Posts

Showing posts with the label வலைத் திரட்டி

வலை ஓலை - எழுத்தாணி - சொல்

Image
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின.  தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன்.  காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.  தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.  அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை....

வலை ஓலை - கனவு நனவாகுமா?

Image
தமிழ் வலையுலகில் எண்ணற்ற வலைப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவை அத்தனையையும் ஒன்றாய்க் கோர்த்து பூமாலை ஆக்குவதே வலைத் திரட்டிகளின் பணி. கடந்த காலங்களில் அந்த பணியை பல்வேறு கைகள் செய்துவந்தாலும், இப்போது மாலை கோர்க்க ஆளில்லாமல் பூக்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.  பதறியது எம் மனம். உதறினோம் தயக்கம். யார் யாரையோ எதிர்பார்ப்பதற்கு பதில் நாமே களத்தில் இறங்கி களப்பணி செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உருவானது வலை ஓலை   ஆரம்பித்து இரண்டு மாதங்களில் 27 வலைப்பூக்களையும், அந்த வலைப்பூக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கொண்டு ஆலம் விழுதாய் வேர்விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது நம் வலைத்திரட்டி.  நன்றிகள் எத்தனை சொன்னாலும், அத்தனைக்கும் ஈடாகாது உங்கள் அனைவரினதும் அன்பு. இந்த அன்பும் ஒத்துழைப்பும் அன்பும் என்றென்றும் தொடர வேண்டும் என்பதே எமது அவா.  ஆயிரமாயிரம் வலைப்பூக்களையும், இலட்சக்கணக்கான பதிவுகளையும் கொண்டு தலை சிறந்த வலைத்திரட்டியாய், வலை ஓலை உருவாக வேண்டும் என்பதே எமது அவா.  இந்த கனவு நிறைவேறுவதும், கனவாகவே கலைந்து போவதும் தங்...

பெப்ரவரி 29

Image
இன்று பெப்ரவரி 29ஆம் திகதி. லீப் வருட நாள். மீண்டும் 4 வருடங்களுக்குப் பின்னர் தான் இந்த நாள் வரும். இன்னும் இன்னோரன்ன சிறப்புகள் எல்லாம் இந்த நாளுக்கு சொல்லப்படுகின்றன.  சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு டூடில் வெளியிடும் கூகிளும் இன்றைய நாளுக்கு சிறப்பு டூடிலை வெளியிட்டிருக்கிறது.  ஆகவே, நாமளும் சும்மா இருந்தா நம்மள சமூகம் மதிக்காது என்பதால் நானும் இன்று பதிவு எழுதி விட்டேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நாள் முடியப்போகும் வேளையில் தான் பதிவை வெளியிட நேரிட்டிருக்கிறது.  'தமிழ்மணம்' வலைத்திரட்டி கடந்த சில காலமாக முறையாக செயல்படவில்லை. முன்னதாக, இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய வலைத் திரட்டிகள் காணாமல் போயிருந்தன. அந்த வரிசையில் எஞ்சியிருந்த தமிழ்மணமும் சேர்ந்து விட்டது.  அதன் பின்னர் அந்த இடத்தை நிரப்ப பல்வேறு இணையத்தளங்கள் முயன்ற போதும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.  ஆகவே, காலத்தின் தேவையுணர்ந்து நாம் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்காக உருவானது தான் ' வலை ஓலை ' வலைத் திரட்டி.  ' வலை ஓலை ' வலைத் திரட்டி குறித்த மேலதிகத் தகவ...