ஐ.பி.எல் - சென்னைக்கு 100வது வெற்றி!

நேற்று (ஏப். 30) இடம்பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்-2018 இன் 30வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் தனது 100வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது சென்னை அணி. இதன் மூலம் புதிய சாதனைப் பட்டியலில் சென்னை அணியும் இணைந்துள்ளது.

இந்த வெற்றியுடன் இவ்வாண்டு ஐ.பி.எல்-லின் புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.நேற்றைய போட்டியில் சென்னையை எதிர்த்து மோதிய டெல்லி அணி கடைசி இடத்திலேயே தொடர்ந்தும் உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சார்பில் ஷேன் வாட்சன் 78, அம்பதி ராயுடு 41 என விளாசித் தள்ள இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி தோனி 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். டெல்லி அணியின் சார்பில் ரிஷப் பண்ட் 79 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார். விஜய் ஷங்கர் இறுதி வரை போராடி 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதும் அவரால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை.



ஷேன் வாட்சன் ஆட்ட நாயகன் விருத்தைப் பெற்றுக்கொண்டார்.

தற்போதைய புள்ளிப் பட்டியல் 

சென்னை சூப்பர் கிங்ஸ் - 12
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 12
கிங்ஸ் இலவன் பஞ்சாப் - 10
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 08
ராஜஸ்தான் ராயல்ஸ் - 06
மும்பை இந்தியன்ஸ் - 04
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 04
டெல்லி டேர்டெவில்ஸ் - 04

ஐ.பி.எல் 2018 - சாதனைப் பட்டியல்

அதிகூடிய ஓட்டங்கள் - அம்பதி ராயுடு - 370

அதிகூடிய ஆறு ஓட்டங்கள் - கிறிஸ் கெயில் - 23

அதிகூடிய தனிநபர் ஓட்டங்கள் - ஷேன் வாட்சன் - 106

அதிகூடிய விக்கெட்டுகள் - சித்தார்த் கவுல் - 11

#ஐபிஎல் #ஐபிஎல்2018 #IPL #IPL2018 #VIVOIPL #SIGARAM #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!