நல்லவர் யார்? கெட்டவர் யார்? பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02

'நல்லவர் யார்? கெட்டவர் யார்?' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் தமிழ் முதலாம் பருவத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பருவம் விரைவில் துவங்கவுள்ளது. உலக அளவில் பிக் பிரதர் என்னும் பெயரில் நடந்து வரும் நிகழ்ச்சி இந்தியாவில் பிக் பாஸ் என்னும் பெயரில் அறிமுகமானது. ஹிந்தியில் பதினோரு பருவங்களை இந்நிகழ்ச்சி கடந்துள்ளது. 



பிக் பாஸ் தமிழில் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மொத்தமாக பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றினர். ஆரவ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான ஜூலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். 

"நல்லவர் யார்? கெட்டவர் யார்? பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02" முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) உங்களுக்காக இதோ: 




பிக்பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்தில் யார் யார் பங்குபற்றுவார்கள் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. எனினும் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் கடந்த வருடம் போலவே 30 ஒளிப்பதிவுக் கருவிகள், 14 போட்டியாளர்கள், 100 நாட்கள் - ஒரே வீட்டில் என்னும் எண்ணக்கருவின் அடிப்படையிலேயே இந்நிகழ்ச்சி நடைபெறும். 

தொலைக்காட்சித் தொடர்கள் என்றால் அது சன் தொலைக்காட்சி தான். அதே போல மெய்நிகர் நிகழ்ச்சிகள் (Reality Shows) என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் வன் போன்ற நிகழ்ச்சிகள் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. 




ஜூன் மாதம் 03 ஆம் திகதி அல்லது 17ஆம் திகதி நிகழ்ச்சி ஆரம்பமாகும் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அடுத்த மாதம் ஆரம்பம் என்பது உறுதி. என்ன, பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போகலாமா? இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருங்கள்... 

நல்லவர் யார்? கெட்டவர் யார்? பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02 

விரைவில்...

#பிக்பாஸ்2 #BiggBossTamil2 #BiggBoss2 #BiggBossSeason2 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #VivoBiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #பிக்பாஸ்தமிழ்2


Comments

  1. ஓவியாவுக்காக முதல் பாகம் ஹிட் அடிச்சது. இது ஹிட் அடிக்குமான்னு பார்க்கலாம்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!