Share it

Friday, 30 November 2012

முக நூல் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள் மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்:

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!


01. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.
ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே
ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு.

“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!

02. நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு
நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு
கொல்லுகின்ற துன்பம் ஒன்று வந்து விட்டால்
குலைந்தழுது ஒழிவாரோ என்றும் மாட்டார்
அல்லவர்தான் அழுது நிற்பார் அரற்றி நிற்பார்
அறிவுடைய நல்லவர்கள் தெளிந்தே நிற்பர்
புல்லர்களோ மண்குடம் போல் உடைந்தால் போச்சு
பொன்குடமே நல்லவர்கள் உடைந்தும் பொன்னே.

03. அரசியல் ஆத்திச்சூடி..!!
------------------------------
அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை சுருட்டு.,

இலவசம் குடு.,

ஈயையும் கட்சியில் சேர்.,

உண்மையை மறை.,

ஊழலை உலகமயமாக்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ஐந்து காலேஜாவது கட்டு.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,

ஓடி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,
ஃக்கு தப்பாய் மாட்டிக்காதே..!!

04.

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.


மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.


கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.


கணவன்: முட்டைப் பொரியல்?


மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.


கணவன்: பூரி?


மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.


கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?


மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.


கணவன்: மோர் குழம்பு?


மனைவி: வீட்ல மோர் இல்ல.


கணவன்: இட்லி சாம்பார்?


மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.


கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.


மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.


கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?


மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.


கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!


05. எனக்கு ஒரு பெரிய சந்தேகம்....

கல்யாணம் ஆன அப்புறம் எந்த ஒரு பொண்ணும் புருஷங்கிட்ட சொல்றாளுக

நான் யாரையுமே லவ் பண்ணதே இல்லனு....
அப்புறம் நம்மள்ள 90% பேர் தோல்வி அடையர
பொன்னுங்கள எவன் கட்டறான்...
இன்னுமா நம்புறானுங்க....
எவன் பொண்டாட்டியோ மாதவி
நம்ம பொண்டாட்டி சீதை...
இதானோ அது.....

ஒரே குயப்பமா இருக்கு....

நமக்கு வரப் போறவ எவன் கூட சுத்திட்டு இருக்களோ..
உங்க ஆளுதான்யா....

நன்றிகளுடன்.....
சிகரம்பாரதி.

Thursday, 29 November 2012

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!

வணக்கம் வாசக உள்ளங்களே! இன்று நாம் அடுத்த தலைமுறைக்கான அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம். இன்றைய அரசியலானது சாக்கடை அரசியல் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தநிலை மாறாதா என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் நம்மால் என்ன முடியும் என்கிற இயலாமை எண்ணம் காரணமாக வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக்கொள்கிறோம். வாக்குரிமை நம்கையில் இருக்கிற வரையில் நம்மால் அரசியலில் எதுவும் செய்ய முடியும். அதற்கு சமூகத்தின் ஒற்றுமையும் துணிச்சலும் தேவை. நமக்கான எதிர்கால அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொண்டால் விரைந்து செயலில் இறங்க வசதியாயிருக்கும் அல்லவா? பதிவில் தேவையான இடங்களில் பொருத்தமான திருக்குறள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

1.கல்வி அறிவு 
நம் அரசியல் வாதிகளில் பலருக்கு கல்வியறிவு என்பதே கிடையாது. இதனால் அமைச்சுப் பதவிகள், அரசாங்க சொத்துக்கள் மற்றும் மக்கள் வரிப்பணம் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல்வாதியொருவர் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிக்கும்போது அவரது கல்வித்தகைமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்படல் வேண்டும். அரசியல் வாதியொருவருக்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகைமை அரசினால் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.

இதற்கும் குறளுக்கும் என்ன தொடர்பு?

மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.
நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.
[பொருட்பால், அமைச்சு]

குறள் அப்படி மட்டுமில்ல, இப்படியும் சொல்கிறதே?

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
[பொருட்பால், இறைமாட்சி]

இது மட்டுமில்ல, இன்னும் இருக்கு.....

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
[பொருட்பால், அவை அறிதல்]

இப்போ புரிஞ்சுதா?

இன்னும் இருக்கு.... ஆனால் நேர நெருக்கீடு காரணமாக மிகுதியை நாளை பார்க்கலாம். அதுவரை உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்....

அன்புடன் 
சிகரம்பாரதி.

