Posts

Showing posts with the label பாட்டுப் பெட்டி

ராஜா ராஜா தான்!

Image
இளையராஜா!  எப்போதுமே இசையின் ராஜா தான்.  அண்மையில் அவரது பிறந்த நாளின் போது வானொலியைக் கேட்க நேர்ந்தது.  அப்போது சில பாடல்களை கேட்டேன்.  என்ன சொல்ல?  ஆஹா.... சிறப்பு...  ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... இதயம் ஒரு கோவில்  என்ன சத்தம் இந்த நேரம்  குருவாயூரப்பா  பாடறியேன் படிப்பறியேன்  சொர்க்கமே என்றாலும்  தென்மதுரை வைகை நதி  கரகாட்டக்காரன்  இதெல்லாம் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.  இது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. கேட்டது இவ்வளவு தான்.  வருடம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  அப்படி ஒரு மாயவித்தை அந்த பாடல்களுக்குள் இருக்கிறது.  அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.  மீண்டும் சந்திப்போம்!

தேன்கிண்ணம் - பாட்டும் நானே...

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களோடு எனக்குப் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். பாடல்களுக்கு விளக்கம் ஏதுமில்லை. ஆயினும் இப்பட்டியலில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பின்னூட்டம் மூலம் கோடிட்டுக் காட்டுங்கள். உங்கள் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இருக்கட்டுமே? பட்டியல் இதோ: 01. பாட்டும் நானே... [ திருவிளையாடல் ] 02.  உள்ளத்தில் நல்ல உள்ளம் [ கர்ணன் ] 03. நீயும் நானுமா? [ கெளரவம் ] 04. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... [ பாபு ] 05.கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா [ தெய்வ மகன் ] 06. வாழ நினைத்தால் வாழலாம் [ பலே பாண்டியா ] 07. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... [ அவன்தான் மனிதன் ] 08. நான் பேச நினைப்பதெல்லாம் [ பாலும் பழமும் ] 09. பூங்காத்து திரும்புமா? [ முதல் மரியாதை ] 10. இசை கேட்டால் புவி அசைந்தாடும் [ தவப்புதல்வன் ] அன்புடன் சிகரம்பாரதி.

தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்களை மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. என் நெஞ்சம் தொட்ட காலத்தை வென்ற பாடலொன்றுடன் உங்களை சந்திக்கிறேன்.  நாம் தினமும் புதுப்புதுப் பாடல்களைக் கேட்கிறோம். அவற்றில் சில மனதைக் கவர்ந்தாலும் பழைய பாடல்கள் போல் மனதில் நீங்கா இடம்பெறுவதில்லை. சில பழைய பாடல்கள் நாம் முதல் முறை கேட்க நேரும்போது அது புது அனுபவம் தருவதாக அமைவதுண்டு. அப்படியானதோர் அனுபவத்தைத் தந்தது " ரோஜாவின் ராஜா " படப்பாடல்கள்.  கல்லூரி மாணவராக வரும் சிவாஜி கணேசனின் அருமையான நடிப்பை இப்பாடலில் காணலாம். பாடலுக்கான சந்தர்ப்பமானது இப்படி அமைகிறது. அனைத்துக் கல்லூரி கலைவிழா. இவரது கல்லூரி சார்பாக பங்கேற்கவேண்டிய மாணவர் வராததால் பலரும் கல்லூரியையும் கல்லூரி மாணவர்களையும் கேலி செய்ய மேடை ஏறுகிறார் சிவாஜி. கேலி செய்தவர்களை நோக்கி "சிரித்தது போதும் சிந்தியுங்கள்" என்று சொல்லி தொடங்குகிறார். கண்ணதாசனின் அருமையான வரிகளைக் கொண்டமைந்த பாடல். நடிகர் திலகத்தின் நடிப்பில் டி.எம்.எஸ் இன் கணீர் குரலில் அருமையாக வார்க்கப்பட்டிருக்கும் இப்பாடலை நீங்களும் ஒருமுறை ரசித்துப் பாருங்...

தேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......

Image
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். எத்தனை தான் புதிது புதிதாக பாடல்கள் வந்து கொண்டே இருந்தாலும் பழைய பாடல்கள் என்றால் அதற்கு நிகர் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் புதிய பாடல்களிலும் பல அருமையான பாடல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் எப்படியோ நான் அறியேன். ஆனால் நான் பழைய பாடல்களின் பரம ரசிகன். இந்தப் பதிவானது தமிழ்த் திரைப்படப் பாடல்களை ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேடிப்பார்க்கும் ஒரு பதிவாகும். கருப்பொருளாக பின்வரும் பாடலடிகளில் இருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா...... ஊரப்பா பெரியதப்பா..... உள்ளம் தான் சிறியதப்பா......"                                                                                   ...

துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!

Image
பெண்: துக்கமென்ன துயரமென்ன?                 எங்கிட்ட சொல்லு சொல்லு ....!                (துக்கமென்ன)                 கஷ்டமிந்த வாழ்க்கையில                 யாருக்கிங்கு இல்ல... இல்ல..?                ஒனக்கென நானிருக்க                எனக்கென நீயிருக்க                உள்ளுக்குள்ள வச்சு வெதும்பிட                வேணா எம் மாமா... எம் மாமா....                 (துக்கமென்ன) ஆண்:  சொந்தம் விட்டு மந்தையில                நின்ன கத சொல்லட்டுமா?                பெத்தவள வேதனையில்               ...