - ஆட்டம் ஆரம்பம் - முதல் வெற்றி சென்னைக்கு! #IPL2018



கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல் என்னும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா நேற்று 07.04.2018 மாலை மும்பையில் துவங்கியது. ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவ ஆரம்ப நிகழ்வுகள் மும்பை வான்கடே மைதானத்தில் மாலை ஐந்து முப்பது (05.30 PM) மணிக்கு துவங்கின. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் தமன்னாவின் நடனங்கள் விழாவை சிறப்பித்தன. பிரபு தேவாவின் அட்டகாசமான நடனமும் மேடையை அலங்கரித்தது. 



மாபெரும் துவக்க விலாவைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டிக்கான நாணய சுழற்சி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இஷான் கிஷான் 40 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 43 ஓட்டங்களையும் குர்னால் பாண்டியா 41 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்தனர். ஷேன் வாட்சன் 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 



பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த வண்ணமிருந்தன. மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கமிருந்த போட்டியை டுவைன் பிராவோ அதிரடியாகப் பெற்ற 68 ஓட்டங்களின் மூலம் சென்னையின் பக்கம் திருப்பினார். அவரது ஆட்டமிழப்புக்குப் பின்னர் மும்பையின் ஆதிக்கத்தில் இருந்து 24 ஓட்டங்களின் மூலம் மீட்டெடுத்து சென்னையை வெற்றி பெற வைத்தார் கேதார் ஜாதவ். ஹர்திக் பாண்டியா மற்றும் மாயங் மர்கந்த் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனை அடுத்து ஐ.பி.எல் பதினோராம் பருவத்தின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் பந்து வரை மிக விறுவிறுப்பாக இடம்பெற்றது இப்போட்டி. மும்பையில் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறப்போவது யார்? வெற்றிக் கிண்ணம் யாருக்கு? அறிந்துகொள்ள சிகரத்துடன் இணைந்திருங்கள்!

#IPL #VIVOIPL #IPL2018 #CSK #MI #CSKvMI #MSD #WhistlePodu #StarSports #hotstar #ipllive #ஐபிஎல் #ஐபிஎல்2018 #சிகரம் #விளையாட்டு #SIGARAM #SIGARAMCO

Comments

  1. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது,

    பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக

    http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது

    இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம்

    உங்கள் பதிவுகள், உணர்வுகள், சுவாரசியங்கள், அனுபவங்கள் மற்றவர்களையும்

    சென்றடைய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!