Wednesday, 28 November 2012

கற்பிழந்தவள்

கனவில் கூட 
கண்டதில்லை இப்படியொரு 
காட்சியை 
எண்ணியும் பார்க்கவில்லை 
எனக்கிப்படி நேருமென்று 
அன்பு காட்டி 
அரவணைத்த கை 
காமம் கொண்டு 
கட்டியணைக்கும் என்று 
பிறந்தநாள் பரிசாக - எனக்குப் 
பிடித்த ஆடையைப் 
பரிசாக அளித்தவரே - அதைப் 
பறித்து துச்சாதன வேடம் கொள்வாரென்று 

பள்ளிக்கூடம் சென்று வந்தேன் 
பல கலைகள் கற்றுவந்தேன் 
அனைவரிலும் 
அன்பு பாராட்டினேன் 
நல்லவர்கள் எல்லாம் 
நம்மோடு தான் இருக்கிறார்கள் என 
நம்பிக்கை கொண்டிருந்தேன் 

பொய்முகம் கொண்டிங்கு 
போலி வாழ்க்கை வாழ்வதேனோ 
சொந்தம் என்று உறவாடும் நீங்களே 
சுகம்தேடி எம்மேனி தொடலாமா 
சிறுமியர் நாங்கள் 
சிறுபாவமும் அறியாதவர்கள் 
உலகத்தை 
உங்கள் மூலம் 
அறிந்துகொள்ள 
ஆவலாய் இருந்தோம் 
ஆனால் நாங்கள் சுயமாகவே 
அறிந்துகொண்டோம் உங்கள் 
அனைவரின் முகத்திரைகளும் 
அகற்றப்பட்டதன் மூலம் 


கன்னித்தன்மை 
கொண்டவளைத்தான் 
கல்யாணம் செய்யவேண்டும் 
என்று 
எதிர்பார்க்கும் நீங்கள் 
எங்கள் 
கன்னித்தன்மையை 
களவாட முனைந்தது உங்கள் 
கயமைத்தனம் அல்லவா 

பிறந்தது முதல் 
இறப்பது வரை 
ஏதோவொரு சொந்தம் 
எம்முடன் வந்தவண்ணமே 
இருக்கிறது 
எல்லா சொந்தங்களையும் 
எம்மால் சந்தேகிக்க முடியாது 

சாதிக்க வேண்டும் நாங்கள் 
சிதைத்து விடாதீர்கள் 
வாழ்க்கையை வாழவேண்டும் 
வடுவாக்கி விடாதீர்கள் 
நாளை 
எல்லோரும் என்னைச் 
சொல்லலாம் 
"கற்பிழந்தவள்" என்று 
ஆனால் அவர்கள் 
அறிந்திருக்கமாட்டார்கள் 
பத்து வயதிலேயே - நான் 
பட்ட வேதனைகளை!


இக்கவிதை பாலியல் ரீதியாக உறவுகளாலேயே துன்புறுத்தப்பட்ட ஒரு பெண் குழந்தையின் குரலாக இங்கு பதியப்பட்டுள்ளது. இதற்கான தகுந்த பிரதிபலிப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
சிகரம்பாரதி. 

பதிவு வெளியிடப்பட்டது: 28 நவம்பர், 2012 
திருத்தப்பட்டது: 02 பெப்ரவரி , 2019 

இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான 'மெட்ரோ நியூஸ்' இன் வாரப் பதிப்பில் 'முத்திரைக் கவிதைகள்' பகுதியில் 01-02-2019 அன்று 'மெட்ரோ Plus - B 12' பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Tuesday, 27 November 2012

இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது!


வணக்கம் சொந்தங்களே! இன்று இலங்கையின் மிக முக்கியத்துவமானதும் வரலாற்றில் தடம் பதித்ததுமான முக்கிய நிகழ்வொன்று சீன மண்ணிலிருந்து இடம்பெற்றிருக்கிறது. சுப்ரீம் செட் வன் (Supreme Sat One) என்னும் இலங்கைக்கு சொந்தமான செய்மதி சீனாவிலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆம் திகதி ஏவப் படவிருந்த மேற்படி செய்மதி காலநிலை சீர்கேடு மற்றும் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இன்றைய தினம் ஏவப் பட்டுள்ளது.Supreme Sat (pvt) Ltd என்னும் நிறுவனம் இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபையுடனான ஒப்பந்தத்தின் பேரில் சீனாவின் China Greatwall Industry Corporation (CGWIC) உடன் இணைந்து சுப்ரீம் செட் வன் (Supreme Sat One) என்னும் செய்மதியை 2012.11.27 அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 03.45 மணியளவில் சீனாவின் Xichang Satellite Launch Centre இல் இருந்து Long March 3B/E Launch செய்மதித்தாங்கி மூலம் ஏவப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் உரிமையை விண்வெளியியல் பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ என்பவர் கொண்டுள்ளார். இலங்கை - சீன நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய இச் செய்மதி செயற்றிட்டத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் ஆவார்.

