Posts

Showing posts with the label மே 18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18!

Image
முள்ளிவாய்க்கால்!  ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாள். ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். தர்மத்தின் வாழ்வுதனை மீண்டும் சூது கவ்விய நாள்!  மே 18!  18.05.2009  தமிழர்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். சர்வதேசத்தை முழுமையாக ஒவ்வொரு தமிழனுக்கும் புரிய வைத்த நாள்.  30 வருட கால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இம்மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள்.  Image Credit: Vikatan.com தமது இன விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மட்டுமே தமிழர்களால் நினைவுகூர முடிந்திருக்கிறது.  பத்தாண்டுகள் கடந்து விட்டன. தமிழர்களுக்கான நீதியோ அல்லது உரிமைகளோ கிடைப்பதற்கான வழிவகைகளையோ அல்லது அதற்கான அறிகுறிகளையோ சற்றும் காணவில்லை.  உறவுகளை இழந்தவர்கள் உணர்வுகளை இழந்து நடைப்பிணமாய் வாழ்ந்து வருகிறார்கள். காணாமல் போன உறவுகள் இன்றாவது வந்துவிட மாட்டார்களா என்று சில உறவுகள் காத்திருக்கின்றனர்.  தமிழரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். கட...