புரட்டாத பக்கங்கள்....... - 46/11
வணக்கம் அன்பான உள்ளங்களே! மீண்டும் ஒரு இனிய நாளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. வரும் நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் வழங்க வேண்டிக்கொண்டு பதிவுக்குள் நுழைகிறேன்.
பயணம்-17
பயணம்-17
அகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012
இலங்கையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடொன்று நடத்தப்பட வேண்டும் என்ற எனது அவாவை நேற்று பதிவாக இட்டபோது எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், மாநாடொன்றை நடத்துவதற்கான ஆதரவைப் பெற இன்னும் பயணிக்க வேண்டும் போல் தெரிகிறது. பார்க்கலாம். இன்னும் தொடர்ச்சியான ஆதரவை வரும் பதிவுகளில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன். வலைப்பதிவர் ஹாரி வழங்கிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. நன்றி ஹாரி. இன்னும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தெரிவித்த இக்பால் செல்வன், புலவர் சா இராமாநுசம், நெற்கொழுதாசன், கரிகாலன், கே.எஸ்.எஸ்.ராஜா, திண்டுக்கல் தனபாலன் மற்றும் எழில் ஆகிய வலைப்பதிவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன். மேலும் ஆதரவு தர விரும்புபவர்களையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.
பயணம்-17 இன் தலைப்பினை சொடுக்குவதன் மூலம் நேற்றைய பதிவினை படித்து உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்ய முடியும். இது வெறும் பதிவு மட்டுமோ அல்லது சுய விளம்பரம் தேடுவதற்கானதோ அல்ல. இலங்கையின் மற்றும் உலகளாவிய தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் இலங்கை மண்ணில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்துடனான பதிவு. ஆகவே உங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்கிடுங்கள். பதிவு செயலாக்கம் பெற்று இனிய நன்னாளில் களம் காணட்டும்!
பயணம்-18
டுவீட்டுராங்கப்பா டுவீட்டுராங்க............
46/5 பதிவில் தொகுத்து வழங்கியதைப் போன்று இன்றும் டுவிட்டரில் இருந்து சுட்டவை சில உங்களுக்காக.......
#இந்த பவர் கட்லயும் இருள் விலகி ஒளி பிறக்கட்டும்னு வாழ்த்துறவங்க தன்னம்பிக்கைய கண்டு நான் விம்மி போறேன்!
#இன்னைக்கு ராத்திரி சூரிய கிரகணம் வருதாம்! #நான்சென்ஸ்! ராத்திரில வந்தா எப்படி பாக்குறதாம்! பகல்ல வரச் சொல்லு மேன்!
#ட்விட்டர்ல அகௌண்ட் வச்சதே நம்ம ட்வீட்ட ஒரு நூறு பேரு RT பண்ணுவாய்ங்க, ஒரு நாலாயிரம் பேர் நம்மள follow பண்ணுவாங்கங்கற ஒரு நம்பிக்கைலதான்!
#யூ பி எஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக அதிகரிப்பு! ஆகவே மின்பற்றாக்குறையும் கணிசமாக அதிகரிப்பு! #பொதுஅறிவு
#பொறுமை கரண்ட்டைக் காட்டிலும் பெரிது : எதிர்கால பழமொழி
#வேலையிலிருந்து ரிட்டையர்டானவரிடமும், காதலில் இருந்து ரிட்டையர்டானவரிடமும் கேட்க ஆயிரம் கதைகளுண்டு, காது கொடுக்க தான் நேரமில்லை.!
#பார்த்த உடனே பிடிக்கும் பசங்களுக்கும் பார்க்க பார்க்க பிடிக்கும் பசங்களுக்கும் இடையே வாழுகிறார்கள் பிடித்தாலும் பார்க்காத பெண்கள்
#கேப்படனும் அர்ஜூனும் ரிட்டையர்டான இக்கட்டான நேரத்தில் நாட்டை காப்பாற்ற களமிறங்கிய விஜய்க்கும், சூர்யாவுக்கும் கோடானு கோடி நன்றிகள்
#எந்த பணக்காரனும் சாதி சண்டை போடுவதில்லை.. பணம் அங்கே சமரசதிற்க்கான வழியாக போய்விடுகிறது. அடித்து சாவது ஏழை தான்...
#சலுகை வெறு திணித்தலை எதிர் மிரட்டலைச் சந்தி அடங்க மறு திமிறு திமிறு மூச்சு என்பது உரிமைக்குப் பிறகு - அறிவுமதி
#சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும். - Martin luther king.
#”சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பது அசெளகரியம்”-சுகுமாரன்... என் வாழ்வில் மிகவும் யோசிக்க வைத்த வரிகள்.
#அதிகாரத்தை கேள்வி கேட்க வக்கற்று கிடக்கும் சமுதாயத்தில், சுதந்திரம் நோயுற்ற நாயை போல சுருண்டு கிடக்கும்.
#பொதுமக்கள் அரசியல் பேசுவதை டீக்கடையோட நிறுத்திக்கணும்..இணையத்தில் பேசும்போது நீங்கள் குற்றவாளியாக கணக்கெடுக்கப்படுவீர்கள்.
#விரும்பியும் ஏற்கவில்லை வெறுத்தும் ஒதுக்கவில்லை. இவ்வாறாகவே தொடர்கிறது தனிமைக்கும் எனக்குமான பந்தம்
மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே! உலக அழிவு தொடர்பான வாக்கெடுப்புப் பட்டி வலது பக்கம் இணைக்கப் பட்டுள்ளது. உங்கள் பொன்னான வாக்குகளையும் வழங்குங்க.... முகநூல் பக்க இணைப்பு இடது பக்கம் உள்ளது. இணைந்து கொள்ளுங்கள். டுவிட்டரிலும் நான்: சிகரம் @newsigaram
அன்புடன்,
சிகரம்பாரதி.
இலங்கை பதிவர்கள் கூடலுக்கு வாழ்த்துகள்... தேர்ந்தெடுத்த டுவீட்டுகள் அனைத்தும் சிறப்பு...
ReplyDeleteசிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பது அசெளகரியம்”
இது சூப்பர்
இலங்கைப் பதிவர்கள் சந்திக்கிறார்களா...நல்ல விஷயம்.மகிழ்ச்சியும் கூட. வாழ்த்துகள் !
ReplyDeleteட்டுவிட்ட்ர்கள் எல்லாமே சிறப்பு.தேடலுக்குப் பாராட்டுக்கள் பாரதி !
டுவீட்டுகள் செம... சில உண்மைகள்...
ReplyDeleteஉலக அழிவு - வாக்களித்து விட்டேன்...
நன்றி...