தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
நமக்கு தெரிந்தது கொஞ்சம், தெரியாதது மிச்சம். அதை தான் முன்னோர்கள், கற்றது கையளவுன்னு சொல்லிட்டுப் போனாங்க.
இதில், எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். அது குறித்து உங்களுக்குத் தெரிந்தது ஏதும் இருந்தால் சொல்லுங்கள், நானும் அறிந்து கொள்கிறேன்.
இன்றைய நவீன உலகில் நாம் மிகுந்த வேலைப்பளு மிக்கவர்களாக இருக்கிறோம். நமக்கு நமது வேலையை நினைவூட்ட இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது.
![]() |
Image Credit: Any.do |
இந்த விடயத்தில் உதவ பல செயலிகள் இருக்கின்றன. ஆனாலும் Any.do எனும் செயலி சற்று வித்தியாசமானது.
இப்போது நம்மில் வாட்ஸப் உபயோகிக்காதவர்களே கிடையாது எனும் நிலையில் உள்ளோம். அந்த வகையில், வாட்ஸப் ஊடாக இந்த நினைவூட்டல் செயலி செயற்படுகிறது.
![]() | |
|
அதாவது வாட்ஸப் செய்திகளுடன் இதுவும் ஒரு செய்தியாக நமக்கு காட்டிக் கொண்டிருக்கும். இதன் மூலம் நமது வேலை இன்னும் சுலபமாகிறது.
ஆனாலும் இதில் ஒரு சிக்கல். வாட்ஸப் மூலம் இந்த சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
பின்னே? எல்லாத்தையும் இலவசமா கொடுப்பாங்களா என்ன? என்றாலும் ஆன்ட்ராய்ட் தளத்தில் சாதாரண நினைவூட்டல் செயலியாக இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
நீங்களும் பயன்படுத்தி பாருங்க. உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html
நன்றி
ReplyDeleteமிக்க நன்றி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteஇந்த மாதிரி நினைவூட்டல் செயலிகள் நிறைய உண்டு. வாட்ஸப் வழி நினைவூட்டல் செயலி எனக்குப் புதியது.
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றி.
இன்னும் புதிய தகவல்கள் காத்திருக்கின்றன. தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Delete