இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது. Image Credit: Its Respective Owners only. இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார். சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும். இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும...