வாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். வாட்ஸப்! இன்று தொடுதிரைக் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் இணையவழிக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்ஸப்பையே பயன்படுத்துகின்றனர். வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், இமோ என பலப்பல செயலிகள் இருந்தாலும் அவற்றுள் வாட்ஸப்புக்கு என தனி இடம் உண்டு. எளிமை, வசதி குறைந்த கைப்பேசியிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை போன்ற பல காரணிகள் மக்கள் இதனை விரும்பக் காரணமாக அமைகின்றன. குரல் பதிவு, புகைப்படங்கள், ஆவணங்கள், குரல் மற்றும் காணொளி அழைப்பு (Video Call ) மற்றும் குறுஞ்செய்திகள் என அனைத்தையும் இதனூடாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. வாட்ஸப் ஒரு பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயனுள்ள விடயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றது. 'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் வாட்ஸப் குழு தமிழ் விரும்பும் நலன்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவாகும். இக்குழு கடந்த ஒரு மாதகாலமளவில் செயற்பட்டு வருகிறது. இக்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்தவர்க...