அகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012
வணக்கம் அன்பான வாசகர்களே! தொடர் பதிவின் 10 ஆம் பதிவில் பயணம் - 16 இல் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இப்பதிவு என் மனதில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு கனவின் வெளிப்பாடாகும். தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற வலைப்பதிவர் ஒன்று கூடலைப் போல இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் வலைப்பதிவர்களை ஒன்றிணைத்து மாபெரும் நிகழ்வொன்றினை அரங்கேற்ற வேண்டும் என்பது என் அவா. இவ்விடயம் பற்றி இலங்கையின் இளம் வலைப்பதிவர் ஒருவரிடம் தமிழக நிகழ்வு இடம்பெற்றபோது Google+ மூலம் அரட்டை சேவை மூலம் உரையாடியிருந்தேன். அதன் போது அவர் நிகழ்வுக்கான விருப்பத்தினை வெளியிட்டதுடன் உரியவர்கள் ஒன்று சேர வேண்டுமே என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கை ஒரு சிறிய - சிங்கள நாடாக இருந்தாலும் தமிழ்த்துறை குறிப்பிடத் தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதில் வலைப் பதிவுத் துறை சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. சரியான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் நூறு அல்லது இருநூறைத் தாண்டிய எண்ணிக்கையிலான தமிழ் வலைப்பதிவர்கள் இலங்கையில் இருக்கக் கூடும் என்பது என் அபிப்பிராயம். இலங்கையில் வலைப்பதிவர்களுக்கிடையிலான தொடர்பாடல் தன்மை குறைவு என்பதால் இதன் சாத்தியப்பாடு யோசிக்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. தமிழகத்தில் பிரதேச வாரியாக வாராந்தம், மாதாந்தம் என ஒன்று கூடல்கள் நடக்கும் செய்திகளைக் கேள்விப்படும் போது நமது பிரதேசத்திலும் இப்படி ஒன்று நடக்காதா என்கிற ஏக்கம் என்னுள் எட்டிப் பார்க்கச் செய்வது வழமை. இலங்கை பதிவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து வலைப்பதிவர்களையும் ஒன்றிணைத்து ஒரு விழாவை இலங்கையில் நடத்த முடியுமானால் அதுவும் மகிழ்ச்சியே.
அன்பான இலங்கை மற்றும் உலகளாவிய வலைப்பதிவர்களே! இப்பதிவின் ஊடாக உங்களுக்கெல்லாம் ஒரு அன்பான அறைகூவலை விடுக்க விரும்புகிறேன். இந்த எளியவனின் கனவுக்கு வடிவம் கொடுக்க அலைகடலென திரண்டு வாரீர்! இந்த வருட இறுதிக்குள் இலங்கை வலைப்பதிவர்களை மட்டுமேனும் ஒன்றிணைத்து ஒரு சிறிய ஒன்றுகூடலையாயினும் நடத்திட இயலும் என எதிர்பார்க்கிறேன். என்னால் பண ரீதியான உதவிகளை செய்ய இயலாது. ஆனால் நிர்ணயிக்கப் பட்ட ஒரு கட்டணத் தொகை அறிவிக்கப் படுமானால் அதனை செலுத்த தயாராக இருக்கிறேன். இலங்கையின் முன்னணி வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து செயற்குழு ஒன்றை அமைத்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் ஆதரவு தர நான் தயாராக இருக்கிறேன். நீங்கள்?????
எனது இப்பதிவு தொடர்பான ஆரோக்கியமான பின்னூட்டங்களை வரவேற்கிறேன். மேலும் இந்த ஒன்றுகூடலுக்கான ஆதரவினையும் பின்னூட்டம் மூலமாக நீங்கள் தெரிவிக்க முடியும். பார்க்கலாம்..... எத்தனை கைகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உயர்கின்றன என்று......
1
2
3
4
5
........................................................................???????
"அகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012" என்னும் எண்ணக்கருவிற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். "கனவு மெய்ப்பட வேண்டும்". அன்று பாரதி சொன்னது. இன்று எனக்கு....
மீண்டும் நாளை சந்திப்போம். அதுவரை......
அன்புடன்,
சிகரம்பாரதி.
பண்ணிரலாம்.. சிறிய அளவில பேச்சு போய் கொண்டு தான் இருக்கு.. நான் அன்னிக்கே கொஞ்சம் பின் வாங்க காரணம் நீங்க சொல்லி இருப்பதை போல பிரமாண்டமாக ஒரு சந்திப்பை வைக்க வேண்டுமானால் கண்டிப்பாக சில விடயங்கள் கவனிக்க பட வேண்டும் முதலில்
ReplyDelete1. எல்லா இலங்கை பதிவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் (திரட்டியில் இருப்பவர், இல்லாதவர் என)
2. மேலும் பலர் இலங்கை பதிவர்களாக இருந்த போதும் வெளிநாடுகளில் இருந்து பதிவெழுதும் இலங்கை நண்பர்களே அதிகம். இலங்கை என்ற ரீதியில் அவரை மதித்து குறைந்தது அழைப்பாவது கொடுத்து அவரை மகிழ்விக்க வேண்டும். ஆகவே முழு தகவல் அடங்கிய ஒரு நபர் அவசியம். (மதி சுதா அண்ணாவின் திரட்டியில் இருந்தாலும் எல்லாரும் இல்லை என்றே நினைக்கிறேன்)
3. எல்லாரையும் தெரிந்த, எல்லாருக்கும் பொதுவான (குறைந்தது 60% ஆவது) ஒருவர் தலைமை தாங்க வேண்டும். சந்திப்பை குறித்த ஒன்று கூடலில்.. பின் பதிவர் சந்திப்பு குழுவை பிரித்து கொள்ளலாம்.
4. வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவளைக்கு பட்சத்தில் அவர்களுக்குரிய வசதிகள் செய்ய பட வேண்டும்.
இன்னும் இருக்கு சகோ.. இவை பிரதானமாக கருதுகிறேன். இவை நடை பெறும் பட்சத்தில் கண்டிப்பாக ஆட்கள் பலத்தோடு அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.
இலங்கை சிறிய நாடு ஆனால், சிங்கள் நாடு மட்டுமில்லை தமிழர்களின் நாடும் அங்குள்ளதே. தமிழ் பதிவர் ஒன்றுகூடல் நடத்த வாழ்த்துகள். இந்தியாவுக்கு வெளியே தமிழர் மிகுதியாக வாழும் இலங்கை, மலேசியாவில் பதிவர் ஒன்றுகூடல்கள் நடத்தப்படல் வேண்டும்
ReplyDeleteபதிவர்கள விரைவில் ஒன்று கூடி ஓர் அமைப்பை உருவாக்க வாழ்த்துகிறேன்!
ReplyDeleteநிச்சயமாக முன்னெடுக்கவேண்டிய நிகழ்வு. செயற்படுத்துங்கள். முடிந்தவர்கள் உதவி செய்வார்கள் என நினைக்கிறேன். எந்த ஒரு நிலையிலும் விலைபோகாத நிலையில் நின்று முன்னெடுக்கவும் இக்பால் அண்ணன் சொன்னது போல , இலங்கை சிறிய நாடு ஆனால், சிங்கள் நாடு மட்டுமில்லை தமிழர்களின் நாடும் அங்குள்ளதே.என்ற நினைவோடு அடுத்த கட்டத்துக்கு நகருங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎமக்கும் அழைப்பு உண்டல்லவா? கண்டிப்பாக செய்யுங்கள் .எமது வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇலங்கை தமிசர்களின் நாடும் கூட .முயற்சி திருவினை ஆக்கும் .
வணக்கம் பாஸ் எனக்கும் நீண்டநாட்களாக மனதில் இருக்கும் ஆதங்கம்+ஆசை இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் பட்சத்தில் என் ஆதரவு நிச்சயம் உண்டு
ReplyDeleteவிரைவில் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்...
ReplyDeleteஉங்கள் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேற என் வாழ்த்துகள்.
ReplyDeleteசிகரம் பாரதி அவர்களுக்கு நல்ல ஆதங்கம். சிறப்பாக நிறைவேற என் வாழ்த்துக்கள்.
ReplyDelete//இலங்கை ஒரு சிறிய - சிங்கள நாடாக இருந்தாலும்//
இப்படி எழுதுவது தான் மனசுக்கு சங்கடமாக உள்ள்து. இன்னமும் சிங்கள நாடாகவில்லை