Posts

Showing posts with the label புதினம்

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

Image
வான வல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர்.  ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.  பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி.  https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html   வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை.  அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன்.  அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி.  அத்துடன் வானவல்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01

வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். "வானவல்லி" - நமது தோழர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் உருவான சரித்திரப் புதினம். பல தடைகளைத் தாண்டி வெற்றிவேலின் கன்னி நாவல் களம் கண்டிருக்கிறது. பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினங்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் 'வானவல்லி'யை வெளியிட்டதன் மூலம் தனிச் சிறப்பை இந்நூலுக்கு வழங்கியுள்ளது எனலாம். தமிழர்களின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பல நூறு புதினங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஆனால் கதை நிகழும் கால அடிப்படையில் புதினங்களை யாரும் வகைப்படுத்தவில்லை. இதை ஒரு பெருங் குறையாகவே நான் காண்கிறேன். வானவல்லி கி.மு. 175 இல் நிகழும் கதை என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆகவே வானவல்லியை முதல் தகவலாக இணைத்துக் கொண்டு புதினங்களை அவற்றின் கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சித்து வருகிறேன். இயன்ற நண்பர்கள் உதவுங்கள். 'வானவல்லி' கி.மு 175 இல் வாழ்ந்த கரிகால் வளவன் என்னும் சோழனின் வரலாற்றை புதினமாகப் படைத்துள்ளார் வெற்றி. இது வெற்றியின் முதல் புத்தகம்- முதல் புதினம். ஆனால் ஏனோ தானோவென்று எழுதாமல் தேர...

தமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை

வணக்கம் வலைத்தள வாசகர்களே! தமிழில் இதுவரை பல்வேறு வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை இப்பதிவு அக்கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 1895 முதல் வரலாற்றுப் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சுமார் 130 வருடகாலமாக வெளியிடப்பட்ட புதினங்களை கதைக்களத்தின் கால வரிசையில் வகைப்படுத்துவதே இப்பதிவாகும். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இத்தொகுப்பை மேலும் பயனுடையதாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்தத் தொகுப்புக்காக தகவல்களைத் தேடிய போது ஒரே கதை ஒவ்வொருவராலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆகவே முதலில் தமிழர்களின் சரித்திரத்தை யாரேனும் காலங்களினால் வகைப்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரலாற்றுப் புதினங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்போது தொகுப்பு உங்களுக்காக இங்கே: கி.மு 200 ( வானவல்லியை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலத்தை குறிப்பிடவில்லை) கரிகால் வளவன் -  சோழர்களின் வரல...