Share it

Wednesday, 19 March 2014

டுவிட்டர் @newsigaram - 02


# உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளிப்படுத்தப்படாத கோபமும் பாசமும் பின்னர் வேறெப்போதும் பயனற்றது ; தேவையற்றது ; பாசாங்கானது.

# சிறிய துன்பங்களை மறக்கச் செய்வது பெரிய துன்பங்களே!

# கடந்த காலம் நமக்கு பாடமாய் இருக்க வேண்டும், பாரமாய் இருக்க கூடாது.

# உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்க ஒரே வழி, உலகத்தின் பின் நின்று கொள்வது தான்..!

# விவசாயம் பொய்த்துப்போன வயலினால் ஏற்படும் சோகத்தை 'வயலினால்' சொல்லிவிடமுடியாது!


# நெருங்கிய உறவினர்களினால் வரும் பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் கொடுமையானவை. மற்ற உறவுகளைக் காப்பாற்ற பெண் பொறுமை காக்கவேண்டியுள்ளது.

# நீண்ட இடைவெளிக்குப்பின் ஆற்றில் நீர் வந்தால் காய்ந்த மணல் உறிஞ்சிக்கொள்வது போலே உன்னை ஒரு பிரிவுக்குப்பின் பார்க்கையில் விழிகள் நனைகின்றன.

# இங்கு காணாமல் போன விமானம் ,கப்பல் ,ராக்கெட் எங்கே இருக்கு?னு மை போட்டுப்பார்த்து சொல்லப்படும் - கொல்லிமலை சித்தர்!

#


  Embedded image permalink
நியூசிலாந்து நாட்டில்.......

# கடவுளைத் தவிர வேறு எவரையும் எல்லா நேரத்திலும் நேசிக்க முடியாததுதான் மனிதனின் மகத்தான பலவீனம் -பபி.

#காதல் நோயை குணப்படுத்த,நீ மணம் புரிந்து கொள்...பின் என்றுமே நீ காதலிக்க விரும்ப மாட்டாய்..! #ஓஷோ

மீண்டும் சந்திப்போம்!
அன்புடன்,
சிகரம்பாரதி.

Thursday, 13 March 2014

மலேசிய விமானம் - தொடரும் மர்மங்கள்!

A woman writes a message of support and hope for the passengers of the missing Malaysia Airlines MH370 on a banner at Kuala Lumpur International Airport March 12, 2014. REUTERS/Damir Sagolj 
 
12 நாடுகளின் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் தீவிரத் தேடலில்...
 
அத்தனை பேரின் எண்ணங்களும் மார்ச் 08, 2014 அன்று காணாமல் போன மலேசிய விமானம் எங்கே என்பதில் தான். ஆறு நாட்கள் கடந்துவிட்டன. 239 பேரின் உறவுகள் கண்ணீரோடு காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ?

விபத்துக்குள்ளாகியிருக்கலாம், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம், கருந்துளைக்குள் சென்றிருக்கலாம், வேற்றுக்கிரக வாசிகளின் கைவரிசையாக இருக்கலாம் இப்படியாக பல்வேறு அனுமானங்கள். நாளாக நாளாக அனுமானங்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறதே தவிர விடை கிடைத்தபாடில்லை.

திருடப்பட்ட கடவுச்சீட்டுகளில் பயணித்த பயணிகளின் சிசிடிவி படங்கள் வெளிவந்துள்ளன. 
 
 மேலே நீங்கள் காண்பது போலிக் கடவுச் சீட்டின் மூலம் குறித்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் இருவரினதும் புகைப்படங்கள். ஈரானியப் பிரஜைகளான இவர்கள் இருவரும் தீவிரவாதிகள் இல்லை என இண்டர்போல் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பீஜிங் விமானநிலையத்தில், விமானங்களின் வருகையைக் காட்டும் அறிவிப்புப் பலகையில் மேலே சிவப்பு நிறத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான வருகை தாமதம் என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது.
முழு உலகமும் விமானம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் இறங்கியுள்ள நிலையில் நாமும் அதையே பின்பற்றுவோம். விமானம் தொடர்பில் "சிகரம்" தொடர்ந்தும் அவதானத்துடன்.....

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts