Monday, 19 November 2012

முக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15


என் நேசத்துக்குரிய பதிவுலக உள்ளங்கள் அனைவரும் நலமா? இன்னும் நலம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் உள்ளங்களே! நேற்று நான் இட்ட பதிவோடு எனது பதிவுகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும். ஆயினும் 50 என்பது சாதனை அல்ல. ஒரு எண்ணிக்கை மட்டுமே. அந்த 50 பதிவுகளில் வாசகர்களைக் கவர்ந்த பதிவுகள் எத்தனையோ? அத்தனையும் நீங்களே அறிவீர்கள். இதில் குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில் வாசகர்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்புமே என்னை இந்தளவு தூரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் மேலான ஆதரவை "சிகரம்" வலைப்பதிவு கோரி நிற்கிறது.


உலக அழிவு தொடர்பான வாக்குப் பெட்டி வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. மறக்காமல் உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுங்கள். முக நூலில் நான்: சிகரம்பாரதி. டுவிட்டரிலும்: சிகரம்.

முக நூலில் என்ன தான் பல்வேறு தீய விடயங்கள் காணப்பட்டாலும் ஆங்காங்கே சில நல்ல விடயங்கள் காணப்படுகின்றன. கடந்த தொகுப்பை விட இந்தத் தொகுப்பில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அருமையான சில புகைப்படங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. எனது முக நூல் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றிகள்.இது அதற்கான  தொகுப்பு. வாருங்கள் ரசிக்கலாம்.

1. நட்பு!
கடற்கரை மணலில் 
எழுதும் 
வெறும் எழுத்தல்ல.
இதய 
ஆழத்தில் குத்தப்படும் 
பச்சை.

2.

3.  இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசிப்பது குறைந்துவிட்டது; புத்தகங்களை யாரும் வாங்குகிறார்களில்லை போன்ற ஏக்கமான வார்த்தைகளை அடிக்கடி கேட்க முடிகிறது. 
ஆனால், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

வேகமாக, ஓய்வின்றி செயற்படவேண்டிய அவசர யுகம்தான் இது. ஆயினும், எங்களால் வாசிக்கமுடியவில்லையே என்று ஏங்குப் பலரின் பார்வையிலேயே 'வாசிப்பு குறைந்துவிட்டது' என்றொரு பிம்பம் விழுவதாக உணரமுடிகிறது. 

இன்றும் ஆற, அமர இருந்து புத்தகங்களை வாங்கி, வாசிக்கும் ஒரு தொகுதியினர் இருக்கவே செய்கிறார்கள்.

என்னதான் மின் புத்தகங்கள் வந்துவிட்டாலும், அச்சுத்தாள்களைக் கையில் வைத்து ரசித்து வாசிப்பதென்பது தனிச் சுகம்; இல்லையா? #Reading @Book

4.  எந்த ஒரு காயத்திற்கும் 
நட்பே மருந்தாகும் - ஆனால்
நட்பு ஏற்படுத்தும் 
காயத்திற்கு மருந்தே இல்லை.

5.

6. வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
தற்கொலை செய்து கொள்.
ஆனால்
தற்கொலை செய்து கொள்ளும் 
அளவிற்கு துணிவிருந்தால் 
வாழ்ந்து பார்.

7.

8.

9. வாழ்வில் நாம் நேசிப்பவர்களை நினைத்துக் கொண்டே, நம்மை நேசிப்பவர்களை அறிந்துகொள்ள மறந்து விடுகிறோம்...

10. வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு

புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...”

சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன

சுங் உணா செவோல்”

உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...

நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

முன்னைய தொகுப்பை ரசிக்க:
இன்னுமொரு முக்கியமான விடயம். இந்த வலைப்பதிவின் மேலே [MENU BAR] எனது "தூறல்கள்" வலைப்பதிவு மற்றும் எனது நண்பர்களின் வலைப்பதிவுகளான  "கவீதாவின் பக்கங்கள்" மற்றும் "வரிக்குதிரை" ஆகிய வலைப்பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் தங்கள் வாசிப்புக்குள் இணைத்துக்கொண்டு ஆதரவளிக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

12 comments:

 1. அருமையான தத்துவங்கள் அடங்கிய பகிர்வு.
  வாழ்த்துக்கள் பாரதி.

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை...

  மின்சார ராசி பலன் - அசத்தல்...

  ReplyDelete
 3. 50 பதிவுகள் இட்டது அறிந்து மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். விரைவில் பதிவில் சதம் எடுக்க வாழ்த்துக்கள்! தொகுத்துதந்தவை அனைத்தும் அருமை. அதுவும் மின்சார இராசி பலனை இரசித்தேன்!

  ReplyDelete
 4. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து பலதரப்பட்ட பதிவுகளை எழுதி பதிவுலகில் பலரையும் கவர மனமார்ந்த வாழ்த்துக்கள் கலக்குங்க

  ReplyDelete
 5. அருமையான பகிர்வுகள். நன்றி

  ReplyDelete
 6. அருமை, மின்சார ராசிபலனும், முதல் கவிதையும் அருமை...

  ReplyDelete
 7. வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
  தற்கொலை செய்து கொள்.
  ஆனால்
  தற்கொலை செய்து கொள்ளும்
  அளவிற்கு துணிவிருந்தால்
  வாழ்ந்து பார்.

  இது மிகவும் பிடிச்சிருக்கு பாரதி !

  ReplyDelete
 8. நட்புக்கான புதிய இலக்கணம் அழகிய கவிதை !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...