Wednesday, 28 November 2012

கற்பிழந்தவள்

கனவில் கூட 
கண்டதில்லை இப்படியொரு 
காட்சியை 
எண்ணியும் பார்க்கவில்லை 
எனக்கிப்படி நேருமென்று 
அன்பு காட்டி 
அரவணைத்த கை 
காமம் கொண்டு 
கட்டியணைக்கும் என்று 
பிறந்தநாள் பரிசாக - எனக்குப் 
பிடித்த ஆடையைப் 
பரிசாக அளித்தவரே - அதைப் 
பறித்து துச்சாதன வேடம் கொள்வாரென்று 

Child Wise information booklet

பள்ளிக்கூடம் சென்று வந்தேன் 
பல கலைகள் கற்றுவந்தேன் 
அனைவரிலும் 
அன்பு பாராட்டினேன் 
நல்லவர்கள் எல்லாம் 
நம்மோடு தான் இருக்கிறார்கள் என 
நம்பிக்கை கொண்டிருந்தேன் 


பொய்முகம் கொண்டிங்கு 
போலி வாழ்க்கை வாழ்வதேனோ 
சொந்தம் என்று உறவாடும் நீங்களே 
சுகம்தேடி எம்மேனி தொடலாமா 
சிறுமியர் நாங்கள் 
சிறுபாவமும் அறியாதவர்கள் 
உலகத்தை 
உங்கள் மூலம் 
அறிந்துகொள்ள 
ஆவலாய் இருந்தோம் 
ஆனால் நாங்கள் சுயமாகவே 
அறிந்துகொண்டோம் உங்கள் 
அனைவரின் முகத்திரைகளும் 
அகற்றப்பட்டதன் மூலம் 


கன்னித்தன்மை 
கொண்டவளைத்தான் 
கல்யாணம் செய்யவேண்டும் 
என்று 
எதிர்பார்க்கும் நீங்கள் 
எங்கள் 
கன்னித்தன்மையை 
களவாட முனைந்தது உங்கள் 
கயமைத்தனம் அல்லவா 


பிறந்தது முதல் 
இறப்பது வரை 
ஏதோவொரு சொந்தம் 
எம்முடன் வந்தவண்ணமே 
இருக்கிறது 
எல்லா சொந்தங்களையும் 
எம்மால் சந்தேகிக்க முடியாது 


சாதிக்க வேண்டும் நாங்கள் 
சிதைத்து விடாதீர்கள் 
வாழ்க்கையை வாழவேண்டும் 
வடுவாக்கி விடாதீர்கள் 
நாளை 
எல்லோரும் என்னைச் 
சொல்லலாம் 
"கற்பிழந்தவள்" என்று 
ஆனால் அவர்கள் 
அறிந்திருக்கமாட்டார்கள் 
பத்து வயதிலேயே - நான் 
பட்ட வேதனைகளை!


இக்கவிதை பாலியல் ரீதியாக உறவுகளாலேயே துன்புறுத்தப்பட்ட ஒரு பெண் குழந்தையின் குரலாக இங்கு பதியப்பட்டுள்ளது. இதற்கான தகுந்த பிரதிபலிப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
சிகரம்பாரதி.

8 comments:

 1. வலிமிகுந்த விடயம் மனிதம் தொலைந்து கிடக்கு

  தெரிந்தது சில தெரியாதது பல என பெண் குழந்தைகள் மீதான வன்முறையை ஒழிக்க முன்வரவேண்டும் ஒவ்வொருவரும் இல்லை என்றால் நாளைய தலைமுறை அழிந்துவிடும் அழுத்தமான படைப்பு நன்றி

  ReplyDelete
 2. அருமையான அறிவுறுத்தல் சிகரம் ... இதனை என் முக நூலிலும் பகிர்கிறேன்

  ReplyDelete
 3. நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய செய்தியைத் தாங்கள் பதிந்து பகிர்ந்தமைக்கு நன்றி.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 4. அன்பின் சிகரம் பாரதி - பாலியல் பலாத்காரத்தின் கொடுமைகளைப் பற்றிய கவிதை நன்று - படிக்கும் அனைவரும் கொடியவர்களத் திருத்த முயல் வேண்டும் - பாலியல் பலாத்காரத்தினை அடியோடு ஒழிக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete
 6. பொட்டிலடிக்கும் விதமாக அமைந்த வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...