ஏவுதளம் 

உலகில் சொந்த செய்மதியைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் 45 வது நாடாகவும் தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 3 வது நாடாகவும் இலங்கை இணைந்துள்ளது. இந்த செயற்றிட்டத்தின் பெறுமதி இலங்கை ரூபாவில் சுமார் 320 மில்லியன்கள் ஆகும். இந்த செய்மதியைக் கட்டுப் படுத்துவதற்கான நிலையம் கண்டி பல்லேகலையில் அமைக்கப் படவுள்ளது. தற்போது தனது ஓடுபாதை இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் செய்மதியைத் தாங்கிய விண்கலம் அதனை அடைந்ததும் தன்னியக்க செயற்பாட்டில் செய்மதி நிலைநிறுத்தப்படும். இதனூடான தொலைத்தொடர்பாடல் சேவைகள் 2013 ஜூலை மாதமளவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

செய்மதி நிறுவப்படும் செயன்முறை 


15 வருட ஆயுள் கொண்ட இச்செயமதியின் மொத்த எடை 5100 கிலோவாகும். இதன் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறை நவீனமயப்படுத்தப்பட்டதும் மேம்பட்டதுமான சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கமுடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையை இது அடுத்த யுகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Picture shows during the signing of the agreement -
Wang Zhongmin (CGWIC), R.M. Manivannan
(SupremeSAT) and Eshana De Silva (BOI) with other officials.

தகவல்களும் படங்களும் : இணையம் 

Monday, 26 November 2012

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

பகுதி - 02

பகுதி - 06

பகுதி - 07

பகுதி - 08

 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 09/01

 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01   

      
                            ***********************************
 

பகுதி - 09/02

(நேற்றைய தொடர்ச்சி...........)
"ம்ம்............ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"

திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.  


"இல்ல" - மனம் குழப்பத்திலிருந்தாலும் குரலில் தீர்க்கம் சேர்த்து சொன்னேன். 
"ஏன்?"
"உன்னப் பத்தி ஒரு தகவலும் இல்லாம இருந்ததாலயும் பெத்தவங்களோட ஆசைய  நிறைவேத்தணும்னு நினைச்சதாலயும் தான் நந்தினிய கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன். இது விருப்பத்தோட எடுத்த முடிவு இல்ல. கட்டாயத்தின் பேர்ல எடுத்த முடிவு. ஆனா இப்போ உன்னை திரும்பவும் சந்திக்கக் கிடைச்சிருக்கு. அதனால நந்தினிய ஏத்துக்க எனக்கு முடியாது திவ்யா......"

"..............................."
"என்ன திவ்யா......? பேசாம இருக்க?"
"நந்தினிய வேணான்னு சொல்லப் போறீங்களா?"
"ஆமா...."
"இது நியாயமா?"
"ஏன்?"
"நிச்சயம் பண்ணிட்டு......."
"இப்பவே நாகரீகமா வேணான்னு சொல்லிரணும். இல்லாட்டி ஏதாவதொரு சந்தர்ப்பத்துல நானே உளறிடுவேன். அப்போ எல்லாருக்கும் மனக்கஷ்டம் ஆயிரும்."
"........................"
"திவ்யா....."
"இப்போ மட்டும்.........?"
"கஷ்டமாத்தான் இருக்கும். புரிஞ்சிப்பாங்கன்னு நெனைக்கிறேன்."
"நடக்குமா?"
"நம்பிக்கை இல்லையா"
".................."
"திவ்யா............"
"...................."
"என்ன..........? நம்பிக்கை இல்லையா?"
"பார்க்கலாம்.............."
"ஏன் அப்படி சொல்ற?"
"என்ன நடக்குதுன்னு பாக்கத்தானே வேணும்?"
"திவ்யா............"
"சொல்லுங்க........"
"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற.......?" - அவள் சொல்லப் போகும் பதில் எதுவாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விட்டிருந்தது. அவளின் பதிலை எதிர்பார்த்து கேள்விக்குறியோடு அவள் முகத்தை நோக்கினேன்.

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts