நலம் தானா தோழர்களே?
பலகதை பேசி
உயிரெனப் பழகி
உயர்தரமதிலே கற்று வந்த
காலங்கள்
கனவு போலாகி
மூன்றாண்டுகள்
முடிந்து போய் விட்டன.
ஓரிருவர் தொழிலில்.
இன்னும் சிலர்
இனிதாய் பல்கலைக்கழகம்
பயில்கின்றனர்.
திருமணம் செய்துகொண்டு
திருமதியாகிவிட்டார்
ஒருவர்.
மற்றும் பேரின்
முகவரி கூடத் தெரியாது.
இரண்டாண்டுகள்
இணையற்ற நண்பர்களாய்
இருந்தோம்.
பிரியும் நாள் வந்தபோது தான்
சேர்ந்திருந்த போது
செய்த தவறுகள் உணர்ந்தோம்.
கனவு பல தந்த
காதலையும் தொலைத்துவிட்டு
கசப்பாய்த் தெரிந்த
கல்வியையும் தொலைத்துவிட்டு
விழி பிதுங்கி நின்ற
தோழர்களை எண்ணி
துயரப்பட மட்டுமே முடிகிறது.
ஆண்டுகள் இரண்டில்
ஆயிரம் அனுபவங்கள்.
அத்தனையும் வாழ்க்கைக்கு
அழகான படிப்பினைகள்.
எங்கே இருக்கிறீர்கள்,
எப்படி இருக்கிறீர்கள்
என்னருமை தோழர்களே?
முகவரி தாருங்கள்
முகம் பார்க்க
அலைபேசி இலக்கம் தாருங்கள்
அழைத்துப் பேச
நாடி வருவேன்
நலம் விசாரிக்க
தேடி வருவேன்
தேவைகளை நிறைவு செய்ய!
இப்போதாவது சொல்லுங்கள்!!!
நலம் தானா தோழர்களே???
இக் கவிதை இரண்டு மாதங்களுக்கு முன்னாள் "சூரியன்" வானொலியின் "நேற்றைய காற்று" நிகழ்ச்சியில் சொல்வதற்காக எழுதப்பட்ட கவிதை. ஆனால் கடைசி வரை குறித்த நிகழ்ச்சியில் என்னால் சொல்ல முடியாமலே போய் விட்டது. இப்போது உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் எண்ண ஓட்டத்தை அறிய விழைகிறேன்.
மேலே பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் எனது பாடசாலையின் உண்மையான புகைப்படங்களாகும். உசாத்துணையாக அமைந்த இணையத் தளங்களுக்கு நன்றிகள்.
இக்கவிதை என்னோடு உயர் தரத்திலே 2007 முதல் 2009 வரை பயின்ற பள்ளித் தோழர்களுக்காக எழுதப்பட்டதாயினும் எனது பதின்மூன்று வருடகால பள்ளித் தோழர்களுக்கும் சமர்ப்பணமாக்குகிறேன். நன்றி தோழர்களே.
*****************************************
முக்கிய அறிவித்தல்.
இன்று வெளியாகவிருந்த உங்களின் பேரபிமானம் பெற்ற "கல்யாண வைபோகம் குறு [வலை] நாவல் - 07" தவிர்க்க முடியாத காரணங்களினால் வரும் வியாழனன்று, அதாவது ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெளியாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் வாசகர்களுக்கு ஏற்படும் மன வருத்தத்திற்கு மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறேன். நன்றி உள்ளங்களே.
******************************************
கவிதை எழுதுவது இருக்கட்டும், கல்யாண வைபோகம் எங்கே? இன்று வியாழக்கிழமை. ஞாபகம் இல்லையா...
ReplyDeleteதவிர்க்க முடியாத சூழ் நிலை காரணமாகவே வெளியிட இயலவில்லை. மன்னிக்க வேண்டும்.
Deleteஎதுகை, மோனையில் விளையாடி உள்ளீர். வாழ்த்துகள். தொடருங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி உள்ளமே.
Deleteஅடுத்த வியாழன் என்பது மிகவும் அதிகம், அதிக கால இடைவெளி என்பதை நினைவூட்டுகிறேன் நண்பா.
ReplyDeleteகண்டிப்பாக நாளை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்....
கதை எழுத ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தேவை நண்பரே. நன்றி உள்ளமே.
Deleteமிகுந்த எதிர்பார்ப்போடும், சிரமங்களுக்கிடையில் வந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள். அந்த பாவம் தங்களுக்கே?
ReplyDeleteஅடடா..... என்னங்க இது? ஒரு முறை கொஞ்சம் பொறுத்துக்கலாமே? காலம் தாழ்த்தியமைக்கு மிகவே வருந்துகிறேன்.
Deleteஅதுவும் எனக்காக ஊடல், காதல் உரையாடல்களுடன் அடுத்த வெளியீடு வரும் என்று தாங்கள் கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன் தோழா?
ReplyDeleteநினைவிருக்கிறது நண்பரே. பகுதி ஏழில் இருந்து உங்களுக்காகவே வரக் காத்திருக்கிறது, காதலும் ஊடலும்.......
Deleteஏமாற்றத்தில் கவிதையைப் பற்றி கூற மறந்துவிட்டேன், மன்னிக்கவும். கவிதையை F.M ல் வெளிட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும். தொடர்ந்து வெளியிடுங்கள், அழகு. நமக்குத்தான் கவிதையும் வரமாட்டங்குது, கவிதை எழுத காதலிக்கலாம் என்றாள் பெண்ணும் கிடைக்க மாட்டங்குது?
