Posts

Showing posts from June, 2016

புதிய சொல் !

                    வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். இந்த இருபத்தொன்றாவது நூற்றாண்டு புதுமைகள் நிறைந்தது. தொழிநுட்பம், அறிவியல், சமூகம், இலக்கியம் என அனைத்திலும் நாள்தோறும் புதிய விடயங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய விடயம் குறித்து இன்று பேசவுள்ளோம். பேசலாம் வாங்க.                 "புதிய சொல்" - இலங்கையின் இலக்கியத்துறையில் புதுவரவாய் தடம்பதித்துள்ள ஓர் காலாண்டு சஞ்சிகை. யாழ் மண்ணைக் தளமாகக் கொண்டு இவ்வாண்டு (2016) ஜனவரி முதல் வெளிவரத்துவங்கியுள்ளது. காத்திரமான படைப்புகளுடன் களம் கண்டுள்ள "புதிய சொல்" தொடர்ந்தும் இதே பாதையில் தடம் மாறாமல் பயணிக்க வேண்டும்.                இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் சஞ்சிகைகளுக்கு முக்கியமான பங்குண்டு. தோன்றுவதும் பின் சுவடில்லாமல் மறைந்து போவதுமாய் பல்வேறு தமிழ் சஞ்சிகைகள் இலங்கையின் தமிழ் இலக்கியத்துறையில் வேரூன்ற முயற்சி செய்திருக்கின்றன. ஆனால் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றதென்னவோ ஒரு சில சஞ்சிகைகள் மட்டுமே. 'புதிய சொல்' வெற்றி பெறுமா என்பதை காலயந்திரத்திடம் த

அகவை பத்தில் சிகரம்!

                    வணக்கம் வாசகர்களே! உங்கள் அனைவரையும் வலைத்தளம் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தைத் துவங்கி ஜூன் முதலாம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. பதினோராம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் எண்ணங்கள் அனைத்தையும் செயலாக்கும் வல்லமை நமக்கு வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு முன்செல்வோம்.                     மிக நீண்ட நாட்களுக்குப் பின் வலைத்தளம் மூலமாக சந்திக்கிறோம். வாசிப்புக்கும் எனக்கும் இடையில் நேர்ந்த இடைவெளி வலைத்தளத்துடனும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. குறைந்தபட்சம் தினசரிகளைக் கூட வாசிக்க அவகாசம் இல்லாது போய்விட்டது. வாசிப்பின் வாசனை இல்லாமல் எழுத்துக்களுக்கு எம்மால் கட்டளை இடமுடியாது. ஐந்து மாதங்களுக்குப் பின் இன்று தான் நூலகம் சென்றேன். புத்தகங்களைக் கண்டதும் மனதினுள் அளவில்லா ஆனந்தம்.                    இனி குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு பதிவு அல்லது ஒரு மாதத்திற்கு மூன்றுக்கு குறையாத பதிவு இடவேண்டும். மாதத்தில் ஒரு முறையேனும் நூலகம் செல்ல வேண்டும். புத்தக வாசிப்பை அதிகரிக்க வ