நுட்பம் - தொழிநுட்பம் - 03

'மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது' என்கிற வார்த்தை தொழிநுட்ப உலகிற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும். தொழிநுட்ப உலகின் மீது பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டாலும் தீர்வுகளை நோக்கி நிதானமாக நகர்ந்து வருகிறது தொழிநுட்ப உலகம். தற்போது தொழிநுட்ப உலகில் நடைபெற்று வரும் மாற்றங்களின் தொகுப்பே இப்பதிவு. வாங்க போகலாம். 

விசா அட்டையின் புதிய அம்சம் 
விசா அட்டை (Visa Card) என்றாலே அனைவருக்கும் தெரியும். கடனட்டை, வரவட்டை இரண்டையும் விநியோகிப்பதில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் தான் விசா. இந்த விசா அட்டையில் தற்போது Pay Wave என்னும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



நீங்கள் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது POS என்னும் இயந்திரத்தில் உங்கள் அட்டையை தேய்ப்பார்கள். அதன் பின்னரே உங்கள் பணம் விற்பனையாளருக்குச் சென்று சேரும். இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ததும் POS இயந்திரத்திற்கு அருகில் உங்கள் அட்டையை காட்டினால் போதும். உங்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டு விடும். எப்பூடி?

கூகுளின் goo.gl சேவைக்கு மூடு விழா!
கூகுளின் goo.gl சேவை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது இணையத்தள முகவரிகளை சுருக்கித்தரும் ஒரு சேவை ஆகும். எவ்வளவு பெரிய முகவரியையும் சுருக்கித் தந்து விடும் இந்த சேவை. 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவைக்கு 2018 ஏப்ரலுடன் மூடுவிழா நடத்தியிருக்கிறது கூகுள். 



ஏற்கனவே நீங்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி சுருக்கிப் பெற்ற முகவரிகளை தொடர்ந்தும் பயன்படுத்தலாம். கூகுள் goo.gl சேவைக்கு பதிலாக Firebase Dynamic Links (FDL) சேவையை துவங்கியுள்ளது. இது தொழிநுட்ப உலகில் புதிய மாற்றங்களை வழங்கும் என நம்பப்படுகிறது. 

வாட்ஸப் இலக்கத்தை மாற்றினால் தன்னியக்க அறிவிப்பு.
வாட்ஸப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நம் மத்தியில் வாட்ஸப் பாவனை அதிகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில் வாட்ஸாப்பும் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 



அதில் ஒன்று தான் நீங்கள் உங்கள் வாட்ஸப் இலக்கத்தை மாற்றினால் அது பற்றிய அறிவிப்பை உங்கள் நண்பர்களுக்குத் தன்னியக்கமாகவே வழங்குவது. இந்த வசதியை செயற்படுத்த Whatsapp Settings > Account > Change Number என்னும் வசதியைத் தெரிவு செய்து Next இனை சொடுக்குங்கள். பிறகு உங்கள் பழைய தொலைபேசி இலக்கத்தையும் புதிய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து Next இனை மீண்டும் சொடுக்குங்கள். பின்பு நீங்கள் இலக்கம் மாற்றியது குறித்த அறிவிப்பை யார் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யுங்கள். All Contacts, Contacts I Have Chats With மற்றும் Custom ஆகிய தெரிவுகள் உள்ளன. இவற்றில் நீங்கள் விரும்பும் தெரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

வருகிறது விண்டோஸ் XP 2018 பதிப்பு!
கணினி என்றால் அதில் விண்டோஸ் இருந்தாக வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தான் அன்றும் இன்றும் கணினிகளை இயக்கி வருகிறது. அதிலும் விண்டோஸ் இயங்கு தளத்தில் எத்தனை பதிப்புகள் வெளியானாலும் விண்டோஸ் XP தான் இன்னமும் உலகின் பல கணினிகளை இயக்கி வருகிறது. விண்டோஸ் XP இயங்குதளம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றன. 



தற்போது விண்டோஸ் XP இயங்குதளத்தினை மீளப் புதுப்பிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. வின்டோஸ் XP இயங்குதளத்தில் காணப்படும் காலத்துக்கு ஒவ்வாத வசதிகளை நீக்கி விட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஆனாலும் விண்டோஸ் XPயின் தோற்றம் உள்ளிட்ட முக்கிய வசதிகள் அப்படியே தான் இருக்கும். புதிய பதிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 

#சிகரம் #தொழிநுட்பம் #மைக்ரோசாப்ட்ஆபிஸ் #எக்ஸியோமி #வாட்ஸப் #SIGARAM #MSOFFICE2019 #XIAOMI #MI6 #WHATSAPP #TECHSIGARAM

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!