ReplyDeleteஎன்ன வாழ்க்கைடா இது?
பரவாயில்லை நண்பரே. ஒரே ஒரு முறை வானொலியில் கவிதை சொல்லியிருக்கிறேன். விரைவில் அதனையும் வெளியிடுகிறேன். காதலிக்கத் தான் பெண் தேவை. கவிதை எழுத அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. உங்களிடம் உள்ள ஒன்று என்னிடம் இல்லாதிருக்கலாம். ஆகவே இதற்காகவெல்லாம் வருந்த வேண்டாம் உள்ளமே. சந்திப்போம்.
Deleteஅதிக கருத்துகளை வழங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன், அனைத்தும் என் ஏமாற்றத்தின் பிம்பங்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் தோழா! தவறாக நினைக்க வேண்டாம்...
ReplyDeleteதவறாக நினைக்கவில்லை. இப்படி ஒரு தீவிர வாசகர் எனது கதைக்கு கிடைத்திருப்பதையிட்டு பெருமிதம் கொள்கிறேன். சந்திப்போம் உள்ளமே.
Deleteவணக்கம் நண்பா...கவிதை அருமை பாஸ்!என்றோ ஒரு நாள் எழுதி இருப்பினும் இன்று இந்நாளில் கூட இது அர்த்தப்பட்டுத்தான் தோன்றுகிறது நண்பா..!
ReplyDeleteமழை தன்பாட்டில பொழியட்டும்.வெளிய போண் பாருங்க...தோழர்கள் காத்திருப்பார்கள்.சந்தோசம் நண்ணபா கவிதை சிறப்பு.மீண்டுமொரு பள்ளிநாள் நினைவலைகள்.
இரவின் புன்னகை யின் கருத்தை வழிமொழிகிறேன்.கல்யாண போகம் சீக்கிரம் நடக்கட்டும்.சந்திப்போம்.
நானும் இரண்டு நாட்களாக பாரதி வருவார் என்று பார்க்கிறேன், முகப்புப் புத்தகத்தில் தோன்றுகிறார் ஆனால் பதில் எழுத மறுக்கிறார்.
Delete#அதிசயா#
Deleteநன்றி தோழி. அண்மையில் தான் பழைய நண்பர்களை சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சி. இக் கவிதை என்றென்றும் எனது நண்பர்களை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். சந்திப்போம் உள்ளமே.
#இரவின் புன்னகை#
Deleteநான் முகப் புத்தகத்தை கையடக்கத் தொலைபேசியில் தான் உபயோகித்தேன். அதனால் தான் உடனடியாக பதில் தர இயலவில்ல. மன்னிக்க வேண்டும் தோழா.
முதல் முறை தளத்திற்கு வந்தவுடன் வசித்த
ReplyDeleteஅருமையான கவிதை ...
வாங்க தோழி. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி உள்ளமே.
Deleteசிறப்பான வரிகள்...
ReplyDeleteஉங்களின் முந்தைய பதிவு (August 11th) தான் dashboard இல் உள்ளது...
ஒரு வேளை என் dashboard புட்டுக்கிச்சோ... தெரியவில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்...
Any way தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இக்கவிதையை வெளியிடும் போது நான் சில பிரச்சினைகளை பிளாக்கரில் எதிர் கொண்டேன். காரணம் அதுவாக இருக்கலாம். சந்திப்போம் உள்ளமே.
Deleteநீங்கள் கூறியது உண்மை தான். பள்ளி கல்லூரி வாழ்க்கை மறக்க இயலாது. அந்த பசுமையான நினைவுகளை திரும்பி பார்க்கிறேன். நினைவுப்படுத்திமைக்கும், பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநண்பரே. ஒரு சந்தேகம் என்னுடைய டாஷ்போர்டில் தங்களின் டாஷ்போர்டு புட்டுக்கிச்சி!வரை வந்துள்ளது.இந்த பதிவு வரவில்லை.
நான் என்னாடா தங்களின் ஒரு பதிவும் வரவில்லையே என்று உங்களின் தளத்திற்கு வந்தால் இப்படி ஒரு கவிதைவுள்ளது.
வாருங்கள் நண்பரே, இன்று என்னுடைய தளத்தில் ஏணிப்படி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உள்ளமே. பள்ளிக் கால நினைவுகள் என்றுமே பசுமையானவைதான். என் கவிதை உங்களுக்கு அதை மீட்டித் தந்ததில் மகிழ்ச்சி. சந்திப்போம் உள்ளமே.
Deleteஅழகான கவிதை உண்மையில் யாராலும் பள்ளிக்கால நினைவுகளை மறக்க முடியாது...விசேடமாக உயர்தரக் கல்வியின் போது கிட்டும் நண்பர்கள் வாழ்வின் எங்கேயாவது ஒரு மூலையில் பெரிதும் துணையாக இருப்பார்கள்...
ReplyDeleteஅழகான வரிகள் அழகான கவிதை வாழ்த்துக்கள்
எப்படி மறப்பது? பாடங்களை அல்ல பாடசாலை குறும்புகளை, பல்கலைக்கழகம் வந்தாலும் அழிவதில்லை நம் பாடசாலை நினைவுகள், அதில் முக்கியமாக உங்களின் சிகரம் வார இதழ்! வகுப்பறையில் வலம் வந்த சிகரம், இன்று வலை தளத்தில் மிகவும் மகிழ்ச்சி! சிகரம், சிகரத்தை தொட என் வாழ்த்துக்கள் .
ReplyDeletevery nice friend
ReplyDeleteஅருமையான நினைவூட்டல்
ReplyDeleteபாராட்டுகள்