Posts

Showing posts from February, 2020

பெப்ரவரி 29

Image
இன்று பெப்ரவரி 29ஆம் திகதி. லீப் வருட நாள். மீண்டும் 4 வருடங்களுக்குப் பின்னர் தான் இந்த நாள் வரும். இன்னும் இன்னோரன்ன சிறப்புகள் எல்லாம் இந்த நாளுக்கு சொல்லப்படுகின்றன.  சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு டூடில் வெளியிடும் கூகிளும் இன்றைய நாளுக்கு சிறப்பு டூடிலை வெளியிட்டிருக்கிறது.  ஆகவே, நாமளும் சும்மா இருந்தா நம்மள சமூகம் மதிக்காது என்பதால் நானும் இன்று பதிவு எழுதி விட்டேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நாள் முடியப்போகும் வேளையில் தான் பதிவை வெளியிட நேரிட்டிருக்கிறது.  'தமிழ்மணம்' வலைத்திரட்டி கடந்த சில காலமாக முறையாக செயல்படவில்லை. முன்னதாக, இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய வலைத் திரட்டிகள் காணாமல் போயிருந்தன. அந்த வரிசையில் எஞ்சியிருந்த தமிழ்மணமும் சேர்ந்து விட்டது.  அதன் பின்னர் அந்த இடத்தை நிரப்ப பல்வேறு இணையத்தளங்கள் முயன்ற போதும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.  ஆகவே, காலத்தின் தேவையுணர்ந்து நாம் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்காக உருவானது தான் ' வலை ஓலை ' வலைத் திரட்டி.  ' வலை ஓலை ' வலைத் திரட்டி குறித்த மேலதிகத் தகவல்களை

பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?

Image
அண்மைக்காலமாக நாம் அதிகம் கேள்விப்படுவது சிசுக்கொலைகள் பற்றிய செய்திகளாக இருக்கின்றன. பிறந்த சில மணிநேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை, பிறந்த ஒரு வாரத்தில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட குழந்தை, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை என வித்தியாசமான செய்திகளை நாம் காண்கிறோம். பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்? தவறான உறவு, பொருளாதார சூழல், குடும்ப சண்டை, ஆண் - பெண் பேதம், வெள்ளை - கறுப்பு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.  Image Credit: https://www.financialexpress.com or Respective Owners only. அத்துடன், தாயோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ காவல்துறையினரால் கைது செய்யப்படுவதுடன் அந்த செய்தி குறித்த நமது தேடலும் முடிந்து போய்விடும். மீண்டும் அடுத்த வாரம்.... கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை என மற்றொரு செய்தி வரும். இதற்கு என்ன தீர்வு? கொலையாளியைக் கைது செய்வதால் தீர்வு கிட்டிவிடுமா? அல்லது படங்களில் காட்டப்படுவதைப் போல கொலையாளியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடலாமா? நமது

திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?

Image
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை. அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான். 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன. Image Credit: Respective Owners only 2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலம

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி

Image
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.  அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது.  Image Credit: Its Respective Owners only. இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார்.  சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.  இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும், இலங்கைத் தமிழ் ஊடகங்களிலும

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)

Image
பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)   2018/06/14  அடுத்த நாளும் நண்பனுக்கு வேலை நாளாக இருந்தது. அன்றே நான் புறப்படவும் வேண்டியிருந்தது. அன்றைய தினம் எழுத்தாளர் யாழ் பாவாணன் அவர்களை சந்திக்க சென்றேன். அவரை சந்தித்த பின் அவரது நட்பு எழுத்தாளரான 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வேலணையூர் தாஸ் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.  பின்னர் யாழ் பொது நூலகம் சென்றேன். பத்திரிகை வாசிப்புப் பிரிவுக்கு சென்று அன்றைய நாளிதழ்களைப் படித்தேன். இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதே பெருமை தரும் உணர்வாக இருந்தது.  அதன் பின்னர் யாழ் பாவாணன் அவர்கள் என்னை யாழ் பேரூந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து எனது நண்பியின் இல்லம் அமைந்துள்ள வவுனியாவுக்கு சென்றேன். வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் அவரது வீட்டைச் சென்றடைந்தேன்.  அன்று இரவு அங்கு தங்கினேன். தோழியின் உபசரிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவரும் அவரது கணவரும் நன்றாக உபசரித்தன

என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு?

Image
தமிழ்மணம் வலைத்திரட்டிக்கு என்ன ஆச்சு? தெரியவில்லை. கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 4.20க்கு இற்றைப்படுத்தியதாக திரட்டி கூறுகிறது.  இப்போது 6 மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.  ஆரம்பத்தில், தமிழ்மணத்தோடு இன்ட்லி மற்றும் தமிழ் 10 முதலிய வலைத்திரட்டிகள் செல்வாக்குச் செலுத்தின. ஒவ்வொரு திரட்டியிலும் எத்தனை விருப்பங்களைப் பெறுகிறார்கள் என்பதில் வலைப்பதிவர்களுக்கிடையே போட்டி நிலவும்.  இதன் காரணமாக வலைத்தளங்களுக்கு வாசகர்களை அழைத்துவருவது அத்தனை கடினமாக இருக்கவில்லை.  வலைப்பதிவர் ஒருவர் முக்கிய திரட்டிகளில் தனது பதிவைப் பகிர்ந்தாலே குறைந்தது 50 பக்கப் பார்வைகளாவது வந்துவிடும். அத்துடன், தினமும் வலைப்பதிவர்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.  என்றாலும், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய திரட்டிகளின் மறைவு வலையுலகத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.  அதன் பின்னர் பல திரட்டிகள் முளைத்தாலும் தனிக்காட்டு ராஜாவான தமிழ்மணத்தோடு மோத முடியாமல் தடம் தெரியாமல் அழிந்து போயின.  காலம் செல்லச்செல்ல வயதான சிங்கத்தைப் போல

தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01

Image
நமக்கு தெரிந்தது கொஞ்சம், தெரியாதது மிச்சம். அதை தான் முன்னோர்கள், கற்றது கையளவுன்னு சொல்லிட்டுப் போனாங்க.  இதில், எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். அது குறித்து உங்களுக்குத் தெரிந்தது ஏதும் இருந்தால் சொல்லுங்கள், நானும் அறிந்து கொள்கிறேன்.  இன்றைய நவீன உலகில் நாம் மிகுந்த வேலைப்பளு மிக்கவர்களாக இருக்கிறோம். நமக்கு நமது வேலையை நினைவூட்ட இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது.  Image Credit: Any.do இந்த விடயத்தில் உதவ பல செயலிகள் இருக்கின்றன. ஆனாலும் Any.do எனும் செயலி சற்று வித்தியாசமானது.  இப்போது நம்மில் வாட்ஸப் உபயோகிக்காதவர்களே கிடையாது எனும் நிலையில் உள்ளோம். அந்த வகையில், வாட்ஸப் ஊடாக இந்த நினைவூட்டல் செயலி செயற்படுகிறது.  Image Credit: Any.do அதாவது வாட்ஸப் செய்திகளுடன் இதுவும் ஒரு செய்தியாக நமக்கு காட்டிக் கொண்டிருக்கும். இதன் மூலம் நமது வேலை இன்னும் சுலபமாகிறது.  ஆனாலும் இதில் ஒரு சிக்கல். வாட்ஸப் மூலம் இந்த சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.  பின்னே? எல்லாத்தையும் இலவசமா கொடுப்பாங்களா என்ன? என்றாலும் ஆன்ட்ராய்ட் தளத்த