Friday, November 9, 2012

46/5

வணக்கம் வாசக உள்ளங்களே! எல்லோரும் நலமா? நலம் பெற வாழ்த்துக்கள். நமது தொடர் பதிவின் 5 ஆம் பதிவு இதோ....... நாளையும் அருமையான படைப்பு காத்திருக்கிறது. இன்றைய பதிவுக்குள் போகலாமா?

பயணம் - 10
இலங்கையின் பிரபல தமிழ் தனியார் வானொலியான வெற்றி வானொலியில் இடம்பெற்றுவரும் குளறுபடிகள் தொடர்பாக நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவைதொடர்பாக எமக்கு வாசிக்கக் கிடைத்த சில தகவல்களின் தொகுப்பு இங்கே:
[1] அலைவரிசை மாற்றங்களும் ஆட்டம் காணும் வானொலியும் - 

வெற்றி FM - அறிந்தும் அறியாமலும் சில.....
மேலதிகமாக வெற்றி வானொலியின் (முன்னாள்) பணிப்பாளர் லோஷன் தனது முக நூலில் பகிர்ந்துள்ள கருத்து இது:

முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தோன்றுகிறது.

நான்(ம்) வைத்த முற்றுப்புள்ளியை, விடாமல் தொடர முயற்சி எடுக்க உள்ள புதியவருக்கு வாழ்த்துக்கள்.
வெளியே இருந்து வேடிக்கை பார்க்க நான்(ம்) தயார். :))
ஆனால் என்ன " தண்ணீர் விட்டோ வளர்த்தோம் எம் வெற்றிப் பயிரை" ...

பொறுப்பாக, தனித்துவமாக, தரமாகப் பார்த்தது எப்படி ஆகப் போகுதோ என்ற ஒரே கவலை...
பெயரை மாற்றிவிட்டால் கொஞ்சம் ஆறுதல்...

ஆனால் ஒன்று அந்தப் பாதையில் தான் முற்றுப்புள்ளி...
இன்னும் பல பாதைகள் திறந்தே கிடக்கின்றன.

ஆனாலும் பதில் சொல்ல வேண்டியவர்கள் எனக்கும்/எமக்கும் பதில் சொல்லி, தரவேண்டியவற்றைத் தந்தே ஆகவேண்டும். அது நியாயத்தின், உழைப்பின் உரிமை.
அனைவரதும் தொடரும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. 

நான் சொல்வது - பொறுத்திருப்போம்..... காலம் பதில் சொல்லும்.

பயணம் - 11
டுவிட்டர் # twitter.com#
டுவிட்டரில் டுவீட்டப்பட்டவை சில......
சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமலும படிககலாம. உஙகளால இதைப படிகக முடிநதால இதை மீளகீசசவும்.

காதல் திருமணமென்றால் பெண்கள் கணவனை தங்களுக்குள்ளும், பிறர் முன்னும் மாற்றி மாற்றி அழைப்பது எவ்வளவு கஷ்டமானது. . .

எப்பொருள் யார் யார் ட்விட் படிப்பினும் அப்பொருள் எழுத்துப் பிழை காண்பது அறிவு!!!

மரத்தைக் கடவுள் என நம்பிய மனிதன் சக மனிதனையும் கடவுளென நம்பியிருந்தால் சாதிக்கொலைகள் இருக்காது.

நல்ல தாம்பத்தியத்துக்கு , கிடைக்கும் முதல் "நோ பல் பரிசு " // " குழந்தை ".

படிங்க.... ரசிங்க.... உங்க கருத்துக்கள சொல்லுங்க...... மீண்டும் நாளை 
46/6 பதிவின் மூலம் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து 
விடை பெறுவது உங்கள் அன்பு வலைப்பதிவர் சிகரம் பாரதி.

3 comments:

  1. ட்வீட் குரல் சூப்பர்.....
    லோசன் அண்ணா விரக்தியில் இருக்கிறார் போல......பின்ன இருக்காதா பழம் சாப்பிட்டு விதை போட்டு அதற்கு உரமிட்டு மரமாக்கியவர் அவர்தானே

    ReplyDelete
  2. நான் மெய் எழுத்து இல்லாமல் படித்து விட்டேன் நண்பா... நல்ல பதிவு, எனக்கு இலங்கை வானொலி பற்றிய அறிவு ஏதும் இல்லை... ஆதலால் நான் அது பற்றி ஏதும் பேச விரும்பவில்லை...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?