Share it

Monday, 7 May 2018

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

பிக் பாஸ்! இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்திருந்தது பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதல் பருவம் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. எந்தளவுக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்ததோ அந்த அளவுக்குச் சற்றும் குறையாமல் பரபரப்பாகவும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முதலாம் பருவம் நடந்து முடிந்தது. 

பிக் பாஸ் முதலாம் பருவத்தின் வெற்றியாளர் பட்டத்தை ஆரவ் தட்டிச் சென்றிருந்தாலும் மக்களின் மனதை ஓவியா வென்றெடுத்திருந்தார். 14 பிரபலங்கள், 30 ஒளிப்பதிவுக் கருவிகள், 100 நாட்கள் என்ற கருப்பொருளுடன் 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்ற தாரக மந்திரத்துடன் முதலாம் பருவம் ஒளிபரப்பானது. 

முதலாம் பருவத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் மூலம் விஜய் தொலைக்காட்சி அதிகளவான ரசிகர்களை ஈர்த்திருந்தது. பிக் பாஸ் தமிழின் அடுத்த பருவம் எப்போது ஒளிபரப்பாகும் என ஒவ்வொரு ரசிகரும் ஆவலோடு காத்திருந்தனர். இதோ அந்தத் தருணம் வந்து விட்டது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது ஆர்யாவா இல்லை சூர்யாவா அல்லது விஜய்யா என்றெல்லாம் இதுவரை பல வாதங்கள் இணைய உலகில் இடம்பெற்று வந்தன. அவற்றுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.
ஆம். ஜூன் மாதம் நடுப்பகுதி அளவில் பிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்முறையும் நடிகரும் அரசியல் வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் ஹிந்தி கலர்ஸ் என்னும் அலைவரிசையில் கடந்த பதினோரு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வருடம் பிப்ரவரி 19 ஆம் திகதி கலர்ஸ் தமிழ் அலைவரிசை தனது ஒளிபரப்பைத் துவங்கிய நிலையில் பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்தையும் ஒளிபரப்பு செய்யவிருக்கிறது. 

பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்திற்கான முன்னோட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்ற வண்ணமுள்ளது. பிக் பாஸ் இன் ஒவ்வொரு பருவத்திற்கும் வீட்டின் அமைப்பு புதிதாக அமைக்கப்படும். இம்முறை வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. அதைவிட போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் எப்போது துவங்கும்? போட்டியாளர்கள் யார் யார்? பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை யோசித்தபடி இருங்கள். விரைவில் விடைகளுடன் நாங்கள் உங்களைத் தேடி வருகிறோம். அதுவரை காத்திருங்கள்!

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

பிக் பாஸ்!

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்தமிழ்2 #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #KamalHassan #VijayTV #StarVijayTV 

2 comments:

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/

    ReplyDelete
  2. ஓவியாவுக்காகத்தான் முதல் பாகம் ஹிட் அடிச்சது. அவர் அகன்றபின் ரொம்ப போரடிச்சது. பார்ப்போம் இரண்டாம் பாகத்தை..

    ReplyDelete